பருவம் 2 இயல் 3 | 7 ஆம் வகுப்பு தமிழ் - வாழ்வியல்: திருக்குறள்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 7th Tamil : Term 2 Chapter 3 : Kalai vannam
(இயல் 3 : வாழ்வியல் : திருக்குறள்)
பாடநூல் மதிப்பீட்டு வினா
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. ________ தீமை உண்டாக்கும்.
அ) செய்யத் தகுந்த செயல்களைச் செய்வதால்
ஆ) செய்யத் தகாத செயல்களைச் செய்யாமல் இருப்பதால்
இ) செய்யத் தகுந்த செயல்களைச் செய்யாமல் இருப்பதால்
ஈ) எதுவும் செய்யாமல் இருப்பதால்
[விடை : இ. செய்யத் தகுந்த செயல்களைச் செய்யாமல் இருப்பதால்]
2. தன் குடியைச் சிறந்த குடியாகச் செய்ய விரும்புவரிடம் ________ இருக்கக் கூடாது.
அ) சோம்பல்
ஆ) சுறுசுறுப்பு
இ) ஏழ்மை
ஈ) செல்வம்
[விடை : அ. சோம்பல்]
3. ‘எழுத்தென்ப்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________
அ) எழுத்து + தென்ப
ஆ) எழுத்து + என்ப
இ) எழுத்து + இன்ப
ஈ) எழுத் + தென்ப
[விடை : ஆ. எழுத்து + என்ப]
4. 'கரைந்துண்ணும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________
அ) கரைந்து + இன்னும்
ஆ) கரை + துண்ணும்
இ) கரைந்து + உண்ணும்
ஈ) கரை + உண்ணும்
[விடை : இ. கரைந்து + உண்ணும்]
5. கற்றனைத்து + ஊறும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது ________
அ) கற்றனைத்தூறும்
ஆ) கற்றனைதூறும்
இ) கற்றனைத்தீரும்
ஈ) கற்றனைத்தோறும்
[விடை : அ. கற்றனைத்தூறும்)
பொருத்துக.
வினா
1. கற்கும் முறை – செயல்
2. உயிர்க்குக் கண்கள் - காகம்
3. விழுச்செல்வம் - பிழையில்லாமல் கற்றல்
4. எண்ணித் துணிக - எண்ணும் எழுத்தும்
5. கரவா கரைந்துண்ணும் - கல்வி
விடை
1. கற்கும் முறை - பிழையில்லாமல் கற்றல்
2. உயிர்க்குக் கண்கள் - எண்ணும் எழுத்தும்
3. விழுச்செல்வம் - கல்வி
4. எண்ணித் துணிக - செயல்
5. கரவா கரைந்துண்ணும் - காகம்
குறுவினா
1. ‘நன்மை செய்வதிலும் தீமை உண்டாகும்’ எப்போது?
நாம் ஒருவருடைய பண்பை அறிந்த அவருக்கு நன்மை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நன்மை செய்தாலும் தீமை வந்து சேரும்.
2. தீமை உண்டாக்கும் இரண்டு செயல்கள் யாவை?
செய்யத்தகாத செயல்களைச் செய்வதாலும் செய்யத்தக்க செயல்களைச் செய்யாமல் விடுவதாலும் தீமை உண்டாகும்.
3. துன்பத்தில் துன்பம் உண்டாக்குபவர் யார்?
துன்பம் வந்த போது வருந்திக் கலங்காதவர், அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதனை வென்று விடுவர்.
பாடப்பகுதியிலிருந்து படங்களுக்குப் பொருத்தமான திருக்குறளை எழுதுக.
விடை :
தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு.
விடை :
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.