Home | 7 ஆம் வகுப்பு | 7வது தமிழ் | உரைநடை: விலங்குகள் உலகம்: கேள்விகள் மற்றும் பதில்கள்

பருவம் 1 இயல் 2 | 7 ஆம் வகுப்பு தமிழ் - உரைநடை: விலங்குகள் உலகம்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 7th Tamil : Term 1 Chapter 2 : Aninilal kaadu

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 2 : அணிநிழல் காடு

உரைநடை: விலங்குகள் உலகம்: கேள்விகள் மற்றும் பதில்கள்

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 2 : அணிநிழல் காடு : உரைநடை: விலங்குகள் உலகம்: கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

(இயல் 2 : உரைநடை உலகம் : விலங்குகள் உலகம்)

 

பாடநூல் மதிப்பீட்டு வினா 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 

1. ஆசிய யானைகளில் ஆண் - பெண் யானைகளை வேறுபடுத்துவது ________

அ) காது

ஆ) தந்தம் 

இ) கண் 

ஈ) கால்நகம் 

[விடை : ஆ. தந்தம்] 


2. தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம் ________

அ) வேடந்தாங்கல்

ஆ) கோடியக்கரை 

இ) முண்டந்துறை

ஈ) கூந்தன்குளம்

[விடை : இ. முண்டந்துறை] 


3. ‘காட்டாறு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________

அ) காடு + ஆறு

ஆ) காட்டு + ஆறு 

இ) காட் + ஆறு

ஈ) காட் + டாறு

[விடை : அ. காடு + ஆறு] 


4. 'அனைத்துண்ணி' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________

அ) அனைத்து + துண்ணி

ஆ) அனை + உண்ணி 

இ) அனைத் + துண்ணி

ஈ) அனைத்து + உண்ணி 

[விடை : ஈ. அனைத்து + உண்ணி] 


5. ‘நேரம் + ஆகி' என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ________

அ) நேரமாகி 

ஆ) நேராகி 

இ) நேரம்ஆகி 

ஈ) நேர்ஆகி

 [விடை : அ. நேரமாகி] 


6. ‘வேட்டை + ஆடிய' என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் 

அ) வேட்டைஆடிய

ஆ) வேட்டையாடிய 

இ) வேட்டாடி

ஈ) வேடாடிய

[விடை : ஆ. வேட்டையாடிய ] 


கோடிட்ட இடத்தை நிரப்புக. 

1. 'காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு' - என்று அழைக்கப்படும் விலங்கு ----------

விடை : புலி 

2. யானைக் கூட்டத்திற்கு ஒரு ---------  யானைதான் தலைமை தாங்கும்.

விடை : பெண் 

3. கரடிகளைத் தேனீக்களிடமிருந்து காப்பது அதன் –--------------

விடை : அடர்ந்த முடிகள் 


குறு வினா 

1. காடு - வரையறுக்க. 

மனிதர்களின் முயற்சியின்றி வளர்ந்த மரங்கள், செடி, கொடிகள், புல், புதர்கள், பூச்சியினங்கள், பறவைகள், விலங்குகள் போன்ற பல உயிர்களின் வாழ்விடம் காடாகும். 

  இடையிடையே காட்டாறுகளும், நீரோடைகளும் இருக்கும். 

மனிதனின் முதல் இருப்பிடம் காடு.


2. யானைகள் மனிதர்களை ஏன் தாக்குகின்றன?

யானைகள் பொதுவாக மனிதர்களைத் தாக்குவதில்லை. 

யானைகள் செல்லும் வழிப்பாதைகளில் மனிதர்கள் குறுக்கிடும்போது, அவர்களைத் தாக்குகின்றன. 

மேலும் யானைக்குக் கண்பார்வைக் குறைவு, கேட்கும் ஆற்றலும் மோப்ப ஆற்றலும் மிகுதியாக உள்ளது. 


3. கரடி ‘அனைத்துண்ணி ' என அழைக்கப்படுவது ஏன்? 

பழங்கள், தேன், உதிர்ந்த மலர்கள், காய்கள், கனிகள், புற்றீசல், கரையான் என அனைத்தையும் உண்பதால் கரடி ‘அனைத்துண்ணி' என அழைக்கப்படுகின்றது. 


4. மானின் வகைகள் சிலவற்றின் பெயர்களை எழுதுக.

1. புள்ளிமான் 

2. சருகுமான் 

3. மிளாமான் 

4. வெளிமான்


சிறு வினா

புலிகள் குறித்து நீங்கள் அறிந்துகொண்ட செய்திகளைத் தொகுத்து எழுதுக. 

புலிகள் தனித்து வாழும் இயல்பு உடையன. 

ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் ஒரு புலி மட்டுமே வாழும். மற்ற புலிகள் அந்த எல்லைக்குச் செல்லாது. 

கருவுற்ற புலியானது 90 நாட்களில் இரண்டு அல்லது மூன்று குட்டிகள் வரைப் பெற்றெடுக்கும். அந்தக் குட்டிகளை இரண்டு ஆண்டுகள் வரை வளர்த்து வரும். 

அவை வேட்டையாடக் கற்றவுடன் அவற்றுக்கான எல்லைகளைப் பிரித்து அனுப்பிவிடும். 


சிந்தனை வினா

காடுகளை அழிப்பதால் ஏற்படும் விளைவுகளைப் பட்டியலிடுக. 

மழை வளம் குறையும்.

மண் தரிசு நிலமாக மாறிவிடும். 

மண்ணரிப்பு ஏற்படும். 

காட்டுயிரிகள் வாழ்விடம் அழியும். 

நோய் தீர்க்கும் மூலிகைகள் அழியும். 

குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும்.

பருவநிலை மாறும். 

உணவுத் தட்டுப்பாடு ஏற்படும். 

மண் வளம் சேர்க்கும் நுண்ணுயிரிகள் அழியும் 

  புவி வெப்பமயமாகும். 

நிலத்தடி நீர் குறையும்.



கற்பவை கற்றபின் 


விலங்குகள் தொடர்பான பழமொழிகளைத் திரட்டி வருக.

எ.கா: புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது. 

1. பார்த்தால் பசு, பாய்ந்தால் புலி. 

2. சாது மிரண்டால் காடு கொள்ளாது. 

3. யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே. 

4. நொண்டிக் கழுதைக்குச் சருக்கினது சாக்காம். 

5. வீட்டில் எலி, வெளியில் புலி. 

6. நாயப் பொறந்தாலும் நல்லாப் பொறக்கனும். 

7. கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை. 

8. ஆடு மாடு இல்லாதவன் அடைமழைக்கு ராசா.

9. தூங்கணாங் குருவிக்குக் குரங்கு புத்தி சொல்லுச்சாம். 


2. காட்டு விலங்குகளின் படங்களைத் திரட்டிப் படத்தொகுப்பு உருவாக்குக.




Tags : Term 1 Chapter 2 | 7th Tamil பருவம் 1 இயல் 2 | 7 ஆம் வகுப்பு தமிழ்.
7th Tamil : Term 1 Chapter 2 : Aninilal kaadu : Prose: Vilangugal ulagam: Questions and Answers Term 1 Chapter 2 | 7th Tamil in Tamil : 7th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 2 : அணிநிழல் காடு : உரைநடை: விலங்குகள் உலகம்: கேள்விகள் மற்றும் பதில்கள் - பருவம் 1 இயல் 2 | 7 ஆம் வகுப்பு தமிழ் : 7 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 2 : அணிநிழல் காடு