மாவட்ட நிருவாகம் | இரண்டாம் பருவம் அலகு 3 | 3 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - வினா விடை | 3rd Social Science : Term 2 Unit 3 : District Administration

3 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : இரண்டாம் பருவம் அலகு 3 : மாவட்ட நிருவாகம்

வினா விடை

3 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : இரண்டாம் பருவம் அலகு 3 : மாவட்ட நிருவாகம் : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள்
மாவட்ட நிருவாகம் ( இரண்டாம் பருவம் அலகு 3 : 3 ஆம் வகுப்பு சமூக அறிவியல் )

மதிப்பீடு 

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.

1. மாவட்ட நிருவாகத்தின் தலைவர் __________ ஆவார்.

அ) மாவட்ட ஆட்சியர் 

ஆ) நீதிபதி 

இ) காவல்துறைக் கண்காணிப்பாளர்

விடை : அ) மாவட்ட ஆட்சியர் 


2. அரசாங்க மருத்துவமனைகளுக்கு __________ பொறுப்பாளர் ஆவார். 

அ) காவல்காரர்கள் 

ஆ) மருத்துவ அலுவலர்கள் 

இ) ஓட்டுநர்கள்

விடை : ஆ) மருத்துவ அலுவலர்கள் 


3. காவல்துறை __________ பாதுகாக்கிறது. 

அ) உடல்நலம்

ஆ) வனம்

இ) சட்டம் மற்றும் ஒழுங்கு

விடை : இ) சட்டம் மற்றும் ஒழுங்கு 


4. __________ மாவட்டத்தின் கல்வித்துறையின் செயல்பாட்டை கண்காணிப்பார். 

அ) வன அலுவலர் 

ஆ) முதன்மைக் கல்வி அலுவலர் 

இ) மருத்துவ அலுவலர்

விடை : ஆ) முதன்மைக் கல்வி அலுவலர் 


5. மாவட்டத்தில் சுகாதாரத்தைப் பேணுவதற்கு __________ அறிவுரை வழங்குவார் 

அ) மருத்துவ அலுவலர் 

ஆ) வன அலுவலர்  

இ) வருவாய்த் துறை அலுவலர்

விடை : அ) மருத்துவ அலுவலர்



II. சரியா / தவறா எழுதுக. 

1. மாவட்ட ஆட்சியர் UPSC நடத்தும் தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்.

[ விடை : சரி ] 

 

2. ஆசிரியர், நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடைகிறதா என்பதனைக் கண்காணிப்பார்.

[ விடை: தவறு ] 


3. முதன்மைக் கல்வி அலுவலர் கல்வித்துறையைக் கண்காணிப்பார். 

[ விடை : சரி ] 


4. காவல் அலுவலர்கள் அரசாங்க மருத்துவமனைகளுக்குப் பொறுப்பாளர்கள் ஆவர்.

[ விடை: தவறு ] 


5. வனத்துறை அலுவலர் வனத்துறைக்குப் பொறுப்பாளர் ஆவார். 

[ விடை : சரி ]



III. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க.

1. மாவட்ட நிருவாகத்தின் தலைமை யார்?

மாவட்ட ஆட்சியர். 


2. மாவட்ட ஆட்சியர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்?

❖ இந்திய ஆட்சிப்பணி (I.A.S.) அதிகாரிகள் U.P.S.C (மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். 

❖ இந்த இந்திய ஆட்சிப் பணி (I.A.S.) அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்களாக நியமிக்கப்படுகிறார்கள். 


3. மாவட்டத்திலுள்ள ஏதேனும் மூன்று துறைகளின் பெயர்களை எழுதுக.

❖ காவல்துறை 

❖ மருத்துவத்துறை 

❖ வனத்துறை மற்றும்

❖ கல்வித்துறை 


4. மாவட்டத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கை யார் பாதுகாக்கிறார்கள்?

காவல்துறை அதிகாரிகள். 


5. மருத்துவ அலுவலரைப் பற்றி எழுதுக.

❖ மருத்துவ அலுவலர்கள் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு பொறுப்பாளர்கள் ஆவர். 

❖ அவர்கள் சுகாதாரத்தைப் பற்றியும், உடல்நலத்தைப் பற்றியும் அறிவுரை வழங்குவார்கள்.



செயல் திட்டம்.

மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு துறைகளின் பெயர்களை எழுதி வருக.

❖ சுகாதாரத்துறை

❖ பொதுப்பணித்துறை 

❖ காட்டு இலாகாத்துறை

❖ கல்வித்துறை 

❖ அஞ்சல்துறை 

❖ போக்குவரத்துத்துறை



செயல்பாடு 

I. விடுபட்ட இடங்களைக் குறிப்புகளைக் கொண்டு நிரப்புக. 

❖ மாவட்டத்தின் நிருவாகத் தலைமை - மாவட்ட ஆட்சியர் 

❖ சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பவர் - காவலர் 

❖ உடல்நலம் குறித்த அறிவுரை வழங்குபவர் - மருத்துவர் 

❖ அறநெறிகளைப் போதிப்பவர் - ஆசிரியர் 


II. சரியா / தவறா எழுதுக.

1. மாவட்ட ஆட்சியர் இயற்கைப் பேரிடரின்போது தக்க நடவடிக்கைகள் எடுப்பார். [ சரி ] 

2. மாவட்ட ஆட்சியர் உள்ளாட்சி அமைப்புகளை மேற்பார்வையிடமாட்டார். [ தவறு ] 

3. காவல்துறைக் கண்காணிப்பாளர் திட்டங்கள் மக்களை சென்றடைவதை உறுதி செய்யமாட்டார். [ தவறு ] 

4. மாவட்ட ஆட்சியர் பல்வேறு துறைகளின் தலைமைகளோடு இணைந்து மாவட்ட நிருவாகம் அமைதியாக நடைபெற பணியாற்றுவார். [ சரி ]



சிந்தனை செய்

1. காவலர்களின் சில கடமைகளைக் கூறுக.

❖ திருடர்களிடமிருந்து மக்களைக் காத்தல். 

❖ சாலை விபத்துகளிலிருந்து மக்களைப் பாதுகாத்தல். 

❖ வாகனங்களின் போக்குவரத்தை முறைப்படுத்துதல்.

❖ சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரித்தல். 


2. மாவட்டக் கல்வி அலுவலகம், மாவட்டத்தின் கல்வி மற்றும் நிர்வாகம் சார்ந்த நடவடிக்கைகளை மேற்பார்வையிடுகிறது.

❖ பள்ளிகளை ஆய்வு செய்தல். 

❖ சிறந்த ஆசிரியர்களைக் கௌரவித்தல். 

❖ தனியார் நிர்வாகப் பள்ளிகளுக்கு ஊதியம் வழங்கப் பரிந்துரைத்தல்.

❖ கல்வியின் தரத்தை ஆய்வு செய்தல். 

❖ மாணவர்களுக்குத் தரமான கல்வி வழங்க பள்ளிகளுக்கு ஆலோசனை வழங்குதல்.




Tags : District Administration | Term 2 Chapter 3 | 3rd Social Science மாவட்ட நிருவாகம் | இரண்டாம் பருவம் அலகு 3 | 3 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
3rd Social Science : Term 2 Unit 3 : District Administration : Questions with Answers District Administration | Term 2 Chapter 3 | 3rd Social Science in Tamil : 3rd Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 3 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : இரண்டாம் பருவம் அலகு 3 : மாவட்ட நிருவாகம் : வினா விடை - மாவட்ட நிருவாகம் | இரண்டாம் பருவம் அலகு 3 | 3 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 3 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
3 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : இரண்டாம் பருவம் அலகு 3 : மாவட்ட நிருவாகம்