Home | 7 ஆம் வகுப்பு | 7வது தமிழ் | உரைநடை: பேச்சுமொழியும் எழுத்துமொழியும்: கேள்விகள் மற்றும் பதில்கள்

பருவம் 1 இயல் 1 | 7 ஆம் வகுப்பு தமிழ் - உரைநடை: பேச்சுமொழியும் எழுத்துமொழியும்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 7th Tamil : Term 1 Chapter 1 : Amutha Tamil

   Posted On :  13.07.2022 02:28 am

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 1 : அமுதத்தமிழ்

உரைநடை: பேச்சுமொழியும் எழுத்துமொழியும்: கேள்விகள் மற்றும் பதில்கள்

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 1 : அமுதத்தமிழ் : உரைநடை: பேச்சுமொழியும் எழுத்துமொழியும்: கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

(இயல் 1 : உரைநடை  உலகம் : பேச்சுமொழியும் எழுத்துமொழியும்)


பாடநூல் மதிப்பீட்டு வினா 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 

1. மொழியின் முதல் நிலை பேசுதல், -------- ஆகியனவாகும். 

அ) படித்தல் 

ஆ) கேட்டல் 

இ) எழுதுதல் 

ஈ) வரைதல் 

[விடை : ஆ. கேட்டல்] 


2. ஒலியின் வரிவடிவம் ------------ ஆகும்.

அ) பேச்சு 

ஆ) எழுத்து 

இ) குரல் 

ஈ) பாட்டு 

[விடை : ஆ. எழுத்து]


3. தமிழின் கிளை மொழிகளில் ஒன்று -----------

அ) உருது 

ஆ) இந்தி

இ) தெலுங்கு 

ஈ) ஆங்கிலம் 

[விடை : இ. தெலுங்கு]


4. பேச்சுமொழியை  -------- வழக்கு என்றும் கூறுவர்.

அ) இலக்கிய 

ஆ) உலக 

இ) நூல்

ஈ) மொழி

[விடை : ஆ. உலக]


சரியா தவறா என எழுதுக. 

1. மொழி காலத்திற்கு ஏற்ப மாறுகிறது.

விடை : சரி 

2. எழுத்துமொழி காலம் கடந்தும் நிலைத்து நிற்கிறது.

விடை : சரி 

3. பேசுபவரின் கருத்திற்கு ஏற்ப உடனடிச் செயல்பாட்டிற்கு உதவுவது எழுத்துமொழி.

விடை : சரி 

4. எழுத்து மொழியில் உடல் மொழிக்கு வாய்ப்பு அதிகம்.

விடை: தவறு 

5. பேச்சுமொழி சிறப்பாக அமையக் குரல் ஏற்றத்தாழ்வு அவசியம். 

விடை: சரி 


ஊடகங்களை வகைப்படுத்துக. 

வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள், நூல்கள், திரைப்படம், மின்னஞ்சல். 

எழுத்துமொழி : செய்தித்தாள், நூல்கள், மின்னஞ்சல். 

பேச்சுமொழி : வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம். 


குறு வினா 

1. மொழியின் இருவடிவங்கள் யாவை?

1. பேச்சுமொழி 

2. எழுத்துமொழி 


2. பேச்சுமொழி என்றால் என்ன?

வாயினால் பேசப்பட்டு பிறரால் உணரப்படுவது பேச்சுமொழி ஆகும். 


3. வட்டாரமொழி எனப்படுவது யாது?

இடத்திற்கு இடம் பேச்சுமொழி மாறுபடும். மனிதர்களின் வாழ்வியல் சூழலுக்கு ஏற்பவும் பேச்சுமொழி மாறுபடும். இவ்வாறு மாறுபடும் ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்களை வட்டார மொழி என்பர்.


சிறு வினா 

1. பேச்சுமொழிக்கும் எழுத்துமொழிக்கும் இடையே உள்ள வேறுபாடுகளுள் நான்கனை விளக்குக. 

பேச்சுமொழி

1. பேச்சுமொழியில் சொற்கள் குறுகி ஒலிக்கும்.

எ.கா. நல்லாச் சாப்டான்.

2. உணர்ச்சிக் கூறுகள் அதிகம்.

3. உடல்மொழி, குரல் ஏற்றத்தாழ்வுக்கு இடம் உண்டு.

4. திருத்தமான மொழிநடையில் அமைகிறது. 

எழுத்துமொழி 

1. எழுத்துமொழியில் சொற்கள் முழுமையாக எழுதப்படும்.

எ.கா. நன்றாகச் சாப்பிட்டான். 

2. உணர்ச்சிக் கூறுகள் குறைவு.

3. உடல்மொழி, குரல் ஏற்றத்தாழ்வுக்கு இடமில்லை. 

4. திருத்தமான மொழிநடையில் அமைவதில்லை. 


2. கிளைமொழிகள் எவ்வாறு உருவாகின்றன? 

ஒரே மொழியைப் பேசும் மக்கள் வெவ்வேறு இடங்களில் வாழ்கின்றனர். 

வாழும் இடத்தின் நில அமைப்பு, இயற்கைத்தடைகள் போன்றவற்றின் காரணமாக அவர்கள் பேசும் மொழியில் சிறிது சிறிதாக மாற்றம் ஏற்படும்.

  அவர்களுக்கு இடையே உள்ள தொடர்பு குறையும் போது இம்மாற்றங்கள் மிகுதியாகிப் புதிய மொழியாகப் பிரியும். அதுவே ‘கிளைமொழி' என்பர். 

கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய திராவிட மொழிகள் தமிழிலிருந்து பிரிந்து சென்ற கிளைமொழி ஆகும்.


சிந்தனை வினா

இலக்கியங்கள் காலம் கடந்தும் அழியாமல் வாழ்வதற்கு என்ன காரணம் என்று கருதுகிறீர்கள்? 

இலக்கியங்கள் காலத்தைக் காட்டும் கண்ணாடி என்பர். இலக்கியங்கள் தாம் தோன்றிய காலச் சூழலைக் காட்டுவதாலும் பண்பாடு, நாகரிகம், சமூக வாழ்க்கை ஆகியவற்றைக் காட்டுவதாலும் அவை அழியாமல் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 

வாழ்வோடு இணைந்த சுவை கொண்டு இலக்கியங்கள் படைக்கப்படுவதாலும் நீதிநெறிகளை முன்வைப்பதாலும் இன்றும் இலக்கியங்கள் எழுத்து வடிவில் இருப்பதாலும் இலக்கியங்கள் காலம் கடந்தும் அழியாமல் வாழ்கின்றன.


கற்பவை  கற்றபின்  


1. உங்கள் வீட்டில் பயன்படுத்தும் பேச்சுவழக்குத் தொடர்களுக்கு இணையான எழுத்து வழக்குத் தொடர்களை எழுதி வருக. 

(எ.கா.) 

பேச்சுமொழி - அம்மா பசிக்கிது எனக்குச் சோறு வேணும்.

எழுத்துமொழி - அம்மா! பசிக்கிறது. எனக்குச் சோறு வேண்டும். 

1. பேச்சுமொழி - வூட்டுக்கு போகனும்.

எழுத்துமொழி - வீட்டிற்குப் போக வேண்டும்.

2. பேச்சுமொழி - வவுறு நிறையா சாப்புடு. 

எழுத்துமொழி - வயிறு நிறைய சாப்பிடு. 

3. பேச்சுமொழி - இன்னிக்கு காத்தால வாங்கிட்டு வந்தே

எழுத்துமொழி - இன்றைக்குக் காலையில் வாங்கி வந்தேன். 

4. பேச்சுமொழி - தண்ணி கொண்டா

எழுத்துமொழி - தண்ணீர் கொண்டு வா. 


2. பேசும்போது சில நேரங்களில் சொற்களின் இறுதியில் உகரம் சேர்ந்து ஒலிப்பது உண்டு. ‘ஆ’ என்னும் எழுத்து இகரமாக மாறுவதும் உண்டு. அவ்வாறு ஒலிக்கும் சொற்களை எழுதி அவற்றுக்கு இணையான எழுத்து வழக்குச் சொற்களையும் எழுதுக. 

(எ.கா) சொல்லு - சொல், நில்லு - நில், வந்தியா - வந்தாயா?, சாப்ட்டியா - சாப்பிட்டாயா?




Tags : Term 1 Chapter 1 | 7th Tamil பருவம் 1 இயல் 1 | 7 ஆம் வகுப்பு தமிழ்.
7th Tamil : Term 1 Chapter 1 : Amutha Tamil : Prose: Pechu mozhiyum eluthu mozhiyum: Questions and Answers Term 1 Chapter 1 | 7th Tamil in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 1 : அமுதத்தமிழ் : உரைநடை: பேச்சுமொழியும் எழுத்துமொழியும்: கேள்விகள் மற்றும் பதில்கள் - பருவம் 1 இயல் 1 | 7 ஆம் வகுப்பு தமிழ் : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 1 : அமுதத்தமிழ்