Home | 6 ஆம் வகுப்பு | 6வது சமூக அறிவியல் | தேசிய விடுமுறை நாட்கள்

தேசியச் சின்னங்கள் | பருவம் 2 அலகு 1 | குடிமையியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - தேசிய விடுமுறை நாட்கள் | 6th Social Science : Civics : Term 2 Unit 1 : National Symbols

   Posted On :  04.07.2023 12:28 am

6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : பருவம் 2 அலகு 1 : தேசியச் சின்னங்கள்

தேசிய விடுமுறை நாட்கள்

தேதி இந்திய சுதந்திர நாள். ஆங்கிலேயர்களுக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் நாடு விடுதலை பெற்ற நாள் அது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு உதித்த நாளாகவும் கருதப்படுகிறது.

தேசிய விடுமுறை நாட்கள் 

சுதந்திர நாள்


தேதி இந்திய சுதந்திர நாள். ஆங்கிலேயர்களுக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் நாடு விடுதலை பெற்ற நாள் அது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு உதித்த நாளாகவும் கருதப்படுகிறது.

நாடு விடுதலை பெற்ற நாளன்று மகாகவி பாரதியாரின் 'ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று ஆடுவோமே' என்ற பாடலை அகில இந்திய வானொலியில் பாடிய பெருமையைப் பெற்றவர் மறைந்த கர்னாடக இசைப் பாடகி டி.கே. பட்டம்மாள். சுதந்திர நாள் இன்றைக்கும் நாடெங்கும் கோலாகலமாக அனைத்துத் தரப்பினராலும் கொண்டாடப்பட்டுவருகிறது. அன்றைக்கு நாட்டின் பிரதமர் டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றுவது முக்கிய நிகழ்வு ஆகும்.

 

குடியரசு நாள்


1950 ஜனவரி 26-ம் தேதி இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. அதைக் கொண்டாடும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் குடியரசு நாள் கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியல் சாசனம் நடைமுறைக்கு நாளே, குடியரசு நாள். 1947-லேயே நாடு விடுதலை பெற்றுவிட்டாலும், அதற்குப் பிறகும் பிரிட்டன் அரசியே இந்தியாவின் கௌரவத் தலைவராக இருந்துவந்தார். குடியரசு நாடாக அறிவிக்கப்பட்ட பிறகு, நாட்டின் முதல் குடிமகன் குடியரசுத் தலைவர் ஆவார். குடியரசு நாளில் அவரே செங்கோட்டையில் கொடியேற்றுவார்.

 

உங்களுக்குக் தெரியுமா? 

இந்தியக் நாளின் குடியரசு மூன்றாவது நாளான ஜனவரி 29, அன்று பாசறைக்கு திரும்புதல் என்ற விழா சிறப்பாக நடைபெறும். அந்நாளில் தரைப்படை, கடற்படை, விமானப்படையைச் சேர்ந்த இசைக்குழுவினர் நிகழ்ச்சிகளை நடத்துவர். குடியரசு தலைவர் இந்நிகழ்வின் முதன்மை விருந்தினர் ஆவார். இவ்விழாவின் ஒரு பகுதியாக மாலை 6 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகை அலங்கரிக்கப்படும்.

 

காந்தி ஜெயந்தி

'தேசத் தந்தை மின்விளக்குகளால் மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2 தேசிய நாட்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுக் கொண்டாடப்படுகிறது. காந்தியின் பிறந்த நாளைச் 'சர்வதேச அகிம்சை நாள்' ஆக 2007 ல் அங்கீகரித்து ஐ.நா. சபை கொண்டாடி வருகிறது.


Tags : National Symbols | Term 2 Unit 1 | Civics | 6th Social Science தேசியச் சின்னங்கள் | பருவம் 2 அலகு 1 | குடிமையியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
6th Social Science : Civics : Term 2 Unit 1 : National Symbols : National Holidays National Symbols | Term 2 Unit 1 | Civics | 6th Social Science in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : பருவம் 2 அலகு 1 : தேசியச் சின்னங்கள் : தேசிய விடுமுறை நாட்கள் - தேசியச் சின்னங்கள் | பருவம் 2 அலகு 1 | குடிமையியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : பருவம் 2 அலகு 1 : தேசியச் சின்னங்கள்