இடர்கள் | அலகு 5 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - வினா விடை | 8th Social Science : Geography : Chapter 5 : Hazards
மதிப்பீடு
I சரியான
விடையைத் தேர்ந்தெடுக்கவும்
1. காற்றில் உள்ளநைட்ரஜன் சதவீதம் --------------------
அ)
78.09%
ஆ)
74.08%
இ)
80.07%
ஈ)
76.63%
[விடை : அ) 78.09%]
2. இந்தியப் பெருங்கடலில் சுனாமி
----------------- ஆம் ஆண்டில் ஏற்பட்டது.
அ)
1990
ஆ)
2004
இ)
2005
ஈ)
2008
[விடை : ஆ) 2004]
3. சுனாமி என்ற சொல் ----------------- மொழியிலிருந்து
பெறப்பட்டது.
அ) ஹிந்தி
ஆ) பிரெஞ்சு
இ) ஜப்பானிய
ஈ) ஜெர்மன்
[விடை : இ) ஜப்பானிய]
4. புவி மேற்பரப்பு நீருக்கு-----------------
எடுத்துக்காட்டாகும்.
அ) ஆர்டீசியன்
கிணறு
ஆ) நிலத்தடி
நீர்
இ) அடி
பரப்பு நீர்
ஈ) ஏரிகள்
[விடை : ஈ) ஏரிகள்]
5. பருவமழை பொய்ப்பின் காரணமாக------------------
ஏற்படுகிறது.
அ) ஆவி
சுருங்குதல்
ஆ) வறட்சி
இ) ஆவியாதல்
ஈ.) மழைப்பொழிவு
[விடை : ஆ) வறட்சி]
|| கோடிட்ட
இடங்களை நிரப்புக
1. இடர்கள்
பேரழிவு
க்கு வழிவகுக்கிறது.
2. நிலச்சரிவு
இயற்கை
இடருக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
3. இடர்கள்
தோன்றுவதன் அடிப்படையில் இடர்களை எட்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
4.
தீவிரவாதம் மனிதனால்
தூண்டப்பட்ட இடருக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
5. நைட்ரஜன்
ஆக்சைடுகள் மனிதர்களைப் பாதிக்கும் முதல்நிலை மாசுபடுத்திகளாகும்.
6. செர்னோபில்
அணு விபத்து 1986
ஆண்டில் நடைபெற்றது.
III பொருத்துக
பட்டியல்
– 1 பட்டியல்- 2
1. முதல்
நிலை மாசுபடுத்திகள் - தீவிரவாதம்
2. அபாயகர
கழிவுகள் - சுனாமி
3 நில
அதிர்வு - காலாவதியான மருந்துகள்
4 வானிலையியல்
வறட்சி - சல்பர் ஆக்சைடுகள்
5 மனிதனால்
தூண்டப்பட்ட இடர்- மழைப் பொழிவு (குறைதல்
விடைகள்
1. முதல் நிலை மாசுபடுத்திகள்
- சல்பர் ஆக்சைடுகள்
2. அபாயகர கழிவுகள் - காலாவதியான மருந்துகள்
3 நில அதிர்வு - சுனாமி
4 வானிலையியல் வறட்சி - மழைப் பொழிவு (குறைதல்
5 மனிதனால் தூண்டப்பட்ட இடர்- தீவிரவாதம்
IV சுருக்கமாக
விடையளி
1. 'இடர்' - வரையறு.
இடர்:
> ஒரு பொருளோ, நபரோ, நிகழ்வோ அல்லது காரணியோ அல்லது கட்டமைப்புகள்
மற்றும் பொருளாதார வளங்களுக்கு அச்சுறுத்தலாகவும், இழப்பு ஏற்படுத்தும் வகையிலும் அமைந்தால்
அது இடர் (Hazard) எனப்படும்.
> இவை மனிதனால் உருவாக்கப்பட்டவையாகவோ அல்லது இயற்கையான நிகழ்வாகவோ
இருக்கலாம்.
2. இடரின் முக்கிய வகைகள் யாவை?
இடரின் முக்கிய
வகைகள் (இந்தியா): -
> நில அதிர்வு
> வெள்ளப்பெருக்கு
> சூறாவளிப் புயல்கள்
> நிலச்சரிவுகள்
> வறட்சிகள்
> அபாயகர கழிவுகள்
> காற்று மாசு
> நீர் மாசு (அல்லது)
> இயற்கை இடர்கள் > மனிதனால் உருவாக்கும் இடர்கள்
> சமூக - இயற்கை இடர்கள்
3. அபாயகரக் கழிவுகள் பற்றி குறிப்பு எழுதுக.
அபாயகரக் கழிவுகள்: சுற்றுச்சூழல் மற்றும் மனிதர்களுக்கு பெருத்த சுகாதார தீங்குகளை ஏற்படுத்தக்கூடிய
நச்சுக்கழிவுகள் அபாயகரக் கழிவுகள் எனப்படும்.
முக்கிய அபாயகரக் கழிவுகள்:
> கதிரியக்க பொருட்கள்
> இரசாயனங்கள்
> மருத்துவ கழிவுகள்
> வெடிப் பொருட்கள்
> குடிசார் அபாயகர கழிவுகள்
> எளிதில் தீப்பற்றக்கூடிய கழிவுகள்
4. நமது நாட்டில் வெள்ள பாதிப்புக்குள்ளாகும்
முக்கியப் பகுதிகளைப் பட்டியலிடுக.
நமது நாட்டில் வெள்ளப் பாதிப்புக்குள்ளாகும்
முக்கிய பகுதிகள்:
> வடக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் உத்திரப்பிரதேசம், வட பீகார்,
மேற்கு வங்காளத்தை உள்ளடக்கிய கங்கைச் சமவெளி மற்றும் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு.
> கடலோர ஆந்திரம், ஒடிசா, குஜராத் போன்றவை இதர பகுதிகள்
5. வறட்சியின் வகைகளைக் குறிப்பிடுக.
வறட்சியின் வகைகள்:
> வானிலையியல் வறட்சி –
> நீரியியல் வறட்சி
> வேளாண் வறட்சி
6. மலை அடிவாரப் பகுதிகளில் நாம் ஏன் குடியிருப்புகளை
அமைக்க கூடாது?
மலை அடிவாரப் பகுதிகளில்
நாம் குடியிருப்புகளை அமைக்க கூடாது. ஏனெனில்
> பொதுவாக நிலச்சரவுகள் மலை அடிவாரப் பகுதிகளில் திடீரென்று ஏற்படும்
அரிதான நிகழ்வாகும். செங்குத்துச் சரிவு மற்றும் கனமழை நிலச்சரிவுகள் ஏற்பட முக்கிய
காரணங்களாகும்.
> இமயமலைச் சரிவுகள், மேற்குத் தொடர்ச்சி மலைச் சரிவுகள், கொடைக்கானல்,
ஊட்டி போன்ற பகுதிகள் நிலச்சரிவுகளால் அதிகம் பாதிக்கப்படுகின்றன.
V வேறுபடுத்துக
1. இடர்
மற்றும் பேரிடர்
2. இயற்கை
மற்றும் செயற்கை இடர்கள்
3. வெள்ளப்பெருக்கு
மற்றும் வறட்சி
4. நில
அதிர்வு மற்றும் சுனாமி
VI விரிவான
விடையளி
1. காற்று மாசுபடுதலைப் பற்றி ஒரு கட்டுரை
வரைக.
காற்று மாசுபடுதல்: உட்புற அல்லது வெளிப்புக் காற்றானது சில வாயுக்கள் மற்றும் திடப்பொருட்களின்
சேர்க்கையால் அதன் இயற்கை பண்புகள் மற்றும் காற்றின் சதவீதங்கள் மாறுபடுவதை காற்று
மாசுபடுதல் என்கிறோம். > முதன்மை மாசுபடுத்திகள் என்பது ஒரு மூலத்தில் இருந்து நேரடியாக
வெளியேற்றப்படும் மாசுவாகும்.
முதன்மை மாசுபடுத்திகள்:
> சல்பர் டை ஆக்சைடு
> நைட்ரஜன் ஆக்சைடு
> கார்பன் டை ஆக்சைடு
> துகள்ம பொருட்கள்
> பிற முதன்மை மாசுபடுத்திகள்
இரண்டாம் நிலை மாசுபடுத்திகள் நேரடியாக வெளியேற்றப்படுவதில்லை. ஆனால் மற்ற முதன்மை மாசுக்கள் வளிமண்டலத்தில்
வினை புரிவதால் உருவாகுபவை ஆகும்.
இரண்டாம் நிலை மாசுபடுத்திகள்
> தரைமட்ட ஓசோன்
> பனிப்புகை
2. நில அதிர்வை வரையறுத்து அதன் விளைவுகளைப்
பட்டியலிடுக.
நில அதிர்வு:
நில அதிர்வு என்பது புவியின் மேலோட்டில் திடீரென ஏற்படும் கடும் அதிர்வாகும்.
இவ்வதிர்வு தோன்றும் மையத்திலிருந்து அனைத்து திசைகளிலும் தொடர்ச்சியான அதிர்வு அலைகளை
ஏற்படுத்துகிறது.
'நில அதிர்வின்
விளைவுகள்:
> புவிப்பரப்பில் ஏற்படும் அதிர்ச்சிகள்
> தரைப்பரப்பு சேதம்
> நிலச்சரிவுகள்
> சுனாமி
3. நிலச்சரிவிற்கான காரணங்கள் குறித்து விரிவான
விளக்கம் தருக.
நிலச்சரிவுக்கான
காரணங்கள்:
> நிலச்சரிவு என்பது புவியீர்ப்பு விசையினால் பாறைகள், மண் மற்றும்
தாவரங்கள் கீழ்நோக்கி வேகமாகச் செல்லும் நகர்வைக் குறிப்பதாகும்.
> செங்குத்துச் சரிவு மற்றும் கனமழை நிலச்சரிவுகள் ஏற்பட முக்கியக்
காரணங்களாகும்.
> பலவீனமான தளர்ந்த நில அமைப்பு, காடழிப்பு, நில அதிர்வு, எரிமலை
வெடிப்பு, சுரங்கம் தோண்டுதல், மலைப் பிரதேசங்களில் சாலைகள் மற்றும் இருப்புப் பாதைகளின்
கட்டுமானம் ஆகியவை நிலச்சரிவுக்கான பிற காரணங்களாகும்.
> சுமார் 15% நிலப்பரப்பு இந்தியாவில் நிலச்சரிவு அபாயத்திற்கு உள்ளாகும்
பகுதிகள்.
> இமயமலைச் சரிவுகள், மேற்கு தொடர்ச்சி மலைச் சரிவுகள் மற்றும் ஆற்றுப்
பள்ளத்தாக்குப் பகுதிகளில் நிலச்சரிவுகள் அதிகம் காணப்படுகின்றன. கொடைக்கானல் மற்றும்
உதகமண்டலம் தமிழ்நாட்டில் நிலச்சரிவால் அதிகம் பாதிக்கப்படுகின்றன
4. நீர் மாசுபாட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து
விரிவாக விவாதிக்க.
நீர் மாசுபாட்டால்
ஏற்படும் விளைவுகள்:
> நீர்மாசு என்பது நீரின் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல்
பண்புகளில் ஏற்படும் மாற்றம் ஆகும்.
> நீர்மாசு மனித மற்றும் நீர்வாழ் உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கின்றது.
மாசு நிறைந்த நீரை பயன்படுத்துவதால் அல்லது பருகுவதால் மனிதருக்கு பல நோய்கள் உண்டாகின்றன.
நீர்மாசு டைபாய்டு, காலரா, மஞ்சட்காமாலை போன்ற பல நோய்களை உண்டாக்குகிறது.
> நீர்மாசு அகற்றப்படாவிட்டால் அது முழுமையான சுற்றுச்சூழல் அமைப்பை
நிலைகுலையச் செய்துவிடும்.
> நீர்நிலைகளில் உள்ள வேதிப்பொருட்கள் ஆல்காக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன.
இவை ஏரி அல்லது குளங்களின் மேற்பரப்புகளில் அடுக்குகளாக படிந்து விடுகின்றன. இவற்றைப்
பயன்படுத்தும் பாக்டீரியாக்கள் நீர்நிலைகளில் உள்ள ஆக்ஸிஜன் அளவைக் குறைக்கின்றன. இது
நீர்நிலை உயிரிகளின் வாழ்க்கையை பாதிக்கின்றன.
> நீரிலுள்ள மாசுபடுத்திகளை உணவாக நீர்வாழ் உயிரினங்கள் (மீன், ஷெல்
மீன்கள்) பயன்படுத்தும் போதும், நீர்வாழ் உயிரினங்களை மனிதன் பயன்படுத்தும் போதும்
உணவுச் சங்கலி பாதிக்கப்படுகிறது.
VII செயல்பாடுகள்
1. நீங்கள்
அடையாளம் கண்டுள்ள இடர்களின் பெயர்களை எழுதுக.
2. உங்கள்
பகுதியில் அடிக்கடி எப்பபொழுதாவது ஏறுபடும் இடர்களை பட்டியலாக
3. தமிழ்நாடு
வரைப்படத்தில் 13 கடற்கரை மாவட்டங்கள் வண்ணங்களில் தீட்டவும்