பணம் | மூன்றாம் பருவம் அலகு 5 | 3 ஆம் வகுப்பு கணக்கு - ரூபாயும் பைசாவும் | 3rd Maths : Term 3 Unit 5 : Money
அலகு 5
பணம்
ரூபாயும் பைசாவும்
முந்தைய வகுப்பில் பல்வேறு ரூபாய் மதிப்பிலான தாள்களைப் பற்றியும் சில்லறைகளைப் பற்றியும் கற்றோம். இந்த வகுப்பில் நாம் ரூபாய், பைசாவிற்கான உறவினையும் பணத்தைக் கொண்டு கூட்டல், கழித்தலையும் பற்றிக் கற்போம். மேலும் ரசீது (பற்றுச் சீட்டினை) சேகரித்தலையும் உருவாக்குதலையும் பற்றிக் கற்றுக் கொள்வோம்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள நாணயங்கள் பழமையானவை அவை தற்போது பயன்பாட்டில் இல்லை. ஆனால் பைசாவின் மதிப்புப் புள்ளிகள் குறிப்பேடுகளில் இன்றும் பயன்படுத்தப்படுகிறது. எனவே பைசாவின் மதிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.
இப்போது பைசாவை ரூபாயாக மாற்றுவதைப் பற்றிக் கற்போம்.
1 ரூபாய் = 100 பைசா
2 ரூபாய் = 2 × 100
= 200 பைசா
5 ரூபாய் = 5 × 100 பைசா
= 500 பைசா
1. பின்வரும் ரூபாயைப் பைசாவாக மாற்றவும்.
தெரிந்து கொள்வோம்