Home | 6 ஆம் வகுப்பு | 6வது அறிவியல் | நினைவில் கொள்க

காந்தவியல் | பருவம் 3 அலகு 1 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - நினைவில் கொள்க | 6th Science : Term 3 Unit 1 : Magnetism

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 1 : காந்தவியல்

நினைவில் கொள்க

காந்தத்தன்மையுடைய தாது மேக்னடைட் என்று அழைக்கப்படுகிறது. மேக்னடைட் இயற்கைக் காந்தம் எனப்படுகிறது.

நினைவில் கொள்க

காந்தத்தன்மையுடைய தாது மேக்னடைட் என்று அழைக்கப்படுகிறது. மேக்னடைட் இயற்கைக் காந்தம் எனப்படுகிறது.

மனிதனால் தயாரிக்கப்பட்ட காந்தங்கள் செயற்கைக் காந்தங்கள் என் அழைக்கப்படுகின்றன.

காந்தத்தால் ஈர்க்கப்படக்கூடிய பொருள்கள் காந்தத்தன்மை உள்ள பொருள்கள் எனப்படுகின்றன.

காந்தத்தால் ஈர்க்கப்படாத பொருள்கள் காந்தத் தன்மையற்ற பொருள்கள் எனப்படுகின்றன.

தடையின்றி தொங்க விடப்பட்டுள்ள காந்தமானது எப்பொழுதும் வடக்கு-தெற்கு திசையிலேயே ஓய்வுநிலைக்கு வரும்.

வடக்கே நோக்கும் முனை வடதுருவம், தெற்கே நோக்கும் முனை தென்துருவம் ஆகும்.

காந்த திசைகாட்டும் கருவி என்பது திசையறிய உதவும் ஒரு காந்த ஊசிப்பெட்டி ஆகும்.

காந்தத்தின் எதிரெதிர்துருவங்கள் (N-S, S-N) ஒன்றையொன்று ஈர்க்கின்றன. ஒத்த துருவங்கள் (N-N, S-S) ஒன்றையொன்று விலக்குகின்றன.

வெப்பப்படுத்தும் பொழுதோ, உயரத்திலிருந்து கீழே போடும்பொழுதோ, சுத்தியால் தட்டும் பொழுதோ காந்தங்கள் அவற்றின் காந்தத்தன்மையை இழந்து விடுகின்றன.

 

இணையச் செயல்பாடு

காந்தம்

செயல்பாட்டின் வழி காந்த துருவங்களின் பண்புகளையும் காந்த புலங்களையும் அறிவோமா!

 

படி 1: கீழ்க்காணும் உரலி / விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி செயல்பாட்டின் பக்கத்திற்குச் செல்லவும்.

படி 2: பக்கத்தில் சட்ட காந்தம் மற்றும் காந்த முள் தோன்றும். சுட்டியைப் பயன்படுத்தி, காந்த ஊசியைச் சட்ட காந்தத்தைச் சுற்றி இழுக்கவும். காந்த புலன்களைச் சுற்றி ஊசியை நகர்த்தும் போது ஏற்படும் காந்த புலங்களின் வரிகளை உற்று நோக்குக.

படி 3: திரையின் கீழ் உள்ள Navigation Icon என்னும் குறியைச் சொடுக்கியதும், சட்ட காந்தத்தைச் சுற்றி காந்த ஊசிகள் தோன்றும். சுட்டியைக் கொண்டு சட்ட காந்தத்தை நகர்த்தும் போது காந்த ஊசிகளின் மாற்றங்களை உற்று நோக்குக.

படி 4: திரையின் கீழ் உள்ள 'field lines' என்பதைச் சொடுக்கி, காந்த புலங்களின் வரிகளைப் பார்க்க


காந்த உரலி:

http://www.physics-chemistry-interactive-flash-animation.com/electricity_ electromagnetism_interactive/bar_magnet_magnetic_field_lines.htm

Tags : Magnetism | Term 3 Unit 1 | 6th Science காந்தவியல் | பருவம் 3 அலகு 1 | 6 ஆம் வகுப்பு அறிவியல்.
6th Science : Term 3 Unit 1 : Magnetism : Points to remember Magnetism | Term 3 Unit 1 | 6th Science in Tamil : 6th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 1 : காந்தவியல் : நினைவில் கொள்க - காந்தவியல் | பருவம் 3 அலகு 1 | 6 ஆம் வகுப்பு அறிவியல் : 6 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 1 : காந்தவியல்