Home | 12 ஆம் வகுப்பு | 12வது வரலாறு | நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

வரலாறு - நவீன உலகம்: பகுத்தறிவின் காலம் | 12th History : Chapter 10 : Modern World: The Age of Reason

12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 10 : நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

பதினைந்து மற்றும் பதினாறாம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்த மூன்று பெரும் நிகழ்வுகளாக மறுமலர்ச்சி, புவியியல் கண்டுபிடிப்புகள், சீர்திருத்த இயக்கங்களின் தோற்றம் ஆகிய மூன்று முக்கிய நிகழ்வுகளைக் குறிப்பிடலாம்.



கற்றலின் நோக்கங்கள்

கீழ்க்கண்டவற்றைப் பற்றி அறிந்துகொள்ளல்

 

• இத்தாலிய மறுமலர்ச்சி மற்றும் மேற்கத்திய ஐரோப்பாவுக்கு அதன் பரவல்

• புதிய நிலப்பரப்பையும் கடல் வழித்தடங்களையும் கண்டுபிடித்தல்

• வர்த்தகப் புரட்சியும் அதன் தாக்கமும்

• பிராட்டஸ்டன்ட் சீர்திருத்தம் மற்றும் கத்தோலிக்க எதிர் சீர்திருத்தம்

• மேற்கு ஐரோப்பாவில் முடியாட்சிகளின் எழுச்சியும் தேசிய அரசுகளின் தோற்றமும்

 

அறிமுகம்

பதினைந்து மற்றும் பதினாறாம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்த மூன்று பெரும் நிகழ்வுகளாக மறுமலர்ச்சி, புவியியல் கண்டுபிடிப்புகள், சீர்திருத்த இயக்கங்களின் தோற்றம் ஆகிய மூன்று முக்கிய நிகழ்வுகளைக் குறிப்பிடலாம். இவை இடைக்காலம் தொடங்கி நவீனகாலம் வரையிலான மாற்றங்களைக் குறிக்கும் விதமாக அமைந்தன. மறுமலர்ச்சியின் சாரம் மனிதர்களுக்கும் இயற்கைக்கும் முக்கியமாக அமைந்த சமயம் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டதே எனலாம். மறுமலர்ச்சி நவீன உலகை உருவாக்குவதில் மிக முக்கியதாக்கத்தை ஏற்படுத்தியது. ஐரோப்பாவின் புவியியல் சார்ந்த கற்பனைகளுக்கு அது ஊக்கமாக அமைந்தது. கொலம்பஸ் பெற்ற வெற்றியானது வெளிநாட்டு அமைப்புக்களுக்கு பெரிதும் ஊக்கமளிப்பதாக அமைந்தது. கத்தோலிக்க தேவாலயங்களுக்கு எதிரான கிளர்ச்சியாக உருவான சீர்திருத்தங்கள் சமய வரைபடத்தில் மாற்றங்களை உருவாக்கியதோடு சமயம் தொடர்பான அணுகுமுறைகளில் ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. முடியாட்சியை ஒருங்கிணைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் மற்றும் அதனை உறுதியாக்கும் நடவடிக்கைகளின் விளைவாக ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் தேசிய அரசுகள் உருவாக வழியமைத்தன.

Tags : History வரலாறு.
12th History : Chapter 10 : Modern World: The Age of Reason : Modern World: The Age of Reason History in Tamil : 12th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 10 : நவீன உலகம்: பகுத்தறிவின் காலம் : நவீன உலகம்: பகுத்தறிவின் காலம் - வரலாறு : 12 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 10 : நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்