Home | 6 ஆம் வகுப்பு | 6வது சமூக அறிவியல் | மீள்பார்வை, கலைச்சொற்கள்

சமத்துவம் பெறுதல் | பருவம் 1 அலகு 2 | குடிமையியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - மீள்பார்வை, கலைச்சொற்கள் | 6th Social Science : Civics : Term 1 Unit 2 : Achieving Equality

6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : பருவம் 1 அலகு 2 : சமத்துவம் பெறுதல்

மீள்பார்வை, கலைச்சொற்கள்

முன்முடிவு (பாரபட்சம்) என்பது மற்றவர்களைப்பற்றி எதிர்மறையான அல்லது தாழ்வான முறையில் கருதுவதாகும்.

மீள்பார்வை:

❖ முன்முடிவு (பாரபட்சம்) என்பது மற்றவர்களைப்பற்றி எதிர்மறையான அல்லது தாழ்வான முறையில் கருதுவதாகும்.

❖ மாறாக் கருத்து என்பது ஏதாவது ஒன்றைப் பற்றிய தவறான கண்ணோட்டம் அல்லது கருத்தாகும்.

❖ பாகுபாடு என்பது மக்களின் மீது ஏற்படுத்திக்கொள்ளும் தவறான செயலாகும். பாகுபாடானது நிறம், வர்க்கம், மதம், பாலினம் போன்றவற்றின் அடிப்படையில் ஏற்படுவதாகும்.

❖ சமத்துவமின்மை மற்றும் பாகுபாடிற்கான மிகவும் முக்கிய காரணம் சாதி அமைப்பாகும்.

❖ பாலின பாகுபாடு என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான சுகாதாரம், கல்வி, பொருளாதாரம் மற்றும் அரசியல் ஏற்றத்தாழ்வுகளை குறிக்கிறது.

❖ மத பாகுபாடு என்பது மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு தனி நபரையோ அல்லது குழுவினரையோ சமத்துவமின்றி நடத்துவதாகும்.

 

கலைச் சொற்கள்

முன்முடிவு / பாரபட்சம் -  ஒருவர் குறித்து எதிர்மறையாக முடிவு செய்தல் அல்லது தாழ்வாக மதிப்பிடுதல்

மாறாக் கருத்து -  நிலையான வடிவத்தை ஏற்படுத்துவது.

பாகுபாடு - மக்களை சாதி, நிறம், மதம், பாலினம் ஆகிய காரணங்களுக்காக சமத்துவமின்றி நடத்துவதாகும்.

சமத்துவமின்மை - சமூக ரீதியாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ அல்லது இரண்டிலுமோ சமத்துவம் இல்லாமலிருத்தல்.

அரசமைப்புச் சட்டம் - ஓர் அரசோ அல்லது அமைப்பையோ நிர்வகிக்க அல்லது மேலாண்மை செய்ய முன்கூட்டியே வடிவமைக்கப்பட்டிருக்கும் அடிப்படை கொள்கைகள்.


இணைய வளங்கள்

1. http://www.ncsc.nic.in/ (The National Commission for Scheduled Castes)

2. http://ncst.nic.in/ (The National Commission for Scheduled Tribes)

3. http://www.ncw.nic.in/ (The National Commission for Women)

4. Censusindia.gov.in

Tags : Achieving Equality | Term 1 Unit 2 | Civics | 6th Social Science சமத்துவம் பெறுதல் | பருவம் 1 அலகு 2 | குடிமையியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
6th Social Science : Civics : Term 1 Unit 2 : Achieving Equality : Recap, Glossary Achieving Equality | Term 1 Unit 2 | Civics | 6th Social Science in Tamil : 6th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : பருவம் 1 அலகு 2 : சமத்துவம் பெறுதல் : மீள்பார்வை, கலைச்சொற்கள் - சமத்துவம் பெறுதல் | பருவம் 1 அலகு 2 | குடிமையியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 6 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : பருவம் 1 அலகு 2 : சமத்துவம் பெறுதல்