Home | 8 ஆம் வகுப்பு | 8வது தமிழ் | கவிதைப்பேழை: கல்வி அழகே அழகு: கேள்விகள் மற்றும் பதில்கள்

குமரகுருபரர் | இயல் 4 | 8 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: கல்வி அழகே அழகு: கேள்விகள் மற்றும் பதில்கள் | 8th Tamil : Chapter 4 : Kalvi karaiyila

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : கல்வி கரையில

கவிதைப்பேழை: கல்வி அழகே அழகு: கேள்விகள் மற்றும் பதில்கள்

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : கல்வி கரையில : கவிதைப்பேழை: கல்வி அழகே அழகு: கேள்விகள் மற்றும் பதில்கள் - குமரகுருபரர் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மதிப்பீடு

 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. கற்றவருக்கு அழகு தருவது.

அ) தங்கம்

ஆ) வெள்ளி

இ) வைரம்

ஈ) கல்வி

[விடை : ஈ) கல்வி]

 

2. 'கலனல்லால்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) கலன் + லல்லால்

ஆ) கலம் + அல்லால்

இ) கலன் + அல்லால்

ஈ) கலன் + னல்லால்

[விடை : இ) கலன் + அல்லால்]

 

சொற்றொடரில் அமைத்து எழுதுக.

1. அழகு - கல்வியே உண்மையான அழகு.

2. கற்றவர் - கல்வி கற்றவரே உலகில் உயர்ந்தவர்.

3. அணிகலன் - மனிதனுக்கு உண்மையான அணிகலன் கல்வி ஆகும்.

 

குறுவினா

யாருக்கு அழகு செய்ய வேறு அணிகலன்கள் தேவையில்லை?

விடை

கல்வி கற்றவருக்கு அழகு செய்ய வேறு அணிகலன்கள் தேவையில்லை.

 

சிறுவினா

நீதிநெறி விளக்கப்பாடல் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.

விடை

● ஒளிவீசும் மணிகளால் செய்யப்பட்ட அணிகலன்களுக்கு மேலும் அழகுபடுத்த வேறு அணிகலன்கள் தேவையில்லை.

● அதுபோலக் கல்வி கற்றவருக்கு அக்கல்வியே அழகு தரும்.

● அதனால் அழகுபடுத்தும் அணிகலன்கள் கற்றவருக்குத் தேவையில்லை.

 

சிந்தனை வினா

கல்வியின் பயன்களாக நீங்கள் கருதுவனவற்றை எழுதுக.

விடை

● நம்முள் புதைந்து கிடக்கும் ஆற்றலை வெளிக்கொண்டு வரும்.

● பகுத்து அறியும் அறிவைத் தரும்.

● துன்பம் வரும் முன் தடுத்து நிறுத்தும் அறிவைத் தரும்.

● மெய்ப்பொருள் காணும் அறிவினைத் தரும்.

 

கற்பவை கற்றபின்

 

 

1. கல்வி குறித்து வழங்கப்படும் பழமொழிகளைத் தொகுத்து எழுதுக.

விடை

● கல்வி கரையில கற்பவர் நாள் சில.

● கல்வி அழகே அழகு.

● கத்த (கற்ற) வித்த(வித்தை) காலத்துக்கு உதவும்.

● நூறு நாள் கத்தது (கற்றது), ஆறு நாள் விடப்போகும்.

● கற்க கசடற.

● இளமையில் கல்.

● நூல் பல கல்.

 

2. கற்றோரின் சிறப்புகளைப் பற்றிப் பிற நூல்களில் இடம்பெற்ற பாடல்களைத் தொகுத்து எழுதுக.

விடை

கண்ணுடையோர் என்பவர் கற்றோர் முகத்து இரண்டு

புண்ணுடையார் கல்லா தவர். – திருக்குறள்

 

நிறைகுடம் நீர்தளும்பல் இல். – பழமொழி

 

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கில்

மன்னனில் கற்றோன் சிறப்புடையன் – மன்னர்க்கு

தன்தேச மல்லால் சிறப்பில்லை

கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு. – மூதுரை

 

3. பின்வரும் நாலடியார் பாடலைப் படித்துச் சுவைக்க.

கல்வி கரையில கற்பவர் நாள்சில

மெல்ல நினைக்கின் பிணிபல - தெள்ளிதின்

ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்

பாலுண் குருகின் தெரிந்து

Tags : by Kumarakurubarar | Chapter 4 | 8th Tamil குமரகுருபரர் | இயல் 4 | 8 ஆம் வகுப்பு தமிழ்.
8th Tamil : Chapter 4 : Kalvi karaiyila : Poem: Kalvi azhage azhagu: Questions and Answers by Kumarakurubarar | Chapter 4 | 8th Tamil in Tamil : 8th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : கல்வி கரையில : கவிதைப்பேழை: கல்வி அழகே அழகு: கேள்விகள் மற்றும் பதில்கள் - குமரகுருபரர் | இயல் 4 | 8 ஆம் வகுப்பு தமிழ் : 8 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : கல்வி கரையில