பருவம் 2 இயல் 1 | 6 ஆம் வகுப்பு தமிழ் - துணைப்பாடம்: நூலகம் நோக்கி... | 6th Tamil : Term 2 Chapter 1 : Kanena thakum
இயல் ஒன்று
விரிவானம்
நூலகம் நோக்கி...
நுழையும்முன்
கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு" என்பர். உலக அறிவை நாம் பெறுவதற்குப் பாடநூல்கள் மட்டும்
போதாது.பல்வேறு துறை சார்ந்த நூல்களைத் தேடிப் படிக்க வேண்டும். அதற்குத் துணைபுரிவன
நூலகங்களே ஆகும். நூலகங்கள் மாவட்ட நூலகம், கிளை நூலகம்,
ஊர்ப்புற நூலகம் பகுதி நேர நூலகம், தனியாள் நூலகம்
எனப் பலவகைப்படும். ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் நம் தமிழ்நாட்டில் உள்ளது.
அதைப்பற்றி அறிந்து கொள்வோம்.
அண்ணா நூற்றாண்டு நூலகம்
(ஆறாம் வகுப்பில் படிக்கும் மாணவர்கள்
ஒரு நாள் களப்பயணமாகச் சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு வருகின்றனர்.)
ஆசிரியர் : மாணவர்களே! இதோ, இது தான் அண்ணா நூற்றாண்டு நூலகம்.
மாணவர்கள் : ஆ! எவ்வளவு பெரிய நூலகம்!
ஆசிரியர் : ஆம். ஆசியக்கண்டத்திலேயே இரண்டாவது பெரிய நூலகம் இதுதான். தரைத்தளத்தோடு எட்டு
அடுக்குகளைக் கொண்டது. இதன் பரப்பளவு மட்டும் எட்டு ஏக்கர். சரி! சரி! வாருங்கள். உள்ளே
சென்று பார்க்கலாம்.
[அனுமதிக் கடிதத்தை ஆசிரியர் வரவேற்பாளரிடம்
கொடுக்கிறார். அவர் தலைமை நூலகருக்குத் தொலைபேசியில் 'ஆசிரியரும்
மாணவர்களும்' வந்துள்ள செய்தியைத் தெரிவிக்கின்றார். தலைமை நூலகர்
உதவி நூலகர் ஒருவரை வழிகாட்டியாக அனுப்பிவைக்கின்றார்.]
தெரிந்து
தெளிவோம்
ஆசியாக்
கண்டத்திலேயே மிகப் பெரிய நூலகம் சீனாவில் உள்ளது.
(சுவரில் மாட்டப்பட்டிருக்கும்
ஒரு படத்தை மாணவர்கன் பார்க்கின்றனர்.)
கவிதா : ஐயா, இந்தப்
படத்தில் இருப்பவர் யார்?
நூலகர் : இவர்தான் முனைவர் இரா. அரங்கநாதன்.
நூலக விதிகளை உருவாக்கியவர். இவர் இந்திய நூலகவியலின்
தந்தை (Father of Indian
library science) என்று அழைக்கப்படுகிறார்.
மாணவர்கனே! தரைத் தளத்தில் பார்வைத் திறன் குறைபாடு உடையோருக்கான
பிரிவு உள்ளது. அவர்கள் தொட்டுப் பார்த்துப் பிரெய்லி
நூல் படிப்பதற்கான பிரெய்லி நூல்கள் உள்ளள. கேட்டு அறிய ஒலி வடிவ நூல்கள், குறுந்தகடுகள் வடிவில் உள்ளன. அவர்களுக்கு உதவி
செய்யப் பணியாளர்களும் உள்ளனர். இங்கு பிரெய்லி எழுத்தில் நூல்களை உருவாக்கும் கருவியும்
உள்ளது. படியெடுக்கும் வசதியும் உண்டு.
கணியன் : என் பக்கத்து வீட்டு அண்ணாவிற்குப் பார்வைக் குறைபாடு இருந்தும் பட்டப்படிப்பு முடித்துள்ளார். அவருக்கு இது மிகவும் பயன்படும். அவரிடம் இந்தத் தகவலைக் கூறப் போகிறேன்.
நூலகர் : இதோ நகரும் படிக்கட்டு.
இதில் ஏறி நாம் முதல் தளத்திற்குச் செல்வோம் வாருங்கள். இந்த முதல் தளம் குழந்தைகளுக்காகச்
சிறப்பாக உருவாக்கப் பட்ட பகுதி. குழந்தைகள் மகிழ்ச்சியான சூழலில் படிப்பதற்காகச் செயற்கை
மரம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. சிறுவர்கள் மட்டும்மல்ல அனைவரின் மனத்தையும் கொள்ளைகொள்ளும்
பகுதி இது. இங்கு இருபது ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்லூடகக் குறுந்தகடுகள் குழந்தைகளுக்காகச்
சேகரித்து வைக்கப்பட்டு உள்ளன. பிற நாடுகளில் இருந்து திரட்டப்பட்ட ஐம்பது ஆயிரத்திற்கும்
மேற்பட்ட நூல்கள் இங்கு உள்ளன.
(குழந்தைகள் பிரிவில் அமைக்கப்பட்டிருந்த
நூல் அடுக்குகளையும் விளையாடும் இடத்தையும் மாணவர்கன் பார்த்து மகிழ்ந்தனர். அங்குக்
கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் இருந்த புத்தகங்களை ஆவலுடன் கையில் எடுத்து மகிழ்ச்சியுடன்
பார்த்தனர். அப்பிரிவை விட்டுப் பிரிய மனமில்லாமல் மாணவர்கள் நகர்ந்தனர்.)
இனியா : இந்த ஒரு தளத்தைப் பார்க்கவே இன்று ஒரு நாள் போதாது போலிருக்கிறதே!.
கவிதா : ஆம் இனியா, நீ கூறுவது சரிதான்.
(ஒவ்வொரு தளமாகப் பார்த்தபடி சென்று
ஏழாம் தளத்தை அடைகின்றனர்.) இதுதான் ஏழாம் தளம்.
நூலகர் : இத்தளத்தில் அரசு கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் உள்ளது. இங்குப்
பழைமையான ஓலைச் சுவடிகன் சேகரித்துப் பாதுகாத்து வைக்கப்பட்டு உள்ளன. இதே தளத்தில்
வரலாறு, புவியியல், சுற்றுலா நூல்களும் உள்ளன.
இங்கு அனைத்துவகைப் போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான நூல்கள்
உள்ளன. மின் நூலகமும் உன்னது. அனைத்துத் துறை சார்ந்த தரமான மின்நூல்களும் மின் இதழ்களும்
உள்ளன.
தெரிந்து
தெளிவோம்
அண்ணா
நூற்றாண்டு நூலகத்தின் எட்டுத் தளங்கள்
தரைத்தளம்
- சொந்த நூல் படிப்பகம், பிரெய்லி நூல்கள்
முதல்
தளம் - குழந்தைகள் பிரிவு,
பருவ இதழ்கள்
இரண்டாம்
தளம் - தமிழ்நூல்கள்
மூன்றாம்
தளம் - கணினி அறிவியல்,
தத்துவம், அரசியல் நூல்கள்
நான்காம்
தளம் - பொருளியல்,
சட்டம், வணிகவியல், கல்வி
ஐந்தாம்
தளம் - கணிதம், அறிவியல், மருத்துவம்
ஆறாம்
தளம் - பொறியியல்,
வேளாண்மை, திரைப்படக்கலை
ஏழாம்
தளம் - வரலாறு,சுற்றுலா,
அரசு கீழ்த்திசைச் சுவடிகன் நூலகம்
எட்டாம்
தளம் - கல்வித் தொலைக்காட்சி,
நூலகத்தின் அலுவலகப் பிரிவு
மாதவி : ஐயா, இங்குள்ள புத்தகங்களை நாம் வீட்டிற்கு
எடுத்துச் செல்ல முடியுமா?
ஆசிரியர் : முடியாது மாதவி இங்கேயே அமர்ந்துதான் படிக்க வேண்டும்.
பாத்திமா : இந்த நூலகத்தில் எங்கும் 'குளு
குளு' வென உள்ளதே!
தெரிந்து
தெளிவோம்
நூலகத்தில்
படித்து உயர்நிலை அடைந்தவர்களுள் சிலர்
அறிஞர்
அண்ணா,
ஜவஹர்வால் நேரு அண்ணல் அம்பேத்கர், காரல் மார்க்ஸ்
நூலகர் : ஆமாம். நூலகம் முழுவதுமே குளிர்பதன வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் இதே வசதியுடன் கூட்ட அரங்கு, கலையரங்கு, கருத்தரங்கக் கூடம், கண்காட்சி அரங்கு போன்றவையும் உள்ளன.
பீட்டர் : ஆகா! இத்தனை வசதிகள் நூலகத்தில் உள்ளனவா? நன்றி ஐயா. எங்கள் ஊரில் நூலகம் இல்லையே?
நான் என்ன செய்வது?
ஆசிரியர் : அதற்குத்தான் தமிழக அரசு நடமாடும் நூலகம் என்னும் திட்டத்தைத்
தொடங்கியுள்ளது.
பீட்டர் : அப்படியானால், அதை நான் பயன்படுத்துவேன் ஐயா.
மாணவர்கள் : இனி, எங்கள் வீட்டின் அருகிலுள்ள கிளை
நூலகத்தையும் தவறாமல் பயன்படுத்துவோம்
ஐயா.
தெரிந்து
தெளிவோம்.
சிறந்த
நூலகர்களுக்கு டாக்டர் ச. இரா. அரங்கநாதன் விருது வழங்கப்படுகிறது.
ஆசிரியர் : மாணவர்களை அழைத்துச் சென்று தலைமை நூலகரிடமும் உடன் வந்த துணை நூலகரிடமும் நன்றி தெரிவித்துவிட்டு மாணவர்களைப் பார்த்து, மாணவர்களே! மகிழ்ச்சிதானே! வாருங்கள் புறப்படலாம்.