தகவல் செயலாக்கம் | பருவம்-3 அலகு 6 | 2வது கணக்கு - உறவு முறை | 2nd Maths : Term 3 Unit 6 : Information Processing
உறவு முறை
குடும்ப நேரம்
கலைச்சொற்கள் : உறவு, மூத்தோர், இளையோர்
யாழினி : தாத்தா,
அங்கே பாருங்கள், என் நண்பன் வந்துகொண்டிருக்கின்றான்.
புண்ணியக்கோடி : அவனுடைய பெயர் என்ன? நான் அவனைப் பார்த்ததில்லையே!
யாழினி : அவனுடைய பெயர் செழியன், தாத்தா.
செழியன் : காலை வணக்கம், தாத்தா.
புண்ணியக்கோடி : காலை வணக்கம், செழியன் உன்னுடைய தந்தை யார்?
செழியன் : அன்பரசன் என்னுடைய தந்தை, அவர் ஓர் ஆசிரியர்.
புண்ணியக்கோடி : ஓ! பூவரசனின் பெயரனா (பேரனா) நீ !
செழியன் : ஆம், தாத்தா.
உரையாடல் தொடர்கிறது...
இன்னும் பல உறவுமுறைகளை இணைத்து மேலும் உரையாடலைத் தொடரலாம். குழந்தைகள் தங்கள் தாய், தந்தை வழி உறவு முறைகளுடன் தங்களுக்கான உறவை அறியச் செய்க.
செழியனின் குடும்பம்
மேலே உள்ள குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் அடிப்படையில் செழியனுக்கும் உள்ள உறவு முறை.
செழியனின் குடும்பத்தில் அனைவரையும் விட இளையவர் யார்?
விடை: வெற்றிச்செல்வி செழியனின் தங்கை
அந்த நபரை விட வயதில் மூத்தோரின் பெயர்களை எழுதுக.
விடை: பூவரசன், நாவரசி,
அன்பரசன், முத்தழகி, செழியன்
பொருத்தமான உறவு முறைகளைக் கட்டங்களில் நிரப்புக:
மகன் - தந்தை
பேத்தி - தாத்தா
மருமகள் - மாமியார்
செழியனின் குடும்பத்தில் இரண்டு குழந்தைகள் உள்ளனர் எனில்,செழியனின் உடன்பிறந்தவர் யார்? தாத்தா/ அப்பா/ சகோதரி
உங்கள் குடும்ப வரைபடத்தை வரைந்து குடும்ப உறுப்பினர்களின் பெயரையும் வயதையும் அதில் குறிப்பிட்டு பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.
i) உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களில் உங்களைவிட மூத்தவர்கள் யாவர்?
விடை: தாத்தா, பாட்டி,
அப்பா, அம்மா, மூத்த சகோதரர்
ii) உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களில் உங்கள் தாத்தா, பாட்டியை விட இளையவர்கள் யாவர்?
விடை: அப்பா, அம்மா, மூத்த சகோதரர்
iii) உங்கள் குடும்பத்தில் உங்கள் அப்பாவை விட மூத்தவர்கள் எத்தனை பேர்?
விடை: இரண்டு
iv) உங்கள் குடும்பத்தில் உங்களை விட இளையவர்கள் யாவர்?
விடை: யாரும் இல்லை
v) உங்கள் தந்தையின் தந்தையை நீங்கள் எவ்வாறு அழைப்பீர்கள்?
விடை: தாத்தா