அலகு 5 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - தடுப்பு நடவடிக்கைகளின் அவசியம் | 8th Social Science : Geography : Chapter 5 : Hazards
தடுப்பு
நடவடிக்கைகளின் அவசியம்
மனிதர்கள்
மற்றும் பொருளாதார கட்டமைப்புகளுக்கு இயற்கை மற்றும் செயற்கை இடர்களால் ஏற்படும் தீய
விளைவுகளிலிருந்து பாதுக்காக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தடுப்பு நடவடிக்கைகள்
ஆகும்.
* தடுப்பு திட்டமிடல்: i) இடரைக்
கண்டறிதல் ii) பாதிப்பை மதிப்பீடு செய்தல்.
* தாமதமான தடுப்பு நடவடிக்கைகள்
பொருளாதார இழப்பை அதிகரிக்கக்கூடும் என்பதால் முன் திட்டமிடல் அவசியமானது.
* இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு
நடவடிக்கைகள் மிகவும் இடர் தடுப்பு நடவடிக்கைகள் சவாலானதாக உள்ளது.
பேரழிவை உருவாக்கக் கூடிய புதிய ஆயுதமாக இயற்கை வளர்ந்து வருகிறது.
நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?
பெரும் சுற்றுச்சூழல் பேரழிவு காரணமாக இந்தியாவில் 2017 ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில் சுமார் 22,000 பேர் இறந்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளில் (1998 -2017) உலகில் சுமார் 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மோசமான வானிலை நிகழ்வுகளால் இறந்துள்ளனர். இது ஜெர்மன்-வாட்ச்என்ற தனியார் அமைப்பு வெளியிட்டுள்ள உலகளாவிய காலநிலை இடர் குறியீட்டு அறிக்கையில் இவை கூறப்பட்டுள்ளது.