Home | 7 ஆம் வகுப்பு | 7வது தமிழ் | கவிதைப்பேழை: இன்பத்தமிழ்க் கல்வி: கேள்விகள் மற்றும் பதில்கள்

பாரதிதாசன் | பருவம் 2 இயல் 2 | 7 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: இன்பத்தமிழ்க் கல்வி: கேள்விகள் மற்றும் பதில்கள் | 7th Tamil : Term 2 Chapter 2 : Othuvadhu oliyael

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : ஓதுவது ஒழியேல்

கவிதைப்பேழை: இன்பத்தமிழ்க் கல்வி: கேள்விகள் மற்றும் பதில்கள்

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : ஓதுவது ஒழியேல் : கவிதைப்பேழை: இன்பத்தமிழ்க் கல்வி: கேள்விகள் மற்றும் பதில்கள் - பாரதிதாசன் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

(இயல் 2 : கவிதைப் பேழை : இன்பத்தமிழ்க் கல்வி)


பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 

1. பெண்களுக்கு நிகராகப் பாரதிதாசன் கூறுவது ________

அ) மயில் 

ஆ) குயில் 

இ) கிளி 

ஈ) அன்னம்

[விடை : அ. மயில்] 


2. பின்வருவனவற்றுள் ‘மலை'யைக் குறிக்கும் சொல் 

அ) வெற்பு 

ஆ) காடு 

இ) கழனி 

ஈ) புவி 

[விடை : அ. வெற்பு] 


3. ‘ஏடெடுத்தேன்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________ 

அ) ஏடே + தேன்

ஆ) ஏட்டு + எடுத்தேன் 

இ) ஏடு + எடுத்தேன்

ஈ) ஏ + டெடுத்தேன்

[விடை : இ. ஏடு + எடுத்தேன்]


4. 'துயின்றிருந்தார்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________

அ) துயின்று + இருந்தார்

ஆ) துயில் + இருந்தார் 

இ) துயின்றி + இருந்தார்

ஈ) துயின் + இருந்தார்

[விடை : அ. துயின்று + இருந்தார்]


5. என்று + உரைக்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது ________

அ) என்றுஉரைக்கும்

ஆ) என்றிரைக்கும் 

இ) என்றரைக்கும்

ஈ) என்றுரைக்கும்

[விடை : ஈ. என்றுரைக்கும்]


பொருத்துக.

வினா

1. கழனி - கதிரவன் 

2. நிகர் - மேகம்

3. பரிதி - சமம்

4. முகில் - வயல்

விடை 

1. கழனி - வயல் 

2. நிகர் - சமம் 

3. பரிதி - கதிரவன் 

4. முகில் - மேகம் 


குறு வினா 

1. பாரதிதாசனின் மனதைக் கவர முயன்ற இயற்கைப் பொருள்கள் யாவை?

வானம் 

நீரோடை 

தாமரை 

காடு 

வயல் 

மேகம் 

தென்றல் 

மயில் 

அன்னம் 

கதிரவன் 


2. தமிழ் மொழிக்கல்வி பயில்வதால் உண்டாகும் நன்மைகள் எவையெனப் பாரதிதாசன் குறிப்பிடுகின்றார்? 

தமிழ்நாட்டு மக்களின் அறியாமை தூக்கம் களையும், 

வாழ்வில் துன்பங்கள் நீங்கும், 

நஞ்சில் தூய்மை உண்டாகும், வீரம் வரும். 

- ஆகியவற்றைத் தமிழ் மொழிக்கல்வி பயில்வதால் உண்டாகும் நன்மைகளாகப் பாரதிதாசன் குறிப்பிடுகின்றார்.


சிறு வினா

1. 'இன்பத்தமிழ்க் கல்வி' - பாடலின் மையக்கருத்தை நும் சொந்த நடையில் எழுதுக.

பாரதிதாசன் கவிதை எழுத ஏட்டினை எடுத்தார். வானம் தன்னைக் கவிதையாக எழுதும்படிக் கூறியது. நீரோடை, தாமரை, காடு, வயல், மேகம் ஆகியன அவரைக் கவர்ந்து தங்களைக் கவிதை எழுதும்படி அவரிடம் வேண்டியது.மயில் போன்ற பெண்கள் அன்பைக் கவிதையாக எழுதும்படிக் கூறினர். தென்றல், மயில், அன்னம், கதிரவன். வீரர்கள் ஆகியனவும் அவரிடம் கவிதை எழுத வேண்டின.

ஆனால் துன்பத்தில் கிடக்கும் தமிழ்நாட்டு மக்கள் அறியாமையில் தூங்கிக் கொண்டு இருக்கின்றார்கள். அதனை நீங்க இன்பத்தமிழ்க் கல்வி கற்க வேண்டும். இந்த நிலை ஏற்பட்டால் வாழ்வில் துன்பம் நீங்கும். மனதில் தூய்மை உண்டாகும். வீரம் வரும்.


சிந்தனை வினா

1. தமிழ் மொழிக்கல்வி பயில்வதால் ஏற்படும் நன்மைகளாக நீங்கள் கருதுவனவற்றைத் தொகுத்து எழுதுக. 

எளிதில் பொருள் விளங்கி நன்கு பாடப்புரிதல் ஏற்படும். 

பழந்தமிழ் கலை, பண்பாடு, மரபு ஆகியன காக்கப்படும்.  

தொன்மையையும் வரலாற்றையும் நன்கு உணரலாம். 

விழுமிய தமிழ்ச்சிந்தனைகளை அறியலாம்.



கற்பவை கற்றபின்


1. இயற்கைக்காட்சி குறித்து நான்கு வரிகளில் கவிதை எழுதுக. 

"பூமித் தாயே! பசுமை போர்த்தியவளே!

நீலக் கடலாய் அலங்கரித்தவளே! 

கதிரவன் காட்சியில்.... பொன் தகடானவளே!

உன்னரும் வளத்தால் இன்னுயிர்கள் வாழ்கின்றனவே!” 


2. 'தாய்மொழி வழிக் கல்வியே சிறந்தது' என்பதை வகுப்பில் கலந்துரையாடுக.

ஆங்கில வழிக்கல்வி படித்தால் மட்டுமே உயர முடியும் என்றெண்ணிக் கொண்டிருப்போரே! கவனியுங்கள். வாழ வந்த ஆங்கிலேயரைக்கூட விரட்டினோம். ஆனால், ஆங்கில மொழியை விரட்டாமல் அதன் மீது மோகம் கொண்டு அதன் வழியில் கற்க அலைகின்றோம். இது எப்படி இருக்கின்றது தெரியுமா? தன் தாயைப் புறந்தள்ளிவிட்டு, அயலாம் தாயைப் போற்றுவது போலத்தான். எல்லா வளமும் புதைந்துள்ள மொழி நம் தாய்மொழி. அதன் வழியிலேயே நாம் கல்வி பெறுவது சிறப்பு.ஒளவையாரும் கம்பரும் சேக்ஸ்பியரும் காந்தியடிகளும் தாகூரும் எப்படிச் சிறந்தனர் தெரியுமா? அனைவரும் அவரவர் தாய்மொழியால் தான் சிறந்தனர். எனவே, சிறந்த நம் தாய்மொழியிலேயே கல்வி பெறுவோம்.



Tags : by Bharathidasan | Term 2 Chapter 2 | 7th Tamil பாரதிதாசன் | பருவம் 2 இயல் 2 | 7 ஆம் வகுப்பு தமிழ்.
7th Tamil : Term 2 Chapter 2 : Othuvadhu oliyael : Poem: Inpa Tamil kalvi: Questions and Answers by Bharathidasan | Term 2 Chapter 2 | 7th Tamil in Tamil : 7th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : ஓதுவது ஒழியேல் : கவிதைப்பேழை: இன்பத்தமிழ்க் கல்வி: கேள்விகள் மற்றும் பதில்கள் - பாரதிதாசன் | பருவம் 2 இயல் 2 | 7 ஆம் வகுப்பு தமிழ் : 7 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : ஓதுவது ஒழியேல்