Home | 7 ஆம் வகுப்பு | 7வது தமிழ் | கவிதைப்பேழை: அறம் என்னும் கதிர்

முனைப்பாடியார் | பருவம் 3 இயல் 2 | 7 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: அறம் என்னும் கதிர் | 7th Tamil : Term 3 Chapter 2 : Oppuravu olluku

   Posted On :  12.07.2022 05:49 pm

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 2 : ஒப்புரவு ஒழுகு

கவிதைப்பேழை: அறம் என்னும் கதிர்

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 2 : ஒப்புரவு ஒழுகு : கவிதைப்பேழை: அறம் என்னும் கதிர் - முனைப்பாடியார் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் இரண்டு

கவிதைப்பேழை 

அறம் என்னும் கதிர்



நுழையும்முன்

இளமைப்பருவம் எதனையும் எளிதில் கற்றுக்கொள்ளும் பருவமாகும். இப்பருவத்தில் கல்வியை மட்டுமல்லாது நற்பண்புகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். அது வாழ்வு முழுமைக்கும் பயனளிக்கும். அறநெறிகளை இளமைப்பருவத்தில் கற்றுக்கொள்வதை உழவுத்தொழிலோடு ஒப்பிட்டுக் கூறும் பாடல் ஒன்றனை அறிவோம்.

இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக 

வன்சொல் களைகட்டு வாய்மை எருவட்டி 

அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈனஓர் 

பைங்கூழ் சிறுகாலைச் செய்*

- முனைப்பாடியார்


சொல்லும் பொருளும் 

வித்து - விதை

ஈன பெற

நிலன் - நிலம்

களை - வேண்டாத செடி

பைங்கூழ் - பசுமையான பயிர் 

வன்சொல் - கடுஞ்சொல் 

பாடலின் பொருள்

இனிய சொல்லையே விளைநிலமாகக் கொள்ளவேண்டும். அதில் ஈகை என்னும் பண்பை விதையாக விதைக்க வேண்டும். வன்சொல் என்னும் களையை நீக்க வேண்டும். உண்மை பேசுதல் என்னும் எருவினை இடவேண்டும். அன்பாகிய நீரைப் பாய்ச்ச வேண்டும். அப்போதுதான் அறமாகிய கதிரைப் பயனாகப் பெற முடியும். இளம் வயதிலேயே இச்செயல்களைச் செய்ய வேண்டும்.

நூல் வெளி 

முனைப்பாடியார் திருமுனைப்பாடி என்னும் ஊரைச் சேர்ந்த சமணப்புலவர். இவரது காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டு.

இவர் இயற்றிய அறநெறிச்சாரம் 225 பாடல்களைக் கொண்டது. அறநெறிகளைத் தொகுத்துக் கூறுவதால் இந்நூல் அறநெறிச்சாரம் எனப் பெயர்பெற்றது. இந்நூலின் பதினைந்தாம் பாடல் நமக்குப் பாடமாகத் தரப்பட்டுள்ளது.


Tags : by munaipaadiyar | Term 3 Chapter 2 | 7th Tamil முனைப்பாடியார் | பருவம் 3 இயல் 2 | 7 ஆம் வகுப்பு தமிழ்.
7th Tamil : Term 3 Chapter 2 : Oppuravu olluku : Poem: Arm ennum kathir by munaipaadiyar | Term 3 Chapter 2 | 7th Tamil in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 2 : ஒப்புரவு ஒழுகு : கவிதைப்பேழை: அறம் என்னும் கதிர் - முனைப்பாடியார் | பருவம் 3 இயல் 2 | 7 ஆம் வகுப்பு தமிழ் : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 2 : ஒப்புரவு ஒழுகு