அறிவியல் | ஒலியியல் - நினைவில் கொள்க | 10th Science : Chapter 5 : Acoustics
அறிவியல் - ஒலியியல்
நினைவில் கொள்க
· ஒரு ஊடகத்தில் பரவும் அலையின் திசைவேகம்அலைத்
திசைவேகம் ஆகும்.
· திடப்பொருளின்
மீட்சிப் பண்பு திரவ, வாயு பொருட்களைவிட அதிகமாக இருப்பதால் ஒலியின் திசைவேகம் அதிகமாக
இருக்கும். வாயுக்கள் குறைந்த மீட்சித்தன்மை உடையவை.
· 20
Hz ஐ விடக் குறைவான அதிர்வெண் உடைய ஒலி குற்றொலி ஆகும். இவைகளை
மனிதனால் கேட்க இயலாது.
· 20,000
Hz ஐ விட அதிகமான அதிர்வெண்ணை உடைய ஒலி மீயொலி ஆகும். இவைகளை
மனிதனால் உணர இயலாது.
· ஒலி
அலைகள் எதிரொலிப்பு விதிகளைப் பூர்த்தி செய்யும்.
· அடர்குறை
ஊடகத்தின் விளிம்பில் மோதும் இறுக்கங்கள் எதிரொலிப்பிற்குப்பின் தளர்ச்சிகளாக
எதிரொலிக்கும்.
· எதிரொலி
என்பது ஒலியானது பிரதிபிலித்து மீண்டும் மீண்டும் கேட்கப்படுவது ஆகும்.
· எதிரொலி
கேட்க வேண்டும் எனில் ஒலி மூலத்திற்கும், எதிரொலிப்புப் பரப்பிற்கும் இடையே குறைந்தபட்சம் 17.2 மீ தொலைவு இருக்க வேண்டும்.
· தோற்ற
அதிர்வெண் என்பது கேட்குநரால் கேட்கப்படும் ஒலியின் அதிர்வெண் ஆகும்.