அலகு 3 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - நீரியல் சுழற்சி | 8th Social Science : Geography : Chapter 3 : Hydrologic Cycle
அலகு - 3
நீரியல் சுழற்சி
கற்றலின்
நோக்கங்கள்
>புவியில் காணப்படும் நீர் நிலைகளின் தன்மைகளைப் பற்றி புரிந்து
கொள்ளுதல்
>நீரியல் சுழற்சியின் அடிப்படைக் கருத்துக்களை அறிந்துகொள்ளுதல்
>நீரியல் சுழற்சியின் பல்வேறுபட்ட கூறுகளைத் தெரிந்துகொள்ளுதல்
அறிமுகம்
நீர்
புவியில் காணப்படும் முக்கிய கூறுகளில் ஒன்றாகும். எல்லா தாவரங்களும் விலங்குகளும்
உயிர் வாழ்வதற்கு நீர் அத்தியாவசியமானதாகும். நீரானது குடிநீராக மட்டுமின்றி வீட்டுத்
தேவைகளுக்கும், வேளாண்மைக்கும், தொழிற்சாலைப் பயன்பாட்டிற்கும் மற்றும் பிற தேவைகளுக்கும்
இன்றியமையாததாகும். அனைத்து வகை பொருளாதார செயல்பாடுகளுக்கும் நீர் மிகவும் அத்தியாவசியமாகிறது.
ஆதலால் நீர் புவியின் தவிர்க்க முடியாத கூறாக அமைகிறது. புவியில் நீரின்றி எவ்வுயிரும்
நிலைப்பதற்கு வாய்ப்பே இல்லை.