Home | 7 ஆம் வகுப்பு | 7வது தமிழ் | உரைநடை: திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி: கேள்விகள் மற்றும் பதில்கள்

பருவம் 3 இயல் 1 | 7 ஆம் வகுப்பு தமிழ் - உரைநடை: திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி: கேள்விகள் மற்றும் பதில்கள் | 7th Tamil : Term 3 Chapter 1 : Nayathagu nagrikam

   Posted On :  13.07.2022 04:08 pm

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 1 : நயத்தகு நாகரிகம்

உரைநடை: திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி: கேள்விகள் மற்றும் பதில்கள்

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 1 : நயத்தகு நாகரிகம் : உரைநடை: திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி: கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

(இயல் 1 : உரைநடை உலகம் : திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி)


பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. திருநெல்வேலி ---------- மன்னர்களோடு தொடர்பு உடையது.

அ) சேர 

ஆ) சோழ 

இ) பாண்டிய 

ஈ) பல்லவ 

[விடை இ. பாண்டிய] 


2. இளங்கோவடிகள் ---------- மலைக்கு முதன்மை கொடுத்துப் பாடினார்.

அ) இமய 

ஆ) கொல்லி 

இ) பொதிகை 

ஈ) விந்திய 

[விடை : இ. பொதிகை] 


3. திருநெல்வேலி ---------- ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

அ) காவிரி 

ஆ) வைகை

இ) தென்பெண்ணை

ஈ) தாமிரபரணி

[விடை : ஈ. தாமிரபரணி]


பொருத்துக.

வினா 

1. தண்பொருநை – பொன்நாணயங்கள் உருவாக்கும் இடம் 

2. அக்கசாலை - குற்றாலம் 

3. கொற்கை - தாமிரபரணி 

4. திரிகூடமலை - முத்துக் குளித்தல்

விடை 

1. தண்பொருநை - தாமிரபரணி. 

2. அக்கசாலை – பொன்நாணயங்கள் உருவாக்கும் இடம் 

3. கொற்கை - முத்துக்குளித்தல் 

4. திரிகூடமலை - குற்றாலம்


குறு வினா 

1. தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறுகள் யாவை?

பச்சையாறு, மணிமுத்தாறு, சிற்றாறு, காரையாறு, சேர்வலாறு, கடனாநதி ஆகியவை தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறுகள் ஆகும்.


2. கொற்கை முத்து பற்றிக் கூறுக. 

தாமிரபரணி கடலோடு கலக்கும் இடத்தில் கொற்கை என்னும் துறைமுகம் இருந்தது. 

இங்கு முத்துக்குளித்தல் சிறப்பாக நடைபெற்றது. 

கொற்கையில் விளைந்த பாண்டி நாட்டு முத்து உலகப் புகழ் பெற்றதாக விளங்கியது.


சிறு வினா

1. திருநெல்வேலிப் பகுதியில் நடைபெறும் உழவுத் தொழில் குறித்து எழுதுக. 

திருநெல்வேலி மாவட்டப் பொருளாதாரத்தில் முதன்மையான பங்கு வகிப்பது உழவுத்தொழில் தாமிரபரணி ஆற்றின்மூலம் இங்கு உழவுத்தொழில் நடைபெறுகின்றது. 

இங்குக் குளத்துப் பாசனமும் கிணற்றுப் பாசனமும் கூடப் பயன்பாட்டில் உள்ளன. இருபருவங்களில் நெல் பயிரிடப்படுகின்றது.  

மானாவாரிப் பயிர்களாகச் சிறுதானியங்கள், எண்ணெய் வித்துகள், காய்கனிகள், பருத்தி, பயறு வகைகள் பயிரிடப்படுகின்றன. 


2. திருநெல்வேலிக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு குறித்து எழுதுக. 

அகத்தியர் பொதிகை மலையில் வாழ்ந்தார் என்பர். 

சங்கப்புலவர்களான மாறோக்கத்து நப்பசலையார், நம்மாழ்வார், பெரியாழ்வார், குமரகுருபரர், திரிகூடராசப்பக் கவிராயர், கவிராசப் பண்டிதர் ஆகியோர் திருநெல்வேலியில் பிறந்து தமிழுக்குச் செழுமை சேர்த்துள்ளனர். 

ஜி.யு.போப், கால்டுவெல், வீரமாமுனிவர் போன்றோரைத் தமிழின்பால் ஈர்த்த பெருமை திருநெல்வேலிக்கு உரியது. 


3. திருநெல்வேலி நகர அமைப்புப் பற்றிக் கூறுக. 

நெல்லையில் உள்ள தெருக்கள் பல அதன் பழமைக்குச் சான்றாக உள்ளன. 

காவற்புரைத் தெரு என்று ஒரு தெரு உள்ளது. அரசரால் தண்டிக்கப்பட்டவர்கள் இங்கு சிறைவைக்கப்பட்டதால் இப்பெயர் பெற்றது. 

மேல வீதியை அடுத்து கூழைக்கடைத் தெரு உள்ளது. அதாவது தானியங்கள் விற்கும் கடைத் தெரு ஆகும். 

முற்காலத்தில் பொன் நாணயங்களை உருவாக்குபவர் வாழ்ந்த இடம் அக்கசாலைத் தெரு. பெரு வணிகம் நடைபெற்ற இடம் பேட்டை.


சிந்தனை வினா 

1. மக்கள் மகிழ்ச்சியாக வாழ ஒரு நகரம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? 

இயற்கை வளம் மிகுந்ததாக இருக்க வேண்டும். 

அனைத்துப் பொருட்களும் அருகில் கிடைக்கும் படி இருக்க வேண்டும். 

சாதி மத பேதமின்றி மதநல்லிணக்கத்தைப் போற்றும் படியாக இருக்க வேண்டும். 

சுற்றுப்புறத்தூய்மை உடையதாக இருக்க வேண்டும்.கற்பவை கற்றபின்


1. உங்களுடைய மாவட்டத்திலுள்ள சுற்றுலா இடங்கள் பற்றிய செய்திகளைத் தேடித் தொகுக்க.

கொடிவேரி அணை, வெள்ளோடு பறவைகள் சரணாலயம், பெரியார் - அண்ணா நினைவகம், பவானி சங்கமேஸ்வரர் கோயில், ஜவுளிச் சந்தை, அந்தியூர் குருநாத சாமி கோயில், பண்ணாரி அம்மன் கோயில், பவானி சாகர் ஆகியன ஈரோடு மாவட்டத்திலுள்ள சுற்றுலா இடங்கள். 


2. தமிழ்நாட்டிலுள்ள மாநகராட்சிகள் பற்றிய செய்திகளைத் தொகுக்க.

திருநெல்வேலி, திருப்பூர், வேலூர், கோவை, மதுரை, திருச்சி, சேலம், தூத்துக்குடி, தஞ்சாவூர், திண்டுக்கல், தஞ்சாவூர், ஈரோடு - ஆகியன தமிழ்நாட்டிலுள்ள மாநகராட்சிகள்.


Tags : Term 3 Chapter 1 | 7th Tamil பருவம் 3 இயல் 1 | 7 ஆம் வகுப்பு தமிழ்.
7th Tamil : Term 3 Chapter 1 : Nayathagu nagrikam : Prose: Thic ellam pugalurum Tirunelveli: Questions and Answers Term 3 Chapter 1 | 7th Tamil in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 1 : நயத்தகு நாகரிகம் : உரைநடை: திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி: கேள்விகள் மற்றும் பதில்கள் - பருவம் 3 இயல் 1 | 7 ஆம் வகுப்பு தமிழ் : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 1 : நயத்தகு நாகரிகம்