நரம்பு மண்டலம் - (Neural System)
நியூரான்கள் எனப்படும் அதி சிறப்படைந்த செல்களால் ஆக்கப்பட்டது நரம்பு மண்டலம் ஆகும். இச்செல்களே பல்வேறு தூண்டல்களை பெற்று அதன் தன்மைகளைக் கண்டறிந்து, செயல்படுத்தி அவற்றைக் கடத்துகின்றன. கீழ்நிலை முதுகுநாணற்றவைகளில் நரம்பு வலையாக எளியவகை நரம்பு மண்டலம் அமைந்துள்ளது. உயர்நிலை விலங்குகளில் நன்கு வளர்ச்சியடைந்துள்ள நரம்பு மண்டலம் கீழ்க்கண்ட மூன்று அடிப்படைப் பணிகளைச் செய்கின்றன.
• உணர்ச்சியறிதல் பணிகள் (Sensory Functions): புற மற்றும் அகச் சூழலிலிருந்து வரும் உணர்வுகளை உள்வாங்குதல்.
• இயக்கு பணிகள் (Motor Functions): மூளையிலிருந்து வரும் கட்டளைகளைப் பெற்று எலும்பு மற்றும் தசை மண்டலத்துக்கு அனுப்புதல்.
• தானியங்கு பணிகள் (Autonomic Functions) : அனிச்சை செயல்கள்.