ஆலங்குடி சோமு | இயல் 4 | 8 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: புத்தியைத் தீட்டு | 8th Tamil : Chapter 4 : Kalvi karaiyila
இயல் நான்கு
கவிதைப்பேழை
புத்தியைத் தீட்டு
நுழையும்முன்
அறிவே ஆற்றல் என்பது ஆன்றோர் கூற்று. அறிவும் உழைப்புமே ஒரு
மனிதனை வாழ்வில் உயரச் செய்யும். வன்முறையால் பிறரை வெல்வது சரியான செயலன்று. அறிவினாலும்
அன்பினாலும் பிறரை வெல்லும் வெற்றியே நமக்குப் பெருமை தரும். இக்கருத்துகளை விளக்கும்
பாடல் ஒன்றை அறிவோம்.
கத்தியைத் தீட்டாதே - உந்தன்
புத்தியைத் தீட்டு
கண்ணியம் தவறாதே - அதிலே
திறமையைக் காட்டு
ஆத்திரம் கண்ணை
மறைத்திடும் போது
அறிவுக்கு வேலை கொடு - உன்னை
அழித்திட வந்த
பகைவன் என்றாலும்
அன்புக்குப் பாதை விடு! (கத்தியைத்)
மன்னிக்கத் தெரிந்த
மனிதனின் உள்ளம்
மாணிக்கக் கோயிலப்பா - இதை
மறந்தவன் வாழ்வு
தடம் தெரியாமல்
மறைந்தே போகுமப்பா! (கத்தியைத்)
இங்கே இருப்பது சில காலம்
இதற்குள் ஏனோ அகம்பாவம்
இதனால் உண்டோ ஒரு லாபம் - இதை
எண்ணிப்பாரு தெளிவாகும்! (சுத்தியைத்)
- ஆலங்குடி சோமு
சொல்லும் பொருளும்
தடம் - அடையாளம்
அகம்பாவம் – செருக்கு
நூல் வெளி
ஆலங்குடி சோமு திரைப்படப் பாடல் ஆசிரியராகப் புகழ்பெற்றவர் சிவகங்கை
மாவட்டத்திலுள்ள ஆலங்குடி என்னும் ஊரில் பிறந்தவர். தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.
இவரது திரையிசைப்பாடல் ஒன்று இங்குத் தரப்பட்டுள்ளது.