பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | பருவம் 2 இயல் 1 | 6 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: துன்பம் வெல்லும் கல்வி: கேள்விகள் மற்றும் பதில்கள் | 6th Tamil : Term 2 Chapter 1 : Kanena thakum
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. மாணவர் பிறர் --------- நடக்கக் கூடாது.
அ) போற்றும்படி
ஆ) தூற்றும்படி
இ) பார்க்கும்படி
ஈ) வியக்கும்படி
[விடை : ஆ) தூற்றும்படி]
2. நாம் --------- சொல்படி நடக்க வேண்டும்.
அ) இளையோர்
ஆ) ஊரார்
இ) மூத்தோர்
ஈ) வழிப்போக்கர்
[விடை : இ) மூத்தோர்]
3. கைப்பொருள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது
அ) கையில் + பொருள்
ஆ) கைப் + பொருள்
இ) கை + பொருள்
ஈ) கைப்பு + பொருள்
[விடை : இ) கை + பொருள்]
4. மானம் + இல்லா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும்
சொல்
அ) மானம் இல்லா
ஆ) மானமில்லா
இ) மானமல்லா
ஈ) மானம்மில்லா
[விடை : ஆ) மானமில்லா]
சொற்றொடரில் அமைத்து எழுதுக
1. மனமாற்றம் – பெற்றோர் கூறிய அறிவுரையைக் கேட்டு கந்தன் மனமாற்றம் அடைந்தான்.
2. ஏட்டுக் கல்வி – ஏட்டுக் கல்வியுடன் தொழிற்கல்வியும் பெறுதல்
சிறப்பானது.
3. நல்லவர்கள் – நல்லவர்களுடன் சேர்ந்து பழகுதல் இன்பம் தரும்.
4. சோம்பல் – மாணவர்கள் சோம்பலின்றி சுறுசுறுப்புடன் இருக்க வேண்டும்.
குறுவினா
1. நாம் யாருடன் சேரக் கூடாது?
விடை
நாம் தன்மானம் இல்லாத கோழைகளுடன் சேரக் கூடாது.
2. எதை நம்பி வாழக் கூடாது?
விடை
பிறருடைய உழைப்பை நம்பி வாழக்கூடாது.
3. நாம் எவ்வாறு வாழவேண்டும் எனப் பட்டுக்கோட்டையார்
கூறுகிறார்?
விடை
இந்தப் பாடலின் முதல் இரு வரிகள் நினைவூட்டும்
திருக்குறள்.
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
4. நாம் எவ்வாறு வாழ்ந்தால் பெருமை பெறலாம்?
விடை
மேலான அறிஞர்கள் கூறிய அறிவுரைகளின்படி வாழ்ந்தால், அதன் மூலம்
வெற்றிகளையும் விருதுகளையும் பெருமையையும் பெறலாம்.
சிந்தனை வினா
நீங்கள் படித்து என்னவாக விரும்புகிறீர்கள்? ஏன்?
விடை
நான் படித்து மாவட்ட ஆட்சியராக விரும்புகிறேன்.
ஏனெனில் மாவட்ட ஆட்சியரின் பணி ஒரு மாவட்டத்தையே பாதுகாக்கும் பணியாகும். அவருடைய அனுமதியின்றி
பொது இடங்களைப் பயன்படுத்த முடியாது. எந்த அரசியல் கட்சிகளும் அவரை வழிநடத்த முடியாது.
மக்கள் வாழும் இருப்பிடங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்வது முதல் ஏரி, குளங்கள் போன்ற நீர் நிலைகளைத் தூர்வாருதல் வரை
அவருடைய இன்றியமையாதப் பணியாகும். அரசாங்கத்தின் கீழ் உள்ள அனைத்துத் துறைகளின் குறைகளை
அவர் நினைத்தால் சரி செய்ய இயலும். அரசுப் பள்ளிகள், தனியார்
பள்ளிகள் என அனைத்தும் அவருடைய கட்டுப்பாட்டில் இருக்கும்.
நான் மாவட்ட ஆட்சியரானால் அரசு மருத்துவமனையில்
உள்ள மருத்துவர் மற்றும் செவிலியர்களை அழைத்து வாரம் ஒருமுறை அல்லது மாதம் இருமுறை
நோய்களின் தன்மை குறித்தும் அவற்றிலிருந்து நாம் நம்மைப் பாதுகாப்பது குறித்தும் விழிப்புணர்வு
நிகழ்ச்சிகளை நடத்தச் செய்வேன். பள்ளிகளில் தூய்மையாக இருப்பதின் அவசியத்தைக் கூறி
பள்ளிகள் மூலம் மாணவர்களை அழைத்துக் கொண்டு சுத்தம் செய்ய வைப்பேன். நெகிழிப் பொருட்களைப்
பற்றி விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவேன்.
கற்பவை கற்றபின்
1. பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள பாடலை இசையுடன் பாடி மகிழ்க.
விடை
ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே – நீ
ஏன்படித்தோம் என்பதையும் மறந்து விடாதே
நாட்டின் நெறிதவறி நடந்து விடாதே – நம்
நல்லவர்கள் தூற்றும்படி வளர்ந்து விடாதே.
2. நூலகத்திற்குச் சென்று பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம்
எழுதிய வேறு பாடல் ஒன்றை எழுதி வருக.
விடை
மனித சக்தி
சந்திரனைத் தொட்டதின்று
மனித சக்தி
சரித்திரத்தை மீறியது
மனித சக்தி
இந்திரன்தான் விண்ணாட்டின்
அரசனென்ற
இலக்கணத்தை மாற்றியது
மனித சக்தி
இந்திரனும் முடியரசாய்
இருக்கொணாது
எனும் குறிப்பைக் காட்டியது
மனித சக்தி
மந்திரமா வெறுங்கதையா
இல்லை ; இல்லை
மனித சக்தி.
3. 'ஏட்டுக் கல்வி மட்டும் கல்வி இல்லை'
என்னும் தலைப்பில் பேசுக.
விடை
வணக்கம்! ‘ஏட்டுக் கல்வி மட்டும் கல்வி இல்லை’ என்ற தலைப்பில் பேச வந்துள்ளேன்.
ஏட்டுக் கல்வி மாணவர்களை ஒரு வகுப்பிலிருந்து அடுத்த வகுப்பிற்குச் செல்வதற்கான சோதனைப் பணிதான். முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களால் தனியாக ஓரிடத்திற்குச் செல்லவியலாது. சக மாணவர்களுடன் பழகுவதற்குக்கூடத் தெரியாது. பொது இடங்களில் எவ்வாறு இருக்க வேண்டும் என்று தெரியாது. பூட்டிய வீட்டைத் திறப்பதற்கு ஒரு திறவுகோல் எவ்வாறு பயன்படுகிறதோ அதே போன்று வாழ்க்கை என்ற வீட்டைத் திறப்பதற்கு ஏட்டுக்கல்வி பயன்படுகிறது. ஒருவன் படித்து மருத்துவராகவோ, பொறியாளராகவோ ஆவதற்கு மட்டும் கல்வி உறுதுணையாக இருக்கக் கூடாது. அவன் கற்ற கல்வி சமூக சிந்தனையை வளர்க்கும் விதமாக இருக்க வேண்டும். வாழ்க்கைக்குத் தேவையான திறன்களை வளர்க்கும் அனுபவக் கல்விதான் தேவை.