Home | 7 ஆம் வகுப்பு | 7வது தமிழ் | உரைநடை: தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ. முத்துராமலிங்கத்தேவர்: கேள்விகள் மற்றும் பதில்கள்

பருவம் 1 இயல் 3 | 7 ஆம் வகுப்பு தமிழ் - உரைநடை: தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ. முத்துராமலிங்கத்தேவர்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 7th Tamil : Term 1 Chapter 3 : Nadu Athai Nadu

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : நாடு அதை நாடு

உரைநடை: தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ. முத்துராமலிங்கத்தேவர்: கேள்விகள் மற்றும் பதில்கள்

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : நாடு அதை நாடு : உரைநடை: தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ. முத்துராமலிங்கத்தேவர்: கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

(இயல் 3 : உரைநடை  உலகம் : தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ. முத்துராமலிங்கத்தேவர்)


பாடநூல் மதிப்பீட்டு வினா 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. முத்துராமலிங்கத்தேவர் முதன் முதலில் உரையாற்றிய இடம் ________

அ) தூத்துக்குடி

ஆ) காரைக்குடி 

இ) சாயல்குடி

ஈ) மன்னார்குடி

[விடை : இ. சாயல்குடி] 


2. முத்துராமலிங்கத்தேவர் நடத்திய இதழின் பெயர் ________

அ) இராஜாஜி 

ஆ) நேதாஜி 

இ) காந்திஜி 

ஈ) நேருஜி 

[விடை : ஆ. நேதாஜி] 


3. தேசியம் காத்த செம்மல் எனப் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரைப் பாராட்டியவர்

அ) இராஜாஜி

ஆ) பெரியார்

இ) திரு.வி.க

ஈ) நேதாஜி

[விடை : அ. இராஜாஜி]


குறு வினா 

1. முத்துராமலிங்கத்தேவரைப் பாராட்டிப் பெரியார் கூறியது யாது? 

❖ வீரப்பேச்சால் எத்தனையோ தியாகிகளையும் விவேகப் பேச்சால் எத்தனையோ அறிவாளிகளை உண்டாக்கியவர். 

❖ உண்மையை மறைக்காமல் வெளியிடுவதில் தனித்துணிச்சல் பெற்றவர். சுத்தத் தியாகி.

- என்று முத்துராமலிங்கத்தேவரைப் பெரியார் பாராட்டியுள்ளார். 


2. முத்துராமலிங்கத்தேவரின் பேச்சுக்கு வாய்ப்பூட்டுச் சட்டத்தின் மூலம் தடைவிதிக்கப்படக் காரணம் யாது? 

❖ முத்துராமலிங்கத்தேவர், ஆங்கில ஆட்சிக்கு எதிராக மக்களிடம் பெரும் எழுச்சி ஏற்படும் வகையில் வீர உரையாற்றினார். 

❖ அவரது பேச்சைக் கேட்டு மக்கள் ஆங்கில ஆட்சிக்கு எதிராக வீறுகொண்டு எழுந்தனர். 

❖ இதனால், அவரைப் பலமுறை ஆங்கில அரசு கைது செய்தது. 

❖ மேலும், வாய்ப்பூட்டுச் சட்டம் முலம் மேடைகளில் அரசியல் பேசக் கூடாது என்று அவருக்குத் தடைவிதித்தது. 


3. முத்துராமலிங்கத்தேவர் பெற்றிருந்த பல்துறை ஆற்றலைப் பற்றி எழுதுக. 

❖ முத்துராமலிங்கத்தேவர் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் சொற்பொழிவு ஆற்றும் திறன் பெற்றிருந்தார். 

❖ சிலம்பம், குதிரை ஏற்றம், துப்பாக்கிச் சுடுதல், சோதிடம், மருத்துவம் ஆகிய பலதுறை ஆற்றல் உடையவராக விளங்கினார்.


சிறு வினா 

1. நேதாஜியுடன் முத்துராமலிங்கத்தேவர் கொண்ட தொடர்புப் பற்றி எழுதுக.

❖ நேதாஜியுடன் முத்துராமலிங்கத்தேவர் நெருங்கிய தொடர்பு கொண்டு இருந்தார். 

❖  அவரைத் தம் அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டார்.

❖ முத்துராமலிங்கத்தேவரின் அழைப்பை ஏற்று 06.9.1939 இல் நேதாஜி மதுரைக்கு வருகை தந்தார். 

❖ நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில் முத்துராமலிங்கத்தேவரின் முயற்சியால் ஏராளமான தமிழர்கள் இணைந்தனர். 

❖ விடுதலைக்குப் பின்னர் நேதாஜி என்ற பெயரில் வார இதழ் நடத்தினார் 


2. தொழிலாளர் நலனுக்காக முத்துராமலிங்கத்தேவர் செய்த தொண்டுகள் யாவை? 

❖ 1938 காலகட்டத்தில் மதுரையில் 23 தொழிலாளர் சங்கங்களின் தலைவராகத் தேவர் திகழ்ந்தார். 

❖ மதுரையில் இருந்த நூற்பாலை ஒன்றில் வேலை செய்த தொழிலாளர்களின் உரிமைக்காகத் தோழர் ப.ஜீவானந்தத்துடன் இணைந்து 1938 ஆம் ஆண்டு போராட்டம் நடத்தினார். அதற்காக ஏழு மாதம் சிறைத் தண்டனை பெற்றார். 

❖ உழவர்களின் நலன் காக்க இராஜபாளையத்தில் மிகப்பெரிய அளவிலான மாநாடு ஒன்றை நடத்தினார். 

❖ பெண்தொழிலாளர்களுக்கு மகப்பேறு காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வேண்டும் என்று போராடினார். 


சிந்தனை வினா 

சிறந்த தலைவருக்குரிய பண்புகள் எவை என நீங்கள் கருதுகிறீர்கள்? – 

❖ உரிமைக்காகப் போராடுதல்

❖ ஒழுக்கம் காத்தல்

❖ மக்கள் நலம் காத்தல்

❖ பிறர்நிலையில் தன்னை வைத்துப் பார்த்தல் 

❖ பொதுநல வாழ்வு

❖ பேச்சாற்றல்

❖ மனித நேயம் 

❖ சாதி, மத, இன, மொழி ஆகியன பாராமை

❖ நாட்டுப் பற்று 

❖ தியாக உணர்வு 

ஆகியன சிறந்த தலைவருக்குரிய பண்புகளாக நாங்கள் கருதுகின்றோம்.



கற்பவை கற்றபின்


நாட்டுக்கு உழைத்த சிறந்த பிற தலைவர்கள் பற்றிய செய்திகளைத் திரட்டி எழுதுக. 

காந்தியடிகள்: 

அகிம்சை வழியில் நாட்டு விடுதலைக்குப்பாடுபட்டவர். வெள்ளையனே வெளியேறு இயக்கம், உப்புச் சத்தியாகிரகம், ஒத்துழையாமை இயக்கம், தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு முதலியன. 

நேதாஜி: 

இந்திய தேசிய இராணுவத்தை அமைத்து ஆங்கிலேயர்களை எதிர்த்தவர். 

வ. உ. சிதம்பரனார்: 

நம் நாட்டிற்காகச் சுதேசக் கப்பல் வாங்கியவர். நாட்டுமக்களுக்காக சிறையில் செக்கிழுத்தவர். 

ஜவஹர்லால் நேரு: 

காந்தியடிகளுடன் இணைந்து நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்டவர். 

பூலித்தேவன்: 

ஆங்கிலேயரை எதிர்த்து தன்பகுதியை வென்றவர். விடுதலைப் போரின் முதல் முழக்கமிட்டவர். 

வீரபாண்டிய கட்டபொம்மன்: 

ஆங்கிலேயருக்கு வரி கொடுக்கமாட்டோம் என்று ஆங்கிலேயரை எதிர்த்தவர்.


Tags : Term 1 Chapter 3 | 7th Tamil பருவம் 1 இயல் 3 | 7 ஆம் வகுப்பு தமிழ்.
7th Tamil : Term 1 Chapter 3 : Nadu Athai Nadu : Prose: Desiyam kaatha chammal pasumpon oo Muthuramalingathevar: Questions and Answers Term 1 Chapter 3 | 7th Tamil in Tamil : 7th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : நாடு அதை நாடு : உரைநடை: தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ. முத்துராமலிங்கத்தேவர்: கேள்விகள் மற்றும் பதில்கள் - பருவம் 1 இயல் 3 | 7 ஆம் வகுப்பு தமிழ் : 7 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : நாடு அதை நாடு