Home | 6 ஆம் வகுப்பு | 6வது சமூக அறிவியல் | பிற தேசியச் சின்னங்கள்

தேசியச் சின்னங்கள் | பருவம் 2 அலகு 1 | குடிமையியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - பிற தேசியச் சின்னங்கள் | 6th Social Science : Civics : Term 2 Unit 1 : National Symbols

   Posted On :  04.07.2023 12:25 am

6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : பருவம் 2 அலகு 1 : தேசியச் சின்னங்கள்

பிற தேசியச் சின்னங்கள்

6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : பருவம் 2 அலகு 1 : தேசியச் சின்னங்கள்

பிற தேசியச் சின்னங்கள்



தேசியக் கொடி

மூவண்ணக்கொடி நமது கொடியாகும். தேசியக் மூன்று வண்ணங்களும் சம அளவில் கிடைமட்டமாக அமைந்துள்ளன மேல்பகுதியில் உள்ள காவி நிறம் தைரியத்தையும் தியாகத்தையும் குறிக்கிறது. கீழ்ப்பகுதியில் உள்ள பச்சைநிறம் செழுமையையும் வளத்தையும் குறிக்கிறது. இடையில் உள்ள வெள்ளைநிறம் நேர்மை, அமைதி மற்றும் தூய்மையைக் குறிக்கிறது. நடுவில் கருநீல நிறத்தில் அமைந்துள்ள அசோகச் சக்கரம் அறவழியையும் அமைதியையும் வலியுறுத்துகிறது.

தேசியக் கொடியின் நீள, அகலம் 3:2 என்ற விகிதத்தில் அமைந்துள்ளது. நடுவில் உள்ள அசோகச் சக்கரம் 24 ஆரங்களைக் கொண்டுள்ளது.

 


உள்ளளுக்குத் தெரியுமா?

இந்திய தேசியக் கொடியை ஆந்திராவைச் சேர்ந்த பிங்காலி வெங்கையா என்பவர் வடிவமைத்தார்.

விடுதலை இந்தியாவின் முதல் தேசியக் கொடி தமிழ்நாட்டில் உள்ள குடியாத்தத்தில் (வேலூர் மாவட்டம்) நெய்யப்பட்டது.

இக்கொடியைப் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் (15.08.1947) செங்கோட்டையில் ஏற்றினார்.

இக்கொடி தற்போது சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.



உயர்சிந்தனை வினா

இந்திய தேசியக்கொடியைத் தயாரிக்கும் உரிமை யாருக்கு அளிக்கப்பட்டுள்ளது?

 


கொடி காத்த குமரன்


திருப்பூர்க் குமரன் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் பிறந்தார். இள வயதிலிருந்தே இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டார். 1932இல் காந்தியடிகளைக் கைது செய்ததைக் கண்டித்து நாடெங்கிலும் போராட்டங்கள் நடைபெற்றன. காந்தியை விடுதலை செய்யக்கோரி நடந்த போராட்டத்தில் திருப்பூர்க் குமரன் கலந்து கொண்டார். காவல் துறையினரின் கடுமையான தாக்குதலுக்கு உட்பட்டு உயிர்துறந்தார். போராட்டக்களத்தில் உயிர்நீத்தபோதும் மூவர்ணக்கொடியைக் கீழே விடவில்லை. இதனால் திருப்பூர்க் குமரன் 'கொடி காத்த குமரன்' என அழைக்கப்படுகிறார். தியாகத்தை நினைவு கூறும் வகையில் அவரது நூற்றாண்டில் இந்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டுச் சிறப்பித்தது.

 

தேசிய இலச்சினை

சாரநாத் அசோகத் தூணின் உச்சியில் அமைந்திருக்கும் நான்முகச் சிங்கம் இந்தியாவின் தேசிய இலச்சினையாக ஜனவரி 26, 1950இல் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதன் அடிப்பகுதியில் ‘சத்யமேவ ஜெயதே' எனப் பொறிக்கப்பட்டுள்ளது 'வாய்மையே வெல்லும்' என்பதே இதன் பொருளாகும். தேசிய இலச்சினை மேல்பகுதி, அடிப்பகுதி என் இரண்டு பகுதிகளைக் கொண்டது. மேல்பகுதியில் நான்கு சிங்க உருவங்கள் ஒன்றுக்கொன்று பின்பக்கமாக பொருந்தியிருக்குமாறு வட்டவடிமான பீடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நமது இலச்சினையில் மூன்று சிங்க உருவங்களை மட்டுமே காண இயலும்.

அடிப்பகுதியில் யானை (ஆற்றல்), குதிரை (வேகம்), காளை (கடின உழைப்பு), சிங்கம் (கம்பீரம்) ஆகிய உருவங்கள் அமைந்துள்ளன. இவ்வுருவங்களுக்கிடையே தர்ம சக்கரம் அமைந்துள்ளது. இந்த இலச்சினை இந்திய அரசின் அலுவல் முறை கடித முகப்புகளிலும் இந்திய நாணயங்களிலும் கடவுசீட்டுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.


உள்ளளுக்குத் தெரியுமா?

அசோகர் காலத்தில் சாரநாத் தூணின் உச்சியில் அமைந்திருந்த நான்முகச் சிங்கம் தற்போது சாரநாத் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகிறது.

 

தேசியகீதம்

ஜன கண மன……………… நமது தேசிய கீதமாகும். இது இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைபாட்டிற்கு சின்னமாக விளங்குகிறது. அடையாளச் இப்பாடல் இரவீந்திரநாத் தாகூரால் வங்காள மொழியில் எழுதப்பட்டது. இதன் இந்தி மொழியாக்கம் ஜனவரி 24, 1950இல் இந்திய அரசியலமைப்புச் சபையால் தேசிய கீதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

உள்ளளுக்குத் தெரியுமா?

1911, டிசம்பர் 27ஆம் நாள் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டின் போது இப்பாடல் முதன் முதலாகப் பாடப்பட்டது.

 

பாடும்போது பின்பற்ற வேண்டியன

• இக்கீதத்தை சுமார் 52 வினாடிகளில் பாட/ இசைக்க வேண்டும்.

• பாடும்போது அனைவரும் எவ்வித அசைவுகளும் இன்றி நேராக நிற்க வேண்டும்.

• பொருள் புரிந்து சரியாகப் பாடவேண்டும்.

 

தேசியப் பாடல் - வந்தே மாதரம்

வங்க எழுத்தாளர் பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய "வந்தே மாதரம் பாடலின் முதல் பத்தி விடுதலை போராட்டத்தில் முக்கியப் பங்களித்தது. இதன் காரணமாக, தேசிய கீதத்திற்க்கு இணையான தேசியப் பாடல் என்ற சிறப்பு இப்பாடலுக்கு அளிக்கப்படுகிறது" என அரசியலமைப்பு சட்ட நிர்ணய மன்றத் தலைவரும் மேனாள் குடியரசுத்தலைவருமான ராஜேந்திர பிரசாத் 1950, ஜனவரி 24 ஆம் நாள் அறிவித்தார். இப்பாடல் ஆனந்த மடம் என்ற நாவலிலிருந்து எடுக்கப்பட்டது.

தேசிய உறுதிமொழி

"இந்தியா எனது தாய்நாடு...." எனத்தொடங்கும் நமது தேசிய உறுதிமொழியைப் பிதிமாரி வெங்கட சுப்பாராவ் என்பவர் தெலுங்கில் எழுதினார்.

 

தேசிய நுண்ணுயிரி

நாம் அன்றாடம் சாப்பிடும் தயிர் பாலிலிருந்து உருவாகப் பயன்படுவது லாக்டோபேசில்லஸ் டெல்புரூக்கி எனும் நுண்ணுயிர். 2012-ம் ஆண்டில் இது தேசிய நுண்ணுயிராக அங்கீகரிக்கப்பட்டது. இந்தப் பாக்டீரியா வேதிவினை புரிந்து பாலில் இருக்கும் புரதத்தை மாற்றுவதால் தயிர் கிடைக்கிறது. தயிர் செரிமானத்துக்கும், வயிற்றுக் கோளாறுகளுக்கும், குளிர்ச்சி தருவதற்கும் அறியப்பட்டது.

 


இந்திய நாணயம் (INR)

இந்தியாவின் அதிகாரபூர்வ பணத்தின் பெயர் ரூபாய். 16-ம் நூற்றாண்டில் மன்னர் ஷெர்ஷா சூரி வெளியிட்ட வெள்ளி நாணயத்துக்கு 'ருபியா' என்று பெயர். அதுவே ரூபாய் என்று மருவியுள்ளது. ரூபாய்க்கான சின்னம் ச இந்தச் சின்னத்தை 2010-ல் வடிவமைத்தவர் தமிழகத்தைச் சேர்ந்த டி. உதயகுமார் ஆவார்.


தேசிய நாட்காட்டி

பேரரசர் கனிஷ்கர் காலத்தில் கி.பி.(பொ.ஆ.) 78-ல் சக ஆண்டு முறை தொடங்கியது. இளவேனில் கால சம பகல்- இரவு நாளான மார்ச் 22 அன்று இந்த ஆண்டு தொடங்குகிறது. லீப் ஆண்டுகளில் இது மார்ச் 21 ஆக அமையும். சக ஆண்டு முறையையே தேசிய நாட்காட்டி பின்பற்றுகிறது. பிரபல வான் இயற்பியலாளர் மேக்னாத் சாகா தலைமையிலான நாட்காட்டி சீரமைப்புக் குழுவின் பரிந்துரையின் பேரில் 1957 மார்ச் 22 முதல் தேசிய நாட்காட்டி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பல்வேறு வேறுபாடுகளைக் கொண்ட இந்திய மக்களிடையே நாட்டுப்பற்றையும் ஒற்றுமை உணர்வையும் வளர்த்தெடுப்பதில் தேசிய சின்னங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

Tags : National Symbols | Term 2 Unit 1 | Civics | 6th Social Science தேசியச் சின்னங்கள் | பருவம் 2 அலகு 1 | குடிமையியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
6th Social Science : Civics : Term 2 Unit 1 : National Symbols : Other Symbols of our Country National Symbols | Term 2 Unit 1 | Civics | 6th Social Science in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : பருவம் 2 அலகு 1 : தேசியச் சின்னங்கள் : பிற தேசியச் சின்னங்கள் - தேசியச் சின்னங்கள் | பருவம் 2 அலகு 1 | குடிமையியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : பருவம் 2 அலகு 1 : தேசியச் சின்னங்கள்