நீரியல் சுழற்சி | அலகு 3 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - புவியில் நீரின் பங்கு | 8th Social Science : Geography : Chapter 3 : Hydrologic Cycle
புவியில்
நீரின் பங்கு
ஏறத்தாழ
71% புவியின் மேற்பரப்பு நீரால் சூழப்பட்டுள்ளது. புவியில் உள்ள நீரின் அளவு 326 மில்லியன்
கன மைல்கள் (Cubic), இவ்வளவு பெரிய கன அளவு நீரை கண்ணால் காண்பது என்பது மிகவும் கடினம்.
புவியில் உள்ள பெரும்பகுதியிலான நீர் உவர்ப்பு நீர். இது கடலிலும், பேராழிகளிலும் காணப்படுகிறது.
புவியில் உள்ள மொத்த
ஆதாரம்:
shiklomanov 1993
நீரில்
97.2% உவர்ப்பு நீராகவும் மற்றும் 2.8% நன்னீராகவும் உள்ளது . இந்நன்னீரில் 2.2% புவியின்
மேற்பரப்பிலும், மீதமுள்ள 0.6% நிலத்தடி நீராகவும் கிடைக்கப்பெறுகிறது. புவியின் மேற்பரப்பில்
காணப்படும் 2.2% நன்னீரில் 2.15% பனியாறுகளாகவும் மற்றும் பனிமலைகளாகவும், 0.01% ஏரிகளாகவும்,
ஆறுகளாகவும், மீதமுள்ள 0.04% மற்ற நீர் வடிவங்களாகவும் காணப்படுகிறது. மொத்த நிலத்தடி
நீரில் இப்பொழுது 0.6% பொருளாதார ரீதியில் நவீன தொழில் நுட்பத்தின்மூலம் துளையிட்டு
எடுக்கப்படுகிறது.