வெப்பம் | பருவம் 2 அலகு 1 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - வெப்ப விரிவின் பயன்கள் | 6th Science : Term 2 Unit 1 : Heat
வெப்ப விரிவின் பயன்கள்
மரச்சக்கரத்தின் மீது இரும்பு வளையத்தைப் பொறுத்துதல்
மரச்சக்கரத்தின் விட்டமானது இரும்பு வளையத்தின் விட்டத்தைவிட
சற்றுப்பெரியதாக இருக்கும். எனவே இரும்புவளையத்தை
மரச்சக்கரத்தின் மீது மிக எளிதாகப் பொருத்த இயலாது.
இரும்புவளையத்தை முதலில் உயர்ந்த வெப்பநிலைக்கு வெப்பப்படுத்த
வேண்டும். வெப்பத்தினால் விரிவடையும். இரும்பு வளையம் இப்பொழுது எளிதாக மரச்சக்கரத்தின்
மீது இரும்பு வளையத்தைப் பொருத்த முடியும். பிறகு இரும்பு வளையத்தைக் குளிர்ந்தநீர்
கொண்டு குளிர்விக்கும் பொழுது, இரும்புவளையம் உடனடியாகச் சுருங்குகிறது. எனவே இரும்பு
வளையமானது மரச்சக்கரத்தின் மீது, மிக இறுக்கமாகப் பொருந்துகிறது.
கடையாணி
இரண்டு உலோகத்தகடுகளை ஒன்றிணைக்க கடையாணி பயன்படுகின்றது. நன்கு
வெப்பப்படுத்தப்பட்ட கடையாணியை தகடுகளின் துளை வழியே பொருத்தி கடையாணியின் அடிப்பக்க
முனையைச் சுத்தியலைக் கொண்டு அடித்து மறுபுறம் ஒரு புதிய தலைப்பகுதி உருவாக்கப்படுகிறது.
கடையாணி குளிரும்பொழுது சுருங்குவதால், அது இரண்டு இறுக்கமாகப் பிடித்துக் தகடுகளையும்
கொள்கின்றது.