அலகு II
பாடம் 7
பைத்தான் செயற்கூறுகள்
கற்றலின் நோக்கங்கள்
இந்த
பாடத்தை கற்றபிறகு, மாணவர்கள்: .
•
செயற்கூறுகளின் கருத்து மற்றும் அதன் வகைகளைப் பற்றி அறிந்து கொள்ள முடியும்.
•
பயனர் வரையறுக்கும் மற்றும் உள்ளிணைந்த செயற்கூறுகளுக்கு இடையே உள்ள வேறுபாட்டை அறிந்து
கொள்ள முடியும்.
•
ஒரு செயற்கூறினை எவ்வாறு அழைப்பது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
•
செயற்கூறின் அளபுருக்களைப் புரிந்து கொள்ள முடியும்.
•
பெயரில்லாத செயற்கூறுவை அறிந்து கொள்ள முடியும்.
• கணித மற்றும் சரங்களின் செயற்கூறுகளைப் பற்றி அறிந்து கொள்ள முடியும்.
அறிமுகம்
ஒரு குறிப்பிட்ட செயலினை செய்வதற்காக வடிவமைக்கப்பட்டு பெயரிடப்பட்ட
குறிமுறையின் தொகுதியே செயற்கூறு எனப்படும். செயற்கூறில் வரையறுத்த குறிப்பிட்ட செயலினை
செய்ய விரும்பினால் அதற்கு பொருத்தமான செயற்கூறின் பெயரை கொண்டு அழைக்க வேண்டும். நிரலில்,
ஒரே செயலை பல தடவை மீண்டும் மீண்டும் செய்ய நேரிட்டால் அதற்கான குறிமுறையை மீண்டும்
எழுதத் தேவையில்லை. அதற்கான செயற்கூறுவை அழைத்தால் மட்டும் போதும், அந்த அழைப்பு பைத்தானின்
செயற்கூற்றின் உள்ளேயுள்ள குறிமுறையை இயக்க செய்யும். செயற்கூறுவின் பயன்பாடு ஒரு நிரலை,
எழுத, படிக்க, சோதிக்க மற்றும் பிழை திருத்தும் வேலைகளை எளிதாக்குகிறது.
செயற்கூறுவின் முதன்மை நன்மைகள்
• குறிமுறையை மீண்டும் எழுதுவதை தவிர்த்து குறிமுறையின் மறு
பயனாக்கத்திற்கு உதவுகிறது.
• நமது பயன்பாட்டிற்குச் சிறந்த கூறுநிலையை வழங்குகிறது.
குறிப்பு
செயற்கூறுகள் என்பது குறிப்பிட்ட செயலை செய்வதற்கான தொடர்புடைய கூற்றுகளின் தொகுதி ஆகும்.