கண்டங்களை ஆராய்தல்: ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா | அலகு 7 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - வினா விடை | 8th Social Science : Geography : Chapter 7 : Exploring Continents: Africa, Australia and Antarctica

   Posted On :  23.08.2023 02:09 am

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : அலகு 7 : கண்டங்களை ஆராய்தல்: ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா

வினா விடை

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : அலகு 7 : கண்டங்களை ஆராய்தல்: ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா : புத்தக வினாக்கள், கேள்வி பதில்கள்

மதிப்பீடு

 

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

 

1. ஆப்பிரிக்காவின் தென்கோடி முனை ------------------

அ) கேப்பிளாங்கா

ஆ) அகுல்காஸ் முனை

இ) நன்னம்பிக்கை முனை

ஈ) கேப்டவுன்

[விடை: இ) நன்னம்பிக்கை முனை]

 

2. எகிப்திற்கும் சினாய் தீபகற்பத்திற்கும் இடையில் ஒரு நிலச்சந்தி வழியாக உருவாக்கப்பட்ட செயற்கை கால்வாய் ---------------

அ) பனாமா கால்வாய்

ஆ) அஸ்வான் கால்வாய்

இ) சூயஸ் கால்வாய்

ஈ) ஆல்பர்ட் கால்வாய்

[விடை: இ) சூயஸ் கால்வாய்]

 

3. மத்திய தரைக்கடல் காலநிலையோடு தொடர்புடைய பின்வரும் கூற்றுகளைக் கருத்தில் கொண்டு சரியான விடையைத் தேர்வு செய்க .

(i) சராசரி மழையளவு 15 சென்டிமீட்டர்.

(ii) கோடைகாலம் வெப்பமாகவும் வறண்டதாகவும் குளிர்காலம் மழையுடனும் இருக்கும்.

(iii) குளிர்காலம் குளிர்ச்சியாகவும், வறண்டும், கோடை வெப்பமாகவும், ஈரப்பத்துடனும் இருக்கும்.

(iv) சிட்ரஸ் வகை பழங்கள் வளர்க்கப்படுகின்றன.

அ) i சரியானது

ஆ) ii மற்றும் IV சரியானவை

இ) iii மற்றும் iv சரியானவை

ஈ) அனைத்தும் சரியானவை

[விடை: ஆ) ii மற்றும் IV சரியானவை]

 

4. ஆஸ்திரேலியாவின் மேற்கு மற்றும் கிழக்கு நோக்கி பாயும் ஆறுகளை பிரிக்கும் மலைத்தொடர் ---------------

அ) பெரிய பிரிப்பு மலைத்தொடர்

ஆ) இமய மலைத்தொடர்

இ) பிளிண்டர்கள் மலைத்தொடர்

ஈ) மெக்டோனெல் மலைத்தொடர்

[விடை:  அ) பெரிய பிரிப்பு மலைத்தொடர்]

 

5. கல்கூர்லி சுரங்கம் --------------- கனிமத்திற்குப் புகழ்பெற்றது.

அ) வைரம்

ஆ) பிளாட்டினம்

இ) வெள்ளி

ஈ) தங்கம்

[விடை: ஈ) தங்கம்]

 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக


1. அட்லஸ் மலை ஆப்பிரிக்கா கண்டத்தில் அமைந்துள்ளது.

2. ஆப்பிரிக்காவின் மிக உயரமான சிகரம் கிளிமஞ்சாரோ ஆகும்.

3. ஆஸ்திரேலியாவில் அதிகம் காணப்படும் மரம் யூக்கலிப்டஸ்

4. ஆஸ்திரேலியாவில் உள்ள மிதவெப்ப மண்டல புல்வெளிகள் டவுன்ஸ் என அழைக்கப்படுகின்றன.

5. அண்டார்டிகாவில் நிறுவப்பட்ட முதல் இந்திய ஆய்வு நிலையம் தட்சின் கங்கோத்ரி

 

III பொருத்துக

 

1. பின்னாக்கள் – புவியிடைக் கோட்டுக்காடுகள்

2. கிரில் - உப்பு ஏரி

3. நெருப்புக்கோழி - சிறிய செம்மீன்

4. ஐரி ஏரி - பறக்க இயலாத பறவை

5. புவியின் அணிகலன் – சுண்ணாம்பு பாறை தூண்கள்

 

விடைகள் 

1. பின்னாக்கள் – சுண்ணாம்பு பாறை தூண்கள்

2. கிரில் - சிறிய செம்மீன்

3. நெருப்புக்கோழி - பறக்க இயலாத பறவை

4. ஐரி ஏரி - உப்பு ஏரி

5. புவியின் அணிகலன் – புவியிடைக் கோட்டுக்காடுகள்

 

 

IV சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்


1. கூற்று: அரோரா என்பது வானத்தில் தோன்றும் வண்ண ஒளிகள் ஆகும். காரணம்: அவை வளிமண்டலத்தின் மேலடுக்குக் காந்தபுயலால் ஏற்படுகின்றன.

அ) கூற்று மற்றும் காரணம் உண்மை, கூற்று காரணத்திற்கான சரியான விளக்கம்.

ஆ) கூற்று மற்றும் காரணம் உண்மை கூற்று காரணத்திற்கான சரியான விளக்கம் அல்ல.

இ) கூற்று உண்மை ஆனால் காரணம் தவறு.

ஈ) காரணம் உண்மை ஆனால் கூற்று தவறு.

விடை: இ) கூற்று உண்மை ஆனால் காரணம் தவறு.

 

2. கூற்று: ஆப்பிரிக்காவின் நிலவியல் தோற்றங்களில் ஒரு முக்கிய அம்சம் பெரிய பிளவுப் பள்ளத்தாக்கு ஆகும்.

காரணம்: புவியின் உள்விசை காரணமாக புவியின் மேற்பரப்பில் உண்டான பிளவு

அ) கூற்று மற்றும் காரணம் சரி கூற்றுகான காரணம் சரியான விளக்கம்

ஆ) கூற்று காரணம் இரண்டும் சரி ஆனால் கூற்றுகான காரணம் சரியான விளக்கம் அல்ல.

இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.

ஈ) காரணம் சரி ஆனால் கூற்று தவறு.

விடை: அ) கூற்று மற்றும் காரணம் சரி கூற்றுகான காரணம் சரியான விளக்கம்

 

V சுருக்கமாக விடையளி

 

1. ஆப்பிரிக்கா 'தாய் கண்டம்' என அழைக்கப்படுவது ஏன்?

புவியில் மனித இனங்கள் வாழ்ந்த பழமையான கண்டம் என்பதால் ஆப்பிரிக்கா ‘தாய் கண்டம் என அழைக்கப்பட்டது.  

 

2. ஆப்பிரிக்காவின் முக்கியமான ஆறுகள் யாவை?

> நைல் நதி

> காங்கோ நதி

> நைஜர் நதி

> ஜாம்பசி நதி

> லிம்போபோ நதி

> ஆரஞ்சு நதி

 

3. ஆஸ்திரேலியாவின் நிலத்தோற்ற பிரிவுகள் யாவை?

> மேற்கு ஆஸ்திரேலிய பெரிய பீடபூமி - மத்திய தாழ் நிலங்கள்

> கிழக்கு உயர் நிலங்கள்

 

4. அண்டார்டிகா கண்டத்தின் தன்மை குறித்து எழுதவும்.

> அண்டார்டிகா கண்டம் ஒரு தனித்துவம் வாய்ந்த கண்டமாகும். இது பூர்வீக மக்களைக் கொண்டிருக்கவில்லை.

> அண்டார்டிகாவில் எந்த ஒரு நாடும் இல்லை.

> இது துருவப் பகுதியில் அமைந்துள்ளதால், நிரந்தர பனியுடன் மிகக் குளிர்ந்த பிரதேசமாக உள்ளது.

> இது மலைத்தொடர்கள், சிகரங்கள், பள்ளத்தாக்குகள், பனியாறுகள், பீடபூமிகள் மற்றும் எரிமலைகளை உள்ளடக்கியதாகும்.

 

5. ஆஸ்திரேலியாவின் பொருளாதார நடவடிக்கைகள் ஏதெனும் நான்கினைக் குறிப்பிடுக.

வேளாண்மை, வளம் சார்ந்த தொழில்கள், மீன்பிடித்தல், உற்பத்தித் தொழில்கள், வணிகம் மற்றும் சேவைப்பிரிவு ஆகியவை ஆஸ்திரேலியாவின் முக்கிய பொருளாதார நடவடிக்கைகள் ஆகும்.

 

 

VI வேறுபடுத்துக


1. சாஹேல் மற்றும் சகாரா


2. மேற்கு அண்டார்டிகா மற்றும் கிழக்கு அண்டார்டிகா


3. பெரிய பவளத் திட்டு மற்றும் ஆர்டீசியன் வடிநிலம்.


 

VII காரணம் கூறு

 

1. எகிப்து நைல் நதியின் நன்கொடை என அழைக்கப்படுகிறது ஏன்?

நைல் நதி எகிப்தின் வாழ்வாதாரமாக விளங்குகிறது, நைல் நதி எகிப்தில் இல்லையென்றால் இந்நாடு பாலைவனமாக இருந்திருக்கும். இதனால் எகிப்து நைல் நதியின் நன்கொடை எனப்படுகிறது.

 

2. வெப்ப பாலைவனங்கள் கண்டங்களின் மேற்கு விளிம்புகளில் அமைந்துள்ளன.

மேற்கு விளிம்புகள் மணல் மற்றும் பாறைகளால் ஆன பகுதியாக உள்ளது. எனவே இப்பகுதி வறண்ட வெப்ப பாலைவனமாக உள்ளது.

 

3. அண்டார்டிகா ஆராய்ச்சியாளர்களின் கண்டம் என அழைக்கப்படுகிறது.

உலகின் எந்த ஒரு நாட்டின் மக்களும் அண்டார்டிகாவில் ஆய்வுகள் மேற்கொள்ளவும், தரவுகள் சேகரிக்கவும் அனுமதிக்கப்படுகிறார்கள். எனவே இக்கண்டம் ‘ஆராய்ச்சியாளர்களின் கண்டம் என அழைக்கப்படுகிறது.

 

VIII விரிவான விடையளி


1. ஆஸ்திரேலியாவின் கனிம வளங்கள் குறித்து விரிவாக எழுதவும்.

> ஆஸ்திரேலியா பாக்சைட், லைமோனைட், ரூட்டில் மற்றும் சிர்கான் உற்பத்தியில் முன்னணி நாடாக உள்ளது.

> தங்கம், ஈயம், லித்தியம், மாங்கனீசு தாது மற்றும் துத்தநாகம் உற்பத்தியில் இது இரண்டாவது இடம் வகிக்கிறது.

> இரும்புத்தாது மற்றும் யுரேனிய உற்பத்தியில் மூன்றாவது பெரிய உற்பத்தியாளராக உள்ளது.

> நிலக்கரி உற்பத்தியில் நான்காவது இடம் வகிக்கிறது.

> மேற்கு மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா பகுதிகளில் நிலக்கரி வயல்கள் உள்ளன.

> மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் இரும்புத் தாது கிடைக்கிறது.

> கார்பென்டேரியா வளைகுடா, பெர்த் மற்றும் டாஸ்மேனியாவை சுற்றியுள்ள பகுதிகளில் பாக்சைட் கிடைக்கிறது.

> பாஸ் நீர்ச்சந்தி மற்றும் மேற்கு பிரிஸ்பேன் பகுதிகளில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு கிடைக்கிறது.

> வட யூனியன் பிரதேசம் மற்றும் குயின்ஸ்லாந்து பகுதிகளில் யுரேனியம் கிடைக்கிறது.

> கால் கூர்லி மற்றும் கூல் கார்லி பகுதிகளில் தங்கம் கிடைக்கிறது.

> காரியம், துத்தநாகம், வெள்ளி, டங்ஸ்டன், நிக்கல் மற்றும் செம்பு ஆகியவை ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் கிடைக்கின்றன.

 

2. அண்டார்டிகா கண்டத்தின் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் பற்றி விவரி.

தாவரங்கள்:

> அண்டார்டிகாவில் வெப்பநிலையானது ஆண்டு முழுவதும் உறை நிலைக்குக் கீழே இருப்பதால் பெரிய தாவரங்கள் எதுவும் காணப்படவில்லை

> சிறுவகை தாவரங்களான பாசிகள், படர்பாசிச் செடிகள், நுரைப்பாசிகள். மரப்பாசிகள், நுண்ணிய பூஞ்சைகள் போன்றவை பனியை தாங்கி வளர்கின்றன.

> பிளாங்டன். பாசிகள் மற்றும் மரப்பாசிகள் நன்னீர் மற்றும் உவர் நீர் ஏரிகளில் காணப்படுகின்றன.

விலங்கினங்கள்:

> சிறிய வகை செம்மீன்களான கிரில்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன.

> நீலத்திமிங்கலம், கடற்பசு மற்றும் கடல்பறவைகளான பென்குவின், அல்பட்ராஸ். போலார் ஸ்குவா மற்றும் ஸ்டவுட் ஆகியவையும் காணப்படுகின்றன.

> இங்குள்ள பறவைகள் மற்றும் விலங்கினங்கள் குளிர்கால நிலையை எதிர்கொள்ள தங்கள் உடலில் புளூபர் எனப்படும் அடர்த்தியான கொழுப்பு அடுக்கினைக் கொண்டுள்ளன.

> பென்குயின் பறவைகள் இறக்கைகளுக்குப் பதிலாக நீந்துவதற்குப் பயன்படும் பிலிப்பர் மற்றும் அகலமான பாதங்களைப் பெற்றுள்ளன. இப்பறவைகளால் பறக்க இயலாது.

> சிறிய முதுகெலும்பற்ற உயிரினங்கள் இங்குள்ள நிலவாழ் விலங்கினங்களாகும்.

 

3. ஆப்பிரிக்காவின் இயற்கைப் பிரிவுகளை எழுதி அவற்றில் ஏதேனும் ஒன்றினை விளக்கவும்.

ஆப்பிரிக்காவின் இயற்கைப் பிரிவுகள் :

> சஹாரா

> சாஹேல்

> சவானா

> பெரிய பள்ளத்தாக்கு மற்றும் ஆப்பிரிக்காவின் பெரிய ஏரிகள்

> கிழக்கு ஆப்பிரிக்க உயர் நிலங்கள்

> சுவாலி கடற்கரை

> காங்கோ வடிநிலம்/ ஜையர் வடிநிலம்

> தென் ஆப்பிரிக்கா

சஹாரா:

> ஆப்பிரிக்காவின் வட பகுதியில் உலகப் புகழ்ப்பெற்ற சகாரா பாலைவனம் அமைந்துள்ளது.

> இது உலகின் மிகப்பெரிய வெப்ப மண்டல பாலைவனமாகும்.

> சகாராவின் மேற்கில் அட்லாண்டிக் பெருங்கடலும், கிழக்கில் செங்கடலும், வடக்கில் மத்திய தரைக்கடலும் தெற்கில் சாஹேல் ஆகியன இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

> இது 11 நாடுகளில் பரவியுள்ளது. சகாரா பாலைவனம் மலைகள், பீடபூமிகள், எர்க்ஸ், பாலைவனச் சோலை, மணல், உப்பு ஏரி, ஆற்றுக் கொப்பரைகள் மற்றும் ஊதுபள்ளங்கள் போன்ற பல்வேறு நிலத்தோற்றங்களை உள்ளடக்கியது.

> மௌண்ட கௌசி எனப்பட்ட செயலிழந்த எரிமலை சஹாரா பாலைவனத்தின் மிக உயரமான பகுதியாகும்.

 

IX வரைபடப் பயிற்சி

ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவின் புற எல்லை வரைபடத்தில் பின்வருவனவற்றைக் குறிக்கவும்

ஆப்பிரிக்கா: புவிநடுக்கோடு, அட்லஸ் மலை, சஹாரா, கிழக்கு உயர் நிலங்கள், மத்திய தரைக்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், சூயஸ் கால்வாய், கிளிமஞ்சாரோ சிகரம்,



ஆஸ்திரேலியா: பெரிய பிரிவு மலைத்தொடர், பெரிய பவளத் திட்டு, பிளவுப் பள்ளத்தாக்கு, டாஸ்மேனியா, மகரரேகை, பசிபிக் பெருங்கடல், பெரிய ஆஸ்திரேலிய மணல் பாலைவனம், இந்தியப் பெருங்கடல், சிட்னி, கான்பெரா.







 

X செயல்பாடுகள் 


1.கீழ்க்கண்ட நாடுகளில் டிசம்பர் மாத பருவநிலை மற்றும் அது எந்த கோளத்தில் அமைந்துள்ளது என்பதனை கண்டறியவும்.



2.ஆஸ்திரேலிய அரசியல் புவிவரைபடத்தில் உள்ள மாநிலங்களின் பெயர்களைக் எழுதவும்.



Tags : Exploring Continents: Africa, Australia and Antarctica | Chapter 7 | Geography | 8th Social Science கண்டங்களை ஆராய்தல்: ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா | அலகு 7 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல்.
8th Social Science : Geography : Chapter 7 : Exploring Continents: Africa, Australia and Antarctica : Questions with Answers Exploring Continents: Africa, Australia and Antarctica | Chapter 7 | Geography | 8th Social Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : அலகு 7 : கண்டங்களை ஆராய்தல்: ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா : வினா விடை - கண்டங்களை ஆராய்தல்: ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா | அலகு 7 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : அலகு 7 : கண்டங்களை ஆராய்தல்: ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா