Home | 8 ஆம் வகுப்பு | 8வது தமிழ் | கவிதைப்பேழை: புத்தியைத் தீட்டு: கேள்விகள் மற்றும் பதில்கள்

ஆலங்குடி சோமு | இயல் 4 | 8 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: புத்தியைத் தீட்டு: கேள்விகள் மற்றும் பதில்கள் | 8th Tamil : Chapter 4 : Kalvi karaiyila

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : கல்வி கரையில

கவிதைப்பேழை: புத்தியைத் தீட்டு: கேள்விகள் மற்றும் பதில்கள்

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : கல்வி கரையில : கவிதைப்பேழை: புத்தியைத் தீட்டு: கேள்விகள் மற்றும் பதில்கள் - ஆலங்குடி சோமு : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மதிப்பீடு

 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. என் நண்பர் பெரும் புலவராக இருந்தபோதும் ---------- இன்றி வாழ்ந்தார்.

அ) சோம்பல்

ஆ) அகம்பாவம்

இ) வருத்தம்

ஈ) வெகுளி

[விடை : ஆ) அகம்பாவம்]

 

2. 'கோயிலப்பா ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) கோ + அப்பா

ஆ) கோயில் + லப்பா

இ) கோயில் + அப்பா

ஈ) கோ + இல்லப்பா

[விடை : இ) கோயில் + அப்பா]

 

3. பகைவன் + என்றாலும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ) பகைவென்றாலும்

ஆ) பகைவனென்றாலும்

இ) பகைவன்வென்றாலும்

ஈ) பகைவனின்றாலும்

[விடை : ஆ) பகைவனென்றாலும்]

 

குறுவினா

1. யாருடைய உள்ளம் மாணிக்கக் கோயில் போன்றது?

விடை

மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கோயில் போன்றது ஆகும்.

 

2. பகைவர்களிடம் நாம் நடந்துகொள்ள வேண்டிய முறை யாது?

விடை

பகைவர்களிடம் நாம் நடந்து கொள்ள வேண்டிய முறை அன்பு காட்டுவது ஆகும்.

 

சிறுவினா

புத்தியைத் தீட்டி வாழ வேண்டிய முறைகளாகக் கவிஞர் கூறுவன யாவை?

விடை

கண்ணியம் தவறாமல் எடுத்த செயலில் தன்னுடைய திறமையைக் காட்ட வேண்டும்.

ஆத்திரம் கண்ணை மறைத்து விடும் என்பதால் அறிவுக்கு வேலை கொடுத்து அமைதி காக்க வேண்டும்.

பகைவன் அடிக்க வந்தாலும், அவரிடம் அன்பு காட்டி அரவணைக்க வேண்டும்.

மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கல் போன்றது.

இதனை மறந்து வாழ்ந்தவன் வாழ்க்கை, தடம் தெரியாமல் மறைந்து போய்விடும்.

வாழும் வாழ்க்கை சில காலமே! அதற்குள் என் அகம்பாவம்? இதனால் எந்த இலாபமும் கிடைக்காது. எனவே, அகம்பாவத்தைக் காட்டாமல் வாழ வேண்டும்.

இவற்றை எண்ணிப்பார்த்தால் வாழ்க்கை தெளிவாகும்.

 

சிந்தனை வினா

உங்கள் மீது பிறர் வெறுப்புக் காட்டினால் அவர்களை எவ்வாறு எதிர்கொள்வீர்கள்?

விடை

முதலில் வெறுப்புக்குக் காரணம் என்ன? என்பதைப் பற்றி ஆராய்வேன்.

அவரிடம் சென்று அன்பாக, என் மீது நீங்கள் வெறுப்பு காட்ட, நான் செய்துள்ள பிழையை மன்னித்து, என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்.

நான் மனம் புண்படும்படியாகப் பேசியிருந்தால், அதனைப் பொறுத்துக் கொண்டு எனக்கு நல்வழி காட்டுங்கள் என்று கூறுவேன்.

 


கற்பவை கற்றபின்


அறிவின் பெருமையை விளக்கும் பழமொழிகளைத் திரட்டுக.

விடை

அறிவே ஆற்றல்

அறிவுடையார் எல்லாம் உடையார்

அறிவே ஆயுதம்

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அறிவே பலம்

அறிவே ஆனந்தம்

பேரறிவு பெருமை தரும்

Tags : by Alangudi Somu | Chapter 4 | 8th Tamil ஆலங்குடி சோமு | இயல் 4 | 8 ஆம் வகுப்பு தமிழ்.
8th Tamil : Chapter 4 : Kalvi karaiyila : Poem: Bhutiyai thitu: Questions and Answers by Alangudi Somu | Chapter 4 | 8th Tamil in Tamil : 8th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : கல்வி கரையில : கவிதைப்பேழை: புத்தியைத் தீட்டு: கேள்விகள் மற்றும் பதில்கள் - ஆலங்குடி சோமு | இயல் 4 | 8 ஆம் வகுப்பு தமிழ் : 8 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : கல்வி கரையில