வெப்பம் | பருவம் 2 அலகு 1 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - நினைவில் கொள்க | 6th Science : Term 2 Unit 1 : Heat
நினைவில் கொள்க
❖ நமது முதன்மை வெப்ப ஆற்றல்
மூலம் சூரியனாகும். எரிதல், உராய்வு மற்றும் மின்சாரம் போன்றவற்றின் மூலமும் நாம் வெப்ப
ஆற்றலைப் பெறுகிறோம்.
❖ பொருட்களை வெப்பப்படுத்தும்போது
அதில் உள்ள மூலக்கூறுகளில் இந்த அதிர்வும், இயக்கமும் அதிகரிக்கின்றன. அதோடு பொருளின்
வெப்பநிலையும் உயர்கிறது.
❖ ஒரு பொருளில் மூலக்கூறுகளின்
இயக்க அடங்கியுள்ள ஆற்றலே வெப்பம் என அழைக்கப்படுகிறது.
❖ வெப்பத்தின் SI அலகு ஜூல்
ஆகும்.
❖ ஒரு பொருள் எந்த அளவு வெப்பமாக
அல்லது குளிர்ச்சியாக உள்ளது என்பதனை அளவிடும் அளவுக்கு வெப்பநிலை என்று பெயர்.
❖ வெப்பநிலையின் SI அலகு
கெல்வின் ஆகும்.
❖ வெவ்வேறு வெப்பநிலையில்
உள்ள இருபொருட்கள் ஒன்றுடன் ஒன்று தொடும்பொழுது வெப்பமானது எந்தத் திசையில் பாய்கிறது
என்பதனை அவற்றின் வெப்பநிலை நிர்ணயிக்கிறது.
❖ ஒரு பொருள் மற்றொன்றின்
வெப்பநிலையை பாதிக்குமானால் அவை வெப்பத் தொடர்பில் உள்ளன எனலாம்.
❖ வெப்பத்தொடர்பில் உள்ள
இருபொருள்களின் வெப்பநிலையும் சமமாக இருந்தால் அவை வெப்பச்சமநிலையில் உள்ளன எனலாம்.
❖ பொருள்கள் வெப்பப்படுத்தும்பொழுது
விரிவடைந்து குளிர்விக்கும் பொழுது சுருக்கமடைகின்றன. ஒரு பொருளை வெப்பப்படுத்தும்பொழுது
அது விரிவடைவதை அப்பொருளின் வெப்ப விரிவடைதல் என்கிறோம்.
❖ ஒரு திண்மப் பொருளுக்கு
குறிப்பிட்ட வடிவம் உள்ளது. எனவே அதைச் சூடுபடுத்தும்பொழுது அது எல்லா பக்கங்களிலும்
விரிவடைகிறது. அதாவது அதன் நீளம், பரப்பளவு, கனஅளவு போன்றவை விரிவடைகின்றன.
இணையச்செயல்பாடு
வெப்பம்
வெப்ப
ஆற்றலை அறிவோமா!
படி 1: கீழ்க்காணும் உரலி / விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி
Thermal Energy Transfer பக்கத்திற்குச் செல்க.
படி2: திரையின் இடப்பக்கம் தோன்றும் = என்பதைச் சொடுக்கியதும்
பட்டியல் தோன்றும். அதில் தேவைப்படும் தெரிவைத் தேர்வு செய்து கொள்ளவும்.
படி 3: இப்போது திரையில் தோன்றும் ப்ளாஷ் காணொளியினை இயக்கி,
காட்சிகளை உற்று நோக்குக.
படி 4: வெப்பப் பரிமாற்றத்தை அறிய, பட்டியலில் உள்ள
'Example' என்னும் தெரிவுகளைத் தேர்வு செய்து, அதில் வரும் ப்ளாஷ் செயல்பாடுகளை இயக்கி
வெப்ப ஆற்றல் கடத்தப்படுவதை அறிக. Menu வில் உள்ள பிற தலைப்புகளையும் ஆராய்ந்து பார்க்கவும்.
உரலி:
http://d3tt741pwxqwm0.cloudfront.net/WGBH/conv16/conv16-int- thermalenergy/index.html#/intro
*படங்கள் அடையாளத்திற்காக மட்டுமே.