அலகு 5 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - இடர்கள் | 8th Social Science : Geography : Chapter 5 : Hazards

   Posted On :  12.06.2023 06:11 am

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : அலகு 5 : இடர்கள்

இடர்கள்

கற்றலின் நோக்கங்கள் >இடர், பேரிடர் மற்றும் பேரழிவு ஆகியவைகளின் பொருளினை தெரிந்து கொள்ளல் >இடரின் முக்கிய வகைகள், அதன் காரணங்கள் மற்றும் விளைவுகளைப் பற்றி விவரித்தல் >இடர்கள் மற்றும் அவை சார்ந்த தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்

அலகு - 5

இடர்கள்


 

கற்றலின் நோக்கங்கள்

>இடர், பேரிடர் மற்றும் பேரழிவு ஆகியவைகளின் பொருளினை தெரிந்து கொள்ளல்

>இடரின் முக்கிய வகைகள், அதன் காரணங்கள் மற்றும் விளைவுகளைப் பற்றி விவரித்தல்

>இடர்கள் மற்றும் அவை சார்ந்த தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்

 

அறிமுகம்

ஆசிரியர்: காலை வணக்கம் மாணவர்களே.  

மாணவர்கள்: காலை வணக்கம் ஐயா.

ஆசிரியர் : இன்று அனைவரும் பள்ளிக்கு வருகைப் புரிந்துள்ளீர்களா?

கிருத்திகா: சுருதி, இன்று பள்ளிக்கு வரவில்லை ஐயா.

ஆசிரியர்: அவள் ஏன் இன்று பள்ளிக்கு வரவில்லை?

பவித்ரா- : ஐயா அவளுக்கு என்ன நேர்ந்தது என உங்களுக்கு தெரியாதா? 

ஆசிரியர்: தெரியாது, அவளுக்கு என்ன நேர்ந்தது?

தேஷ்மிதா: ஐயா நேற்று அவள் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கையில் கனமழையின் காரணமாக ஒரு பெரிய மரக்கிளை அவள் மேல் விழுந்ததால் காயமடைந்துள்ளாள்.

ஆசிரியர்: ஐயோ கடவுளே! என்ன பரிதாபம் இது. மாணவர்களே! நீங்கள் அனைவரும் வெளியே செல்லும் போது ஹசார்டு (Hazard) - ஐத் தவிர்க்க மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

கமலேஷ்: ஐயா ஹசார்டு என்றால் என்ன? ஹசார்டு என்றால் பெல்ஜியம் நாட்டு கால்பந்தாட்ட வீரர் Hazard - ஐக் குறிப்பிடுகிறீர்களா?

ஆசிரியர்: இல்லை இல்லை. ஹசார்டு என்பது புவியிலுள்ள உயிர் மற்றும் உயிரற்ற பொருட்களைப் பாதிக்கக்கூடிய நிகழ்வை இடர் (Hazard) என்கிறோம். இந்த இடரைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு இன்று சரியான நாள், இப்பாடத்தைப் பற்றி விளக்கமாக அறிவோம்.

 

இடர்கள்

இருபத்தியோராம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புவியானது முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை பெருக்கத்திற்கும் மக்கள் நலமாகவும் வளமாகவும் வாழ உறுதுணையாக இருந்தது. அதே சமயம் மக்கள் எதிர்கொள்ளும் ஆபத்துக்கள் குறித்த விழிப்புணர்வு குறைவாக இருந்தது. இவற்றை மனதில் கொண்டு இப்பாடமானது இடர்பாடுகள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஒரு பொருளோ, நபரோ, நிகழ்வோ அல்லது காரணியோ மக்கள் அல்லது கட்டமைப்புகள் மற்றும் பொருளாதார வளங்களுக்கு அச்சுறுத்தலாகவும், இழப்பு ஏற்படுத்தும் வகையிலும் அமைந்தால் அது இடர் (Hazard) எனப்படும். இவை சுற்றுச்சூழலில் மனிதனால் உருவாக்கப்பட்டவையாகவோ அல்லது இயற்கையான நிகழ்வாகவோ இருக்கலாம். "ஹசார்டு" (Hazard) என்ற சொல் ஹாசர்ட் (Hasart) என்ற பழமையான பிரெஞ்சு சொல்லிலிருந்து தோன்றியது. இதன் பொருள் ஒரு பகடை விளையாட்டு ஆகும். (அரபு மொழியில் அஸ்-சஹர் என்றும் ஸ்பானிய மொழியில் அசார் என்றும் அழைக்கப்படுகிறது).

ஒரு சமுதாயம் பல்வகையான இடர்களைச் சந்தித்து வந்தாலும் மிகவும் கடுமையாக பாதிக்கும் இடர்களின் அச்சுறுத்தல்களைப் பற்றி அப்பகுதி மக்கள் அறிந்திருப்பது மிகவும் அவசியமாகும்.

உங்களுக்குத் தெரியுமா?

மனித உயிர்கள் மற்றும் உடைமைகளுக்கு  அச்சுறுத்தலை உருவாக்கும் இயற்கையான நிகழ்வுகள் இயற்கை இடர்கள் எனப்படும். பேரிடர்களின் எண்ணிக்கை மற்றும் தீவிரம் மனித செயல்களால் அதிகரிக்கிறது. இயற்கையான செயல்பாடுகள் அல்லது நிகழ்வுகள் மட்டுமே இயற்கை இடருக்கான காரணங்கள் அல்ல. மனிதர்கள் இயற்கையைக் கையாளும் தன்மையைப் பொருத்தும் அமைகிறது.

பேரிடர் என்பது வரையறுக்கப்பட்ட பகுதியில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் நிகழும் ஒரு அபாயகரமான நிகழ்வாகும். இவை உயிர், மற்றும் உடைமைகளுக்கு பெரும் அழிவை விளைவிப்பதுடன் மற்றவர்களின் உதவியை நாட வேண்டிய தேவை ஏற்படுகிறது.

பேரழிவு என்பது மிகப்பெரிய இழப்பினையும் அதிக செலவினத்தையும் உண்டாக்குவதோடு அவற்றிலிருந்து மீள்வதற்கு நீண்ட காலமும் தேவைப்படுகிறது.

Tags : Chapter 5 | Geography | 8th Social Science அலகு 5 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல்.
8th Social Science : Geography : Chapter 5 : Hazards : Hazards Chapter 5 | Geography | 8th Social Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : அலகு 5 : இடர்கள் : இடர்கள் - அலகு 5 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : அலகு 5 : இடர்கள்