பருவம் 3 இயல் 2 | 7 ஆம் வகுப்பு தமிழ் - உரைநடை: ஒப்புரவு நெறி: கேள்விகள் மற்றும் பதில்கள் | 7th Tamil : Term 3 Chapter 2 : Oppuravu olluku
(இயல் 2 : உரைநடை உலகம் : ஒப்புரவு நெறி)
பாடநூல் மதிப்பீட்டு வினா
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. ஒருவர் எல்லாருக்காகவும் எல்லாரும் ஒருவருக்காக என்பது -------நெறி.
அ) தனியுடமை
ஆ) பொதுவுடமை
இ) பொருளுடைமை
ஈ) ஒழுக்கமுடைமை
[விடை : ஆ. பொதுவுடமை]
2. செல்வத்தின் பயன் -------- வாழ்வு.
அ) ஆடம்பர
ஆ) நீண்ட
இ) ஒப்புரவு
ஈ) நோயற்ற
[விடை : இ. ஒப்புரவு]
3. வறுமையைப் பிணி என்றும் செல்வத்தை -------- என்றும் கூறுவர்.
அ) மருந்து
ஆ) மருத்துவர்
இ) மருத்துவமனை
ஈ) மாத்திரை
[விடை : அ. மருந்து]
4. உலகம் உண்ண உண்; உடுத்த உடுப்பாய் என்று கூறியவர்
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) முடியரசன்
ஈ) கண்ணதாசன்
[விடை : ஆ. பாரதிதாசன்]
எதிர்ச்சொற்களைப் பொருத்துக.
வினா
1. எளிது - புரவலர்
2. ஈதல் - அரிது
3. அந்நியர் - ஏற்றல்
4. இரவலர் - உறவினர்
விடை
1. எளிது - அரிது
2. ஈதல் - ஏற்றல்
3. அந்நியர் - உறவினர்
4. இரவலர் - புரவலர்
தொடர்களில் அமைத்து எழுதுக.
1. குறிக்கோள் -------
விடை: வாழ்க்கை குறிக்கோள் உடையது.
2. கடமைகள்-------
விடை: ஒரு குடிமகனாக நம் நாட்டிற்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள் ஏராளம்.
3. வாழ்நாள் ------
விடை: வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்தவர் குன்றக்குடி அடிகளார்
4. சிந்தித்து -----------
விடை: ஒரு செயல் செய்வதற்கு முன் நன்றாகச் சிந்தித்து செயல்பட வேண்டும்.
குறு வினா
1. பொருளீட்டுவதை விடவும் பெரிய செயல் எது?
பொருளீட்டுவதைவிடப் பெரிய காரியம் அதை முறையாக அனுபவிப்பதும் கொடுத்து மகிழ்வதும் ஆகும்.
2. பொருளீட்டுவதன் நோக்கமாகக் குன்றக்குடி அடிகளார் கூறுவது யாது?
மற்றவர்களுக்கு வழங்கி மகிழ்வித்து மகிழ, வாழ்வித்து வாழப் பொருள் தேவை என்பதே பொருளீட்டலுக்கான நோக்கமாகும்.
சிறு வினா
1. ஒப்புரவுக்கு அடிகளார் தரும் விளக்கம் யாது?
❖ ஒருவர் செய்யும் செயலானது அது தரும் பயனைவிட, செய்பவரின் மனப்பாங்கு, உணர்வு ஆகியவற்றின் அடிப்படையிலேயே மதிப்பிடப்படுகிறது.
❖ தரத்தைக் காட்டுகிறது. ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுதல் மட்டும் போதாது, உதவி செய்தல் எதற்காக? தற்காப்புக்காகவும் இலாபத்திற்காகவும் கூட உதவி செய்யலாமே!
❖ சொல்லப்போனால் இத்தகைய உதவிகள் ஒருவகையில் வாணிகம் போலத்தான்.
❖ அதே உதவியைக் கட்டுப்பாட்டு உணர்வுடன், உதவி பெறுபவரை உறவுப்பாங்கில் எண்ணி, உரிமை உடையவராக நினைந்து, உதவிசெய்தவதற்குப் பதில் அவரே எடுத்துக் கொள்ளும் உரிமையை வழங்குதல் ஒப்புரவு ஆகும்.
2. ஊருணியையும் மரத்தையும் எடுத்துக்காட்டிக் குன்றக்குடி அடிகளார் கூறும் செய்திகள் யாவை?
❖ ஊருணி, தேவைப்படுவோர் அனைவரும் தண்ணீர் எடுத்துக் குடிப்பதற்கு உரிமை உடையது, அதைத் தடுப்பார் யாருமில்லை.
❖ ஊருணித்தண்ணீர் எடுத்து அனுபவிக்கப்படுவது. பழுத்த பயன்மரத்தின் கனிகளை அனைவரும் எடுத்து அனுபவிக்கலாம்.
❖ பயன்மரம் பழங்களைத் தருவது உரிமை எல்லைகளைக் கவனத்தில் கொண்டல்ல.
❖ மருந்துமரம் உதவி செய்தலில் தன்னை மறந்த நிலையிலான பயன்பாட்டு நிலை ஒன்றே காணப்பெறுகிறது.
❖ நோயுடையார் எல்லாரும் பயன்படுத்தலாம். ஒப்புரவை விளக்கப் பயன்படுத்தியுள்ள இந்த உவமைகள் இன்றும் பயன்படுத்தலாம்.
சிந்தனை வினா
ஒப்புரவுக்கும் உதவிசெய்தலுக்கும் வேறுபாடு யாது?
உதவி பெறுபவரை உறவுப்பாங்கில் எண்ணி, உரிமை உடையவராக நினைத்து, உதவி செய்தவதற்குப் பதில் அவரே எடுத்துக் கொள்ளும் உரிமையை வழங்குதல் ஒப்புரவு. இல்லை என்று கேட்போருக்கு நாமே அவருக்குத் தேவையானதைக் கொடுப்பது உதவி செய்தல். ஒப்புரவில் பெறுபவர் உறவினர். உதவி செய்தலில் பெறுபவர் ஏழைகள் அனைவரும்.
கற்பவை கற்றபின்
பிறருக்காக உழைத்துப் புகழ்பெற்ற சான்றோர்கள் பற்றிய செய்திகளைத் திரட்டி வந்து வகுப்பறையில் பகிர்க.
❖ பாரி, திருமுடிக்காரி, வல்வில் ஓரி, ஆய் அண்டிரன், பேகன், நள்ளி, அதியமான் நெடுமானஞ்சி ஆகிய கடை எழுவள்ளல்கள் பிறருக்காவே தம்வாழ்நாள் முழுதும் வாழ்ந்தவர்கள்.
❖ சீதக்காதி ஏழைகளுக்காகவே வாழ்ந்தவர்.
❖ காந்தியடிகள் நம் நாட்டு மக்களுக்காவே வாழ்ந்தவர்.
❖ அம்பேத்கர், பெரியார், அயோத்திதாசப் பண்டிதர் தாழ்த்தப்பட்ட மக்கள் நலனுக்காகவே வாழ்ந்தவர்.
❖ அன்னை தெரஸா தொழுநோயாளிகள் மற்றும் ஆதரவற்றோருக்காகவே வாழ்ந்தவர்.