Home | 7 ஆம் வகுப்பு | 7வது தமிழ் | கவிதைப்பேழை: அழியாச் செல்வம்

சம்ண முனிவர் | பருவம் 2 இயல் 2 | 7 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: அழியாச் செல்வம் | 7th Tamil : Term 2 Chapter 2 : Othuvadhu oliyael

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : ஓதுவது ஒழியேல்

கவிதைப்பேழை: அழியாச் செல்வம்

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : ஓதுவது ஒழியேல் : கவிதைப்பேழை: அழியாச் செல்வம் - சம்ண முனிவர் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் இரண்டு 

கவிதைப்பேழை 

அழியாச் செல்வம்



நுழையும்முன்

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பல்வகையான செல்வங்களைச் சேர்த்து வைக்கின்றனர். அவற்றுள் சில செல்வங்கள் களவு போகவோ, அழியவோ கூடும். ஆகையால் பெற்றோர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வங்களுள் சிறந்ததும், அழியாததும் ஆகிய செல்வத்தைப் பற்றி அறிவோம்.

வைப்புழிக் கோட்படா வாய்த்தீயிற் கேடில்லை 

மிக்க சிறப்பின் அரசர் செறின்வவ்வார் 

எச்சம் எனவொருவன் மக்கட் செய்வன 

விச்சைமற்று அல்ல பிற.*

-சமண முனிவர்


சொல்லும் பொருளும் 

வைப்புழி  -  பொருள் சேமித்து வைக்கும் இடம் 

கோட்படா  -  ஒருவரால் கொள்ளப்படாது 

வாய்த்து ஈயில்  -  வாய்க்கும்படி கொடுத்தலும் 

விச்சை  -  கல்வி 

வவ்வார் – கவர முடியாது 

எச்சம் – செல்வம் 

பாடலின் பொருள்

கல்வியைப் பொருள் போல வைத்திருப்பினும் அது பிறரால் கொள்ளப்படாது. ஒருவற்கு வாய்க்கும்படி கொடுத்தாலும் குறைவுபடாது. மிக்க சிறப்பினை உடைய அரசராலும் கவர முடியாது. ஆதலால் ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் கல்வியே ஆகும். மற்றவை செல்வம் ஆகா.

நூல் வெளி 

நாலடியார் சமண முனிவர்கள் பலரால் எழுதப்பட்ட நூலாகும். இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இது நானூறு வெண்பாக்களால் ஆனது. இந்நூலை நாலடி நானூறு என்றும், வேளாண்வேதம் என்றும் அழைப்பர். திருக்குறள் போன்றே அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்டது. இந்நூல் திருக்குறளுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுவதை நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்னும் தொடர் மூலம் அறியலாம்.


Tags : by Samana muniver | Term 2 Chapter 2 | 7th Tamil சம்ண முனிவர் | பருவம் 2 இயல் 2 | 7 ஆம் வகுப்பு தமிழ்.
7th Tamil : Term 2 Chapter 2 : Othuvadhu oliyael : Poem: Aliya chelvam by Samana muniver | Term 2 Chapter 2 | 7th Tamil in Tamil : 7th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : ஓதுவது ஒழியேல் : கவிதைப்பேழை: அழியாச் செல்வம் - சம்ண முனிவர் | பருவம் 2 இயல் 2 | 7 ஆம் வகுப்பு தமிழ் : 7 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : ஓதுவது ஒழியேல்