உடுமலை நாராயணகவி | பருவம் 1 இயல் 1 | 7 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: ஒன்றல்ல இரண்டல்ல: கேள்விகள் மற்றும் பதில்கள் | 7th Tamil : Term 1 Chapter 1 : Amutha Tamil
(இயல் – 1 : கவிதைப் பேழை : ஒன்றல்ல இரண்டல்ல)
பாடநூல் மதிப்பீட்டு வினா
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம் ----------
அ) கலம்பகம்
ஆ) பரிபாடல்
இ) பரணி
ஈ) அந்தாதி
[விடை : இ. பரணி]
2. வானில் ----------- கூட்டம் திரண்டால் மழை பொழியும்.
அ) அகில்
ஆ) முகில்
இ) துகில்
ஈ) துயில்
[விடை : ஆ. முகில்]
3. “இரண்டல்ல' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ----------
அ) இரண்டு + டல்ல
ஆ) இரண் + அல்ல
இ) இரண்டு + இல்ல
ஈ) இரண்டு + அல்ல
[விடை : ஈ. இரண்டு + அல்ல]
4. ‘தந்துதவும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ----------
அ) தந்து + உதவும்
ஆ) தா + உதவும்
இ) தந்து + தவும்
ஈ) தந்த + உதவும்
[விடை : அ. தந்து + உதவும்]
5. ஒப்புமை + இல்லாத என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) ஒப்புமைஇல்லாத
ஆ) ஒப்பில்லாத
இ) ஒப்புமையில்லாத
ஈ) ஒப்புஇல்லாத
[விடை : இ. ஒப்புமையில்லாத]
குறுவினா
1. தமிழ்நாட்டின் இயற்கை வளங்களாகக் கவிஞர் கூறுவன யாவை?
❖ தமிழ்நாட்டில் வீசும் தென்றலில் தேன் மணம் கமழும்.
❖ சுவைமிகுந்த பழங்களும் தங்கம் போன்ற தானியக் கதிர்களும் விளையும்.
❖ தமிழ்நாட்டின் நன்செய் நிலவளம் ஒன்றிரண்டல்ல பலவாகும்.
2. 'ஒன்றல்ல இரண்டல்ல' - பாடலில் இடம்பெற்றுள்ள வள்ளல்கள் குறித்த செய்திகளை எழுதுக.
❖ முல்லைக்குத் தேர் தந்த வள்ளல் வேள்பாரி.
❖ புலவரின் சொல்லுக்குத் தன் தலையையே தரத் துணிந்தவன் குமண வள்ளல்.
சிறுவினா
தமிழுக்கு வளம் சேர்க்கும் இலக்கிய வகைகளாகக் கவிஞர் கூறுவன யாவை?
❖ பகைவரை வென்று பாடுவது பரணி இலக்கியம்.
❖ பரிபாடல், கலம்பக நூல்கள், எட்டுத்தொகை, திருக்குறள், சங்க இலக்கியங்கள் - ஆகியன தமிழுக்கு வளம் சேர்க்கும் இலக்கிய வகைகளாகக் கவிஞர் கூறுகிறார்.
சிந்தனை வினா
தமிழில் அற இலக்கியங்கள் மிகுதியாகத் தோன்றக் காரணம் என்ன?
❖ சங்ககாலத்தின் இறுதிப்பகுதி ஆடம்பரமும் ஆரவாரமும் மிக்கது.
❖ கலை என்ற பெயரில் ஒழுக்கக்கேடுகள் தலைதூக்கின.
❖ தமிழகத்தின் அகப்புற ஒழுக்கங்கள் பாதுகாக்கப்படாமல் ஒதுக்கப்பட்டன.
❖ குழப்பமான அச்சூழலில் நீதியும் அறமும் தேவைப்பட்டது.
❖ எனவே, தமிழில் அற இலக்கியங்கள் மிகுதியாகத் தோன்றின.
கற்பவை கற்றபின்
1. தமிழுக்குக் கொடை கொடுத்த வள்ளல்கள் பற்றிய செய்திகளைத் திரட்டுக.
1. தமிழ் இலக்கியங்கள் தோன்ற உதவிய வள்ளல்களைத் தமிழுக்குக் கொடை கொடுத்த வள்ளல்கள் எனலாம்.
❖ அதியன் (ஔவைக்கு உதவியவன்)
❖ யானைக்கட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை (ஐங்குறு நூறு தொகுப்பித்தவன்)
❖ பூரிக்கோ (குநற்தொகையைத் தொகுப்பித்தவன்)
❖ பன்னாடு தந்த மாறன் வழுதி (நற்றிணையைத் தொகுப்பித்தவன்)
❖ பாண்டியன் உக்கிரப்பெருவழுதி (அகநானூறு தொகுப்பித்தவன்)
❖ சடையப்ப வள்ளல் (கம்பராமாயணம் எழுத உதவியவர்)
❖ சீதக்காதி, அபுல் காசிம் (சீறாப்புராணம் எழுத உதவியவர்)
❖ சந்திரன் சுவர்க்கி (நளவெண்பா எழுத உதவியவர்)
2. தமிழில் உள்ள பல்வேறு இலக்கிய வடிவங்களின் பெயர்களைப் பட்டியலிடுக.
❖ கீழ்க்கணக்கு
❖ மேல்கணக்கு
❖ அறஇலக்கியம்
❖ பெருங்காப்பியம்
❖ சிறு காப்பியம்
❖ சிறுகதை
❖ மரபுக்கவிதை
❖ புதுக்கவிதை
❖ புதினம்
❖ நாட்டுப்புற இலக்கியம்