Home | 7 ஆம் வகுப்பு | 7வது தமிழ் | உரைநடை: பேசும் ஓவியங்கள்: கேள்விகள் மற்றும் பதில்கள்

பருவம் 2 இயல் 3 | 7 ஆம் வகுப்பு தமிழ் - உரைநடை: பேசும் ஓவியங்கள்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 7th Tamil : Term 2 Chapter 3 : Kalai vannam

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : கலை வண்ணம்

உரைநடை: பேசும் ஓவியங்கள்: கேள்விகள் மற்றும் பதில்கள்

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : கலை வண்ணம் : உரைநடை: பேசும் ஓவியங்கள்: கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

(இயல் 3 : உரைநடை உலகம் : பேசும் ஓவியங்கள்)


பாடநூல் மதிப்பீட்டு வினா 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. குகை ஓவியங்களில் வண்ணம் தீட்டப் பயன்பட்ட பொருள்களில் ஒன்று ----- 

அ) மண்துகள்

ஆ) நீர் வண்ணம் 

இ) எண்ணெய் வண்ணம்

ஈ) கரிக்கோல்

[விடை : அ. மண்துகள்] 


2. நகைச்சுவை உணர்வு வெளிப்படுமாறு வரையப்படும் ஓவியம் ------ 

அ) குகை ஓவியம்

ஆ) சுவர் ஓவியம் 

இ) கண்ணாடி ஓவியம்

ஈ) கேலிச்சித்திரம்

[விடை :ஈ. கேலிச்சித்திரம்] 


3. 'கோட்டோவியம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது --------

அ) கோடு + ஓவியம்

ஆ) கோட்டு + ஓவியம் 

இ) கோட் + டோவியம்

ஈ) கோடி + ஓவியம்

[விடை : ஆ. கோட்டு + ஓவியம்] 


4. ‘செப்பேடு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது --------- 

அ) செப்பு + ஈடு

ஆ) செப்பு + ஓடு 

இ) செப்பு + ஏடு

ஈ) செப்பு + யேடு

[விடை : இ. செப்பு + ஏடு] 


5. எழுத்து + ஆணி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் – 

அ) எழுத்துஆணி

ஆ) எழுத்தாணி 

இ) எழுத்துதாணி

ஈ) எழுதாணி

[விடை : ஆ. எழுத்தாணி]


கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. கருத்துப்படங்களை அறிமுகப்படுத்தியவர் ________

விடை : பாரதியார்

2. கலம்காரி ஓவியம் என்று அழைக்கப்படுவது ________

விடை : துணி ஓவியம்

3. மன்னர்களின் ஆணைகளையும் அரசு ஆவணங்களையும் ________ மீது பொறித்துப் பாதுகாத்தனர்.

விடை : செப்பேடுகளில்


குறு வினா

1. ஓவியங்களின் வகைகள் யாவை?

1. குகை ஓவியம் 

2. சுவர் ஓவியம் 

3. துணி ஓவியம் 

4. ஓலைச்சுவடி ஓவியம் 

5. செப்பேட்டு ஓவியம் 

6. தந்த ஓவியம் 

7. கண்ணாடி ஓவியம் 

8. தாள் ஓவியம் 

9. கருத்துப்பட ஓவியம் 

10. நவீன ஓவியம் 


2. குகை ஓவியங்களில் இருந்து நாம் அறியும் செய்திகள் யாவை?

குகை ஓவியங்களில் இருந்து செய்திகளை மற்றவர்களுக்குத் தெரிவிப்பதற்காக குகைகளில் ஓவியம் வரைந்ததையும் பழந்தமிழர் வாழ்க்கை முறைகளையும் அறியலாம். 


3. தாள் ஓவியங்களை எவற்றைக் கொண்டு வரைவர்?

கரிக்கோல், நீர் வண்ணம், எண்ணெய் வண்ணம் ஆகியவற்றைக் கொண்டு தாள் ஓவியங்களை வரைவர். 


4. சுவர் ஓவியங்கள் காணப்படும் இடங்களைக் கூறுக.

அரண்மனைகள், மண்டபங்கள், கோவில்கள் ஆகியவற்றின் மேற்கூரைகளிலும் சுவர்களிலும் சுவர் ஓவியங்கள் காணப்படும் இடங்களாகும். 


5. செப்பேட்டு ஓவியங்களில் காணப்படும் காட்சிகள் யாவை?

நீர்நிலைகள், செடிகொடிகள், பறவைகள், விலங்குகள், குறியீடுகள் ஆகியன செப்பேட்டு ஓவியங்களில் காணப்படும் காட்சிகள் ஆகும்.


சிறு வினா

1. கேலிச்சித்திரம் என்றால் என்ன?

மனித உருவங்களை விந்தையான தோற்றங்களில் நகைச்சுவை தோன்றும் படி வரைவதைக் கேலிச்சித்திரம் என்பர். 


2. ஓலைச்சுவடி ஓவியங்கள் குறித்து நீங்கள் அறிந்து கொண்டவற்றை எழுதுக. 

ஓலைச்சுவடிகள் மீது எழுத்தாணிகளைக் கொண்டு கோட்டோவியமாகவும் வண்ணப்பூச்சு ஓவியமாக வரைவர். 

இவை பெரும்பாலும் புராண, இதிகாசக் காட்சிகளைக் கொண்டு இருக்கும். 

இவை தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் மட்டுமே காணப்படுகின்றது.


சிந்தனை வினா

1. தந்த ஓவியங்கள் கேரளாவில் அதிகம் காணப்படுவது ஏன்?

யானையின் தந்தங்கள் மீது வரையப்படும் ஓவியங்கள் தந்த ஓவியங்கள் ஆகும். இவ்வகை ஓவியங்கள் கேரளாவில் அதிகம் காணப்படுகின்றன. கேரளாவில் யானைகள் மிகுதியாகக் காணப்படுகின்றன. வயது முதிர்ந்த யானைகளும், தந்தங்களும் கேரளாவில் அதிகம் காணப்படுகின்றது. எனவே, தந்த ஓவியங்கள் கேரளாவில் அதிகம் காணப்படுகின்றது.


கற்பவை கற்றபின்


1. உமக்குப் பிடித்த காட்சியை வரைந்து வண்ணம் தீட்டுக

2. பருவ இதழ்களில் வெளிவந்த பலவகை ஓவியங்களைச் சேகரித்துப் படத்தொகுப்பு உருவாக்குக.


Tags : Term 2 Chapter 3 | 7th Tamil பருவம் 2 இயல் 3 | 7 ஆம் வகுப்பு தமிழ்.
7th Tamil : Term 2 Chapter 3 : Kalai vannam : Prose: Peasum oviyam: Questions and Answers Term 2 Chapter 3 | 7th Tamil in Tamil : 7th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : கலை வண்ணம் : உரைநடை: பேசும் ஓவியங்கள்: கேள்விகள் மற்றும் பதில்கள் - பருவம் 2 இயல் 3 | 7 ஆம் வகுப்பு தமிழ் : 7 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : கலை வண்ணம்