Home | 8 ஆம் வகுப்பு | 8வது அறிவியல் | நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம்

அண்டம் மற்றும் விண்வெளி அறிவியல் | அலகு 8 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம் | 8th Science : Chapter 8 : Universe and Space Science

   Posted On :  09.09.2023 10:38 pm

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 8 : அண்டம் மற்றும் விண்வெளி அறிவியல்

நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம்

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 8 : அண்டம் மற்றும் விண்வெளி அறிவியல் : நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம்

நினைவில் கொள்க

சூரியக் குடும்பம், விண்மீன்கள் மற்றும் விண்மீன்திரள்கள் ஆகியவை அண்டத்தின் பகுதிப் பொருள்கள் ஆகும்.

ராக்கெட் என்பது தன் நிறையில் ஒரு பகுதியை வெளியேற்றி அதன் மூலம் கிடைக்கும் உந்துவிசையைப் பயன்படுத்தி விண்ணில் பறக்கும் வாகனம் ஆகும்.

துருவத் துணைக்கோள் செலுத்து வாகனம் (PSLV) மற்றும் புவிநிலைத் துணைக்கோள் செலுத்து வாகனம் (GSLV) ஆகியவை இந்தியாவின் மிகவும் புகழ்பெற்றராக்கெட்டுகள் ஆகும்.

இயக்குபொருள் என்பது ஒரு வேதிப்பொருள் ஆகும். இப்பொருள் எரியும் போது உருவாகும் அழுத்தப்பட்ட வாயுக்களின் ஆற்றலைப் பயன்படுத்தி ராக்கெட்டானது, புவியீர்ப்பு விசைக்கு எதிராக உயர்த்தப்படுகிறது.

இயக்கு பொருளானது திண்மமாகவோ அல்லது திரவமாகவோ இருக்கலாம்.

கிரையோஜெனிக் வகை இயக்கு பொருள்களில் சரிபொருள் அல்லது ஆக்சிகரணி அல்லது இரண்டும் திரவநிலை வாயுக்களாக (Liquefied gases) இருக்கும். இவை மிகக் குறைந்த வெப்பநிலையில் வைக்கப்பட்டிருக்கும்

சந்திரனைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வதற்காக நமது நாடு 2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ஆம் நாள் சந்திரயான்-1 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. சந்திரயான் என்பதற்கு நிலவு வாகனம் என்று பொருள்.

சூரியனிலிருந்து நான்காவதாக அமைந்துள்ள கோள் செவ்வாய் ஆகும். இது சூரியக் குடும்பத்தில் உள்ள இரண்டாவது சிறிய கோளாகும்.

சந்திரயான்-1 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் செவ்வாய்க் கோளைச் சுற்றி வருவதற்காக ஆளில்லா விண்கலம் ஒன்றை 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் நாள் விண்ணில் செலுத்தியது.

இது பிற கோள்களுக்கு விண்கலத்தை அனுப்பும் இந்தியாவின் முதல் விண்வெளித் திட்டம் (Interplanetary Mission) ஆகும்.

NASA (National Aeronautics and Space Administration) என்பது அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள புகழ்பெற்ற விண்வெளி ஆய்வு நிறுவனம் ஆகும்.

❖  அப்போலோ விண்வெளித் திட்டங்கள் நாசாவின் மிகப் புகழ்பெற்ற திட்டங்கள் ஆகும். இவற்றின் மூலம் அமெரிக்கா நிலவை அடைந்தது.

❖  அப்போலோ-8 திட்டமே முதன்முதலில் மனிதர்களை நிலவுக்கு அனுப்பிய திட்டமாகும்.

❖  அப்போலோ-11 திட்டமானது முதன் முதலில் மனிதனை நிலவில் தரையிறங்கச் செய்த திட்டமாகும்.

 

சொல்லடைவு

அண்டம் விண்மீன்திரள் உலகின் அனைத்துப் பொருள்களையும் விண்வெளியையும் உள்ளடக்கியது. விண்மீன் கூட்டம்

கனிமவியல் கனிமங்களைப் பற்றிய அறிவியல்.

புவியியல் புவியின் நில அமைப்பு மற்றும் பகுதிப் பொருள்களைப் பற்றி அறியும் அறிவியல்.

விண்கலம் கோள்களைப் பற்றி அறிய விண்வெளிக்கு அனுப்பப்படும் வாகனம்

இயக்குபொருட்கள் எரிபொருள் அல்லது வெடிபொருள்.

கிரையோஜெனிக் மிகக் குறைந்த வெப்பநிலை பற்றிய அறிவியல்.

பணிச்சுமை விண்ணில் செலுத்தப்படும் ராக் கெட்டில் வைக்கப்படும் செயற்கைக் கோள்.




பிற நூல்கள்

1. Big Bang - By Simon Singh.

2. What are the stars? - By G. Srinivas.

3. An introduction to Astronomy Baidyanath Basu.

 

இணைய வளங்கள்

1. https://www.isro.gov.in/Spacecraft/chandrayaan-1

2. https://www.isro.gov.in/chandrayaan2-home-0

3. https://www.isro.gov.in/pslv-c25-mars-orbiter- mission

4. https://www.nasa.gov/audience/forstudents/ 5-8/features/nasa-knows/what-was-apollo- program-58.html

Tags : Universe and Space Science | Chapter 8 | 8th Science அண்டம் மற்றும் விண்வெளி அறிவியல் | அலகு 8 | 8 ஆம் வகுப்பு அறிவியல்.
8th Science : Chapter 8 : Universe and Space Science : Points to Remember, Glossary, Concept Map Universe and Space Science | Chapter 8 | 8th Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 8 : அண்டம் மற்றும் விண்வெளி அறிவியல் : நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம் - அண்டம் மற்றும் விண்வெளி அறிவியல் | அலகு 8 | 8 ஆம் வகுப்பு அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 8 : அண்டம் மற்றும் விண்வெளி அறிவியல்