Home | 8 ஆம் வகுப்பு | 8வது தமிழ் | கவிதைப்பேழை: ஓடை: கேள்விகள் மற்றும் பதில்கள்

வாணிதாசன் | இயல் 2 | 8 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: ஓடை: கேள்விகள் மற்றும் பதில்கள் | 8th Tamil : Chapter 2 : Idilla iyarkai

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : ஈடில்லா இயற்கை

கவிதைப்பேழை: ஓடை: கேள்விகள் மற்றும் பதில்கள்

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : ஈடில்லா இயற்கை : கவிதைப்பேழை: ஓடை: கேள்விகள் மற்றும் பதில்கள் - வாணிதாசன் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மதிப்பீடு

 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பள்ளிக்குச் சென்று கல்வி ……………………. சிறப்பு.

அ) பயிலுதல்

ஆ) பார்த்தல்

இ) கேட்டல்

ஈ) பாடுதல்

[விடை : அ) பயிலுதல்]

 

2. செஞ்சொல் மாதரின் வள்ளைப்பாட்டிற்கேற்ப முழவை மீட்டுவது …………………….

அ) கடல்

ஆ) ஓடை

இ) குளம்

ஈ) கிணறு

[விடை : ஆ) ஓடை]

 

3. 'நன்செய்' - என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) நன் + செய்

ஆ) நன்று + செய்

இ) நன்மை + செய்

ஈ) நல் + செய்

[விடை : இ) நன்மை + செய்]

 

4. 'நீளுழைப்பு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) நீளு + உழைப்பு

ஆ) நீண் + உழைப்பு

இ) நீள் + அழைப்பு

ஈ) நீள் + உழைப்பு

[விடை : ஈ) நீள் + உழைப்பு]

 

5. சீருக்கு + ஏற்ப என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ) சீருக்கு ஏற்ப

ஆ) சீருக்கேற்ப

இ) சீர்க்கேற்ப

ஈ) சீருகேற்ப

[விடை : ஆ) சீருக்கேற்ப]

 

6. ஓடை+ஆட - என்பதனைச் சேர்த்தெழுதல் கிடைக்கும் சொல்

அ) ஓடைஆட

ஆ) ஓடையாட

இ) ஓடையோட

ஈ) ஓடைவாட

[விடை : ஆ) ஓடையாட]

 

குறுவினா

1. ஓடை எவ்வாறு ஓடுவதாக வாணிதாசன் கூறுகிறார்?

விடை

ஓடை கற்களில் உருண்டும், தவழ்ந்தும், நெளிந்தும், சலசல என்று ஒலியெழுப்பியும் அலைகளால் கரையை மோதியும், இடையறாது ஓடுகிறது.

 

2. ஓடை எழுப்பும் ஒலிக்கு எதனை உவமையாக வாணிதாசன் குறிப்பிடுகிறார்?

விடை

ஓடை எழுப்பும் ஒலி, பெண்கள் பாடும் வள்ளைப்பாட்டின் சிறப்புக்கேற்ப முழவை முழக்குவதற்கு உவமையாக வாணிதாசன் கூறுகிறார்.

 

சிறுவினா

ஓடையின் பயன்களாக வாணிதாசன் கூறுவன யாவை?

விடை

(i) நன்செய், புன்செய் நிலங்களுக்கு நீர்வளம் தந்து பயிர்களைச் செழிக்கச் செய்கிறது.

(ii) விளைந்த பயிர்கள் மூலம் உணவு தந்து நாட்டின் வறுமையைப் போக்குகிறது. கொஞ்சி மகிழும் அலைகளால் கரையை மோதுகிறது. குளிர்ச்சியைத் தரும் புற்களுக்கு இன்பம் சேர்க்கிறது.

(iii) நெஞ்சத்தில் இரக்கம் இல்லாதவர் வெட்கப்படுமாறு இடையறாது ஓடித் தன் உழைப்பைக் கொடையாகத் தருகிறது.

 

சிந்தனை வினா

வள்ளைப்பாட்டு என்பது நெல்குத்தும் பொழுது பாடப்படும் பாடலாகும். இதுபோல் வேறு எந்தெந்தச் சூழல்களில் என்னென்ன பாடல்கள் பாடப்படுகின்றன?

விடை



 

கற்பவை கற்றபின்



மலை, அருவி, ஓடை, மரங்கள், வயல்கள் ஆகியன இடம்பெறுமாறு ஓர் இயற்கைக் காட்சியை வரைந்து வண்ணம் தீட்டி மகிழ்க.


 

Tags : by Vanidasan | Chapter 2 | 8th Tamil வாணிதாசன் | இயல் 2 | 8 ஆம் வகுப்பு தமிழ்.
8th Tamil : Chapter 2 : Idilla iyarkai : Poem: Odai: Questions and Answers by Vanidasan | Chapter 2 | 8th Tamil in Tamil : 8th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : ஈடில்லா இயற்கை : கவிதைப்பேழை: ஓடை: கேள்விகள் மற்றும் பதில்கள் - வாணிதாசன் | இயல் 2 | 8 ஆம் வகுப்பு தமிழ் : 8 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : ஈடில்லா இயற்கை