Home | 2 ஆம் வகுப்பு | 2வது கணிதம் | ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படை எண்கள்

எண்கள் | பருவம்-3 அலகு 1 | 2வது கணக்கு - ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படை எண்கள் | 2nd Maths : Term 3 Unit 1 : Numbers

2வது கணக்கு : பருவம்-3 அலகு 1 : எண்கள்

ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படை எண்கள்

இரண்டு இரண்டாகப் பிரித்த பிறகு மீதமிருக்குமெனில் அவ்எண் ஒற்றை எண் என அழைக்கப்படும். இங்கு 5 பறவைகள் 2 இணைகளை உருவாக்கும். ஆனால் 1 பறவை மட்டும் இணை இல்லாமல் இருக்கும். எனவே, 5 என்பது ஓர் ஒற்றை எண் ஆகும்.

அலகு 1

எண்கள்


 

ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படை எண்கள்


பயணம் செய்வோம்

ஜோடிகள்

ஜோடியாகவே கிடைக்கும் பொருள்களில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


கலைச்சொற்கள் : ஜோடி, ஒற்றை, இரட்டை

 

கற்றல்

ஒற்றையும் இரட்டையும்

ஒத்த பண்புகளைக் கொண்ட இரு பொருள்களைக் கருதுவோம். எடுத்துக்காட்டு : ஓர் இணை கொலுசுகள்ஓர் இணை வளையல்கள்.



இரண்டு இரண்டாகப் பிரித்த பிறகு மீதமில்லையெனில் அவ்எண் இரட்டை எண் என அழைக்கப்படும்.

இங்கு பறவைகள் இணைகளை உருவாக்குகின்றன. எனவே, 6 என்பது ஓர் இரட்டை எண்.



இரண்டு இரண்டாகப் பிரித்த பிறகு மீதமிருக்குமெனில் அவ்எண் ஒற்றை எண் என அழைக்கப்படும்.

இங்கு பறவைகள் இணைகளை உருவாக்கும். ஆனால் பறவை மட்டும் இணை இல்லாமல் இருக்கும். எனவே, 5 என்பது ஓர் ஒற்றை எண் ஆகும்.

 

பயிற்சி

கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை இரண்டு இரண்டாகப் பிரித்து வட்டமிடுக. அவை ஒற்றையா, இரட்டையா எனக் காண்க. சான்றுக்காக ஒன்று செய்துகாட்டப்பட்டுள்ளது.


விடை :

10 இரட்டை

7 ஒற்றை

இரட்டை

13 ஒற்றை

 

கற்றல்

எண்களுக்கு ஏற்ப விதைகளை எடுத்து இரண்டு இரண்டாகச் சேர்த்து அவை ஒற்றையா? இரட்டையா? என்பதைப் பார்க்க.


மேலே உள்ள அட்டவணையிலிருந்து, 1,3,5,7,9,11,13,15,17,19 என்ற அமைப்பில் தொடரும் எண்களை இரண்டு இரண்டாகப் பிரித்த பிறகு தனியாக ஒரு விதையை மீதமாக கொண்டிருக்கும். எனவே, இவை ஒற்றை எண்கள் என அழைக்கப்படுகின்றன.

இதே போல் 2,4,6,8,10,12,14,16,18,20 எனத் தொடரும் எண்களை இரண்டு இரண்டாகப் பிரித்த பிறகு விதைகள் மீதமில்லை. எனவே, இவை இரட்டை எண்கள் என அழைக்கப்படுகின்றன.

மேலே கொடுக்கப்பட்டுள்ள ஒற்றை எண்களைக் கவனிக்கவும். அந்த எண்கள் ஒன்றாம் இடத்தில் 1,3,5,7,9 ஆகிய எண்களில் ஏதேனும் ஒன்றைப் பெற்றிருக்கின்றன.

மேலே கொடுக்கப்பட்டுள்ள இரட்டை எண்களைக் கவனிக்கவும். அந்த எண்கள் ஒன்றாம் இடத்தில் 2,4,6,8 மற்றும் 0 ஆகிய எண்களில் ஏதேனும் ஒன்றைப் பெற்றிருக்கின்றன.

மேலும் அட்டவணையிலிருந்து, ஒற்றை எண்களும் இரட்டை எண்களும் மாறி மாறி வருவதை நாம் காணலாம்.

 

செயல்பாடு

புளியங்கொட்டைகளால் ஆன ஒரு குவியலை உருவாக்கவும். இந்த விளையாட்டை இருவர் விளையாடலாம். இருவரும் சம எண்ணிக்கையில் புளியங்கொட்டைகள் எடுக்கவும். முதல் போட்டியாளர் தன்னுடைய பங்கிலிருந்து ஒரு கைப்பிடி கொட்டைகளை எடுத்து இரண்டாம் போட்டியாளரின் கையிலுள்ள கொட்டைகள் ஒற்றையா இரட்டையா என ஊகிக்கச் சொல்லவும்.

* இரண்டாம் போட்டியாளரின் ஊகம் சரி எனில் முதல் போட்டியாளர் தன் கையில் உள்ள கொட்டைகளை அவரிடம் கொடுத்துவிடவேண்டும். அடுத்து விளையாடும் வாய்ப்பையும் இரண்டாம் போட்டியாளர் பெற்றிடுவார்.

* அவர் செய்த ஊகம் சரி எனில் முதல் போட்டியாளர் தன் கையிலுள்ள எண்ணிக்கைக்குச் சமமான கொட்டைகளை அவருக்குக் கொடுத்துவிடவேண்டும். மேலும் அடுத்த வாய்ப்பிலும் முதல் போட்டியாளர் ஆட்டத்தைத் தொடர்வார்.

* விளையாட்டு இவ்வாறு தொடரும். போட்டியின் முடிவில் அதிக எண்ணிக்கையில் கொட்டைகளைக் கொண்டுள்ள போட்டியாளர் வெற்றி பெற்றவர் ஆவார்.

 

பயிற்சி

ஒற்றை எண்களை வட்டமிடுக மற்றும் இரட்டை எண்களைக் கட்டமிடுக.

i) 71, 64 , 45, 82 

ii) 9, 7, 11, 8

iii) 10, 17, 27, 16

iv) 94, 37, 26,69

v) 25, 52, 81, 18

vi) 16, 21, 33, 30

vii) 88, 74, 11, 53

viii) 13, 92, 74, 66

ix) 8, 18, 83, 86

x) 96, 69, 72, 27

 

அடுத்தடுத்த 5 இரட்டை எண்களை எழுதுக.

i) 24, 26, 28, 30, 32, 34, 36

ii) 40, 42, 44, 46, 48, 50, 52

iii) 88, 90, 92, 94, 96, 98, 100

iv) 8, 10, 12, 14, 16, 18, 20

v) 66, 68, 70, 72, 74, 76, 78

 

அடுத்தடுத்த 5 ஒற்றை எண்களை எழுதுக.

i) 7, 9, 11, 13, 15, 17, 19, 21

ii) 21, 23, 25, 27, 29, 31, 33

iii) 83, 85, 87, 89, 91, 93, 95

iv) 49, 51, 53, 55, 57, 59, 61

v) 71, 73, 75, 77, 79, 81, 83

 

முயன்று பார்

ரம்யா ஒற்றை எண்களை மட்டுமே பயன்படுத்தி ஈரிலக்க எண்களை உருவாக்க விரும்புகிறாள். 1,3,5,7,9 ஆகிய எண்களைக் கொண்டு ஈரிலக்க எண்களை உருவாக்க அவளுக்கு உதவவும்.

11,13,15,17,19,31,33,35,37,39,51, 53,55,57,59, 71,73,75, 77,79,91,73,75,77,79


ஒற்றை ஈரிலக்க எண்கள் 25  உள்ளன.

கவிதா இரட்டை எண்களை மட்டுமே பயன்படுத்தி ஈரிலக்க எண்களை உருவாக்க விரும்புகிறாள். 0,2,4,6,8 ஆகிய எண்களைக் கொண்டு ஈரிலக்க எண்களை உருவாக்க அவளுக்கு உதவவும்.

20, 22, 24, 26, 28, 40, 42, 44, 46, 48, 60, 62, 64, 66, 68, 80, 82, 84, 86, 88

இரட்டை ஈரிலக்க எண்கள்  20  உள்ளன.

 

மகிழ்ச்சி நேரம்

எண் அட்டை 1 - 99

எண் அட்டையை உற்றுநோக்கிப் பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க.


i) 30 - க்கும் 60 - க்கும் இடைப்பட்ட அனைத்து ஒற்றை எண்களையும் எழுதுக.

31, 33, 35, 37, 39, 41, 43, 45, 47, 49, 51, 53, 55, 57, 59

ii) 70 -க்கும் 99 -க்கும் இடைப்பட்ட அனைத்து இரட்டை எண்களையும் எழுதுக.

72, 74, 76, 78, 80, 82, 84, 86, 88, 90, 92, 94, 96, 98

iii) 1 -க்கும் 40 -க்கும் இடைப்பட்ட அனைத்து ஒற்றை எண்களையும் எழுதுக.

3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21, 23, 25, 27, 29, 31, 33, 35, 37, 39

iv) 10 -லிருந்து தொடங்கி பத்துக்களாக தாவி வரும் எண்களை வண்ணமிடுக. இந்த வண்ணமிட்ட எண்களைப் பற்றி உங்கள் கருத்தினைத் தெரிவிக்க.

10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 ஒற்றை எண்

v) அட்டவணையிலுள்ள ஒற்றை எண்களை நீல நிறத்தில் வண்ணமிடுக. வண்ணமிடாத எண்களை உற்றுநோக்குக. அவ்வெண்களைப் பற்றி உங்கள் கருத்தினை தெரிவிக்க.

இரட்டை எண்கள்


 

முயன்று பார்

கொடுக்கப்பட்ட இலக்கங்களை ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி மறுமுறை பயன்படுத்தாமல் ஈரிலக்க ஒற்றை எண்களை அமைக்க.

1) 3, 6 63

2) 8, 81

3) 5, 2 25

4) 9, 49

5) 0, பதில் இல்லை

6) 5, 15

தங்களால் ஈரிலக்க ஒற்றை எண்களை அமைக்க முடியாதவாறு எவையேனும் இலக்கங்கள் உள்ளனவாஅந்த இலக்கங்களை எழுதுக. பதில் : ௦,7


Tags : Numbers | Term 3 Chapter 1 | 2nd Maths எண்கள் | பருவம்-3 அலகு 1 | 2வது கணக்கு.
2nd Maths : Term 3 Unit 1 : Numbers : Odd and Even numbers Numbers | Term 3 Chapter 1 | 2nd Maths in Tamil : 2nd Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 2வது கணக்கு : பருவம்-3 அலகு 1 : எண்கள் : ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படை எண்கள் - எண்கள் | பருவம்-3 அலகு 1 | 2வது கணக்கு : 2 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
2வது கணக்கு : பருவம்-3 அலகு 1 : எண்கள்