பணம் | மூன்றாம் பருவம் அலகு 5 | 3 ஆம் வகுப்பு கணக்கு - விலை பட்டியலும் எளிய பற்றுச்சீட்டும் | 3rd Maths : Term 3 Unit 5 : Money
விலை பட்டியலும் எளிய பற்றுச்சீட்டும்
விலைப் பட்டியல்.
விலைப் பட்டியலை நாம் கடைகளில் காணலாம். விலைப்பட்டியல் நமக்குக் கடையிலுள்ள ஒவ்வொரு பொருளின் விலையையும் தெரிவிக்கப் பயன்படுகிறது.
பற்றுச்சீட்டுகள்
பற்றுச் சீட்டுகள் வாடிக்கையாளர் பொருள்களை வாங்கியதற்கான அத்தாட்சியாகக் கடைக்காரர்களால் கொடுக்கப்படுகிறது. பொருள்கள் வாங்கியதற்கான முழு விவரமும் பற்றுச்சீட்டுகள் தெரிவிக்கின்றன.
பிரியா ஓர் உணவகத்திற்குச் சென்றாள். பணியாளர் அவளிடம் உணவுப் பட்டியல் அட்டையை கொடுத்தார். அந்த உணவுப் பட்டியலின் அட்டையில் உணவகத்திலுள்ள உணவுப் பண்டங்களும் அவைகள் ஒவ்வொன்றின் விலையும் பட்டியலிடப்பட்டிருந்தன.
பிரியாவும் அவள் நண்பரும் பின்வரும் உணவுப் பண்டங்களை வாங்கினர்.
அவர்கள் சாப்பிட்டு முடித்தவுடன் பணியாளர் பற்றுச்சீட்டினைக் கொடுத்தார்.
பிரியா வாங்கிய உணவுப் பொருள்களையும் அவள் செலுத்த வேண்டிய மொத்தத் தொகையையும் பற்றுச்சீட்டுத் தெரிவிக்கிறது.
மேலே கொடுக்கப்பட்ட பற்றுச்சீட்டிலிருந்து நமக்குப் பின்வரும் தகவல்கள் தெரிய வருகிறது.
i. உணவகத்தின் பெயர் உணவக உணவு
ii. பற்றுச்சீட்டு எண் 25
iii. பற்றுச்சீட்டு தேதி 30.10.2019
iv. அவர்கள் உண்ட உணவுப் பொருள்களின் எண்ணிக்கை 3
v. அவர்கள் செலுத்த வேண்டிய மொத்தத் தொகை 20
vi. ஒரு இட்லியின் விலை 10
vii. ஒரு தோசையின் விலை 30
viii. ஒரு மசால் வடையின் விலை 5
ix. இரண்டு பூரி செட்களின் விலை 90
1. பின்வருவனவற்றை இராஜாவாலும் அவர் குடும்பத்தினராலும் உண்ணப்பட்ட உணவுகள் ஆகும். பற்றுச்சீட்டைப் பயன்படுத்திக் கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. உணவகத்தின் பெயர் உணவக உணவு
2. பற்றுச்சீட்டு எண் 32
3. பற்றுச்சீட்டு தேதி 30 . 10 . 2019
4. உண்ட உணவின் மொத்த எண்ணிக்கை 14
5. செலுத்த வேண்டிய தொகை 310.
2. கொடுக்கப்பட்டுள்ள பற்றுச்சீட்டை நிறைவு செய்து செலுத்த வேண்டிய மொத்தத் தொகையைக் கண்டறிக
3. கொடுக்கப்பட்ட விலைப்பட்டியலைப் பயன்படுத்தி வாங்கப்பட்ட பொருள்களுக்குப் பற்றுச்சீட்டு தயாரிக்கவும்.
i. இரண்டு எழுதுகோல்கள், மூன்று அழிப்பான்கள் மற்றும் ஒரு வண்ண எழுதுகோலையும் ரம்யா வாங்கினாள். அவள் வாங்கிய பொருள்களுக்குப் பற்றுச்சீட்டு தயாரிக்கவும்.
ii. ஓர் அழிப்பான், ஒரு கரிக்கோல் துருவி மற்றும் இரண்டு எழுதுகோல்களை இரவி வாங்கினான். அவன் வாங்கிய பொருள்களுக்குப் பற்றுச்சீட்டு தயாரிக்கவும்.
செயல்பாடு
பல்வேறு கடைகளின் பற்றுச்சீட்டுகளைச் சேகரித்து ஆல்பம் தயாரிக்கவும்.