நீரியல் சுழற்சி | அலகு 3 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - மீள்பார்வை, கலைச்சொற்கள் | 8th Social Science : Geography : Chapter 3 : Hydrologic Cycle
மீள்பார்வை
• புவியின்
மிக முக்கிய கூறுகளில் நீர் ஒன்றாகும். எல்லா விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும் உயிர்வாழ
நீர் அத்தியாவசியமாகிறது.
• ஏறத்தாழ
71% புவியின் மேற்பரப்பு நீரால் சூழப்பட்டுள்ளது. இதில் 2.8% தூய நீராகவும், 97.2%
சதவிகிதம் உப்பு நீராக கடலிலும், பெருங்கடலிலும் காணப்படுகிறது.
• நீரியில்
சுழற்சி என்பது உலக அளவிலான ஒரு நிகழ்வு ஆகும். இது கடலிலிருந்து நீரை வளிமண்டலத்திற்கும்,
வளிமண்டலத்திலிருந்து புவிக்கும், புவியிலிருந்து மீண்டும் கடலுக்கு எடுத்து செல்லும்
ஒரு சுழற்சி ஆகும்.
• நீரியல்
சுழற்சியில் ஆறு முக்கிய கூறுகள் உள்ளன. அவையானவன ஆவியீர்ப்பு, நீர் சுருங்குதல், மழைப்பொழிவு,
நீர் ஊடுருவல், நீர் உட் கசிவு, மற்றும் நீர் வழிந்தோடல்
• உலகின்
வெப்பமண்டல பிரதேசங்களில் பொழிவானது தூறல் அல்லது மழைப்பொழிவு வடிவத்தில் காணப்படும்
மழை, கல் மழை, உறைபனி, ஆலங்கட்டி மழை ஆகியன பொழிவின் பொதுவான வடிவங்களாகும்.
• புவியின்
மேற்பரப்பிலுள்ள மண்ணின் அடுக்கிற்குள் நீர் புகுதலுக்கு நீர் ஊடுருவல் என்று பெயர்.
நீர் ஊடுருவல் மூலம் மண் தற்காலிகமாக தண்ணீரைச் சேமித்து மண்ணில் உள்ள உயிரினங்களுக்கும்,
தாவரங்களுக்கும் கிடைக்கச் செய்கிறது.
மேற்கோள்
நூல்கள்
1.
Davie, T. (2008). Fundamentals of Hydrology (Second Edition – Routledge
Fundamentals of Physical Geography Series). Routledge - Taylor & Francis
Group, New York.
2.
Musy, A. and Higy, C. (2011). Hydrology: A Science of Nature Science
Publishers, Enfield. 3. Raghunath, H.M. (2006). Hydrology – Principles,
Analysis and Design (Revised Second Edition). New Age International (P)
Limited, Publishers, New Delhi.
4.
Rakhecha, P.R. and Singh, V.P. (2009). Applied Hydrometeorology, Springer
Publishing Company, Dordrecht and Capital Publishing Company, New Delhi.
5.
Viessman, W. (Jr), Lewis, G.L. (2003). Introduction to Hydrology (Fifth
Edition). Prentice-Hall of India Private Limited, New Delhi.
இணையதள வளங்கள்
* http:// www.fao.org/docrep/X0490E/x0490e04.htm.
* https: / www.sciencelearn.org.nz (UniversityofWaikato).
* https://cals.arizona.edu/azmet/etowhat1.pdf.
* https://pmm.nasa.gov/education/sites/default/files/lesson_plan_files/evaporation_investigation_lesson_plan.pdf.
* https://www.watereducation.org/aquapedia-background/runoff.