தகவல் செயலாக்கம் | பருவம்-3 அலகு 6 | 2வது கணக்கு - தரவுகளைக் குறித்தல் மற்றும் விவரங்களைச் சேகரித்தல் | 2nd Maths : Term 3 Unit 6 : Information Processing
அலகு 6
தகவல் செயலாக்கம்
தரவுகளைக்
குறித்தல் மற்றும் விவரங்களைச் சேகரித்தல்
கலைச்சொற்கள் : குறிப்பிடுதல்,
தரவு, பதிவு
குளத்தில்
காணப்படும் உயிருள்ள படைப்புகளை உற்றுநோக்கி அவற்றை வகைப்படுத்தி எண்ணிக்கையைக்
குறிக்கவும்.
1. அதிக எண்ணிக்கையில் காணப்படும் பறவையை (✔) குறியிடுக.
(கொக்கு வாத்து✔)
2. அதிக எண்ணிக்கையில் காணப்படும் உயிரினத்தை (✔) குறியிடுக. (ஆமை✔ / புறா)
3. குறைந்த எண்ணிக்கையில் காணப்படும் பறவையை (✔) குறியிடுக.
(புறா வாத்து✔)
4. வாத்து குளத்தில் அதிக அளவில் காணப்படுகிறது.
5. கொடுக்கப்பட்ட உயிரினங்களில் குளத்தில் குறைவாகக் காணப்படுவது ஆமை
ஆகும்.
நேர்கோட்டுக் குறி
நேர்கோட்டு
குறிகள் பொருள்களை ஐந்தின் குழுக்களாக எண்ணுவதற்கு பயன்படுகின்றன. ஒவ்வொரு 5 கொண்ட குழுவில் 4 நேர்மட்ட கோடுகளின் குறுக்கே ஒரு
சாய் கோடு வரையப்பட்டிருக்கும். 1 முதல் 10 வரையான எண்கள் நேர்கோட்டுக் குறிகளால் பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றன.
அறிவு
என்ற விவசாயி, தன் பண்ணை வேலிக்குள் இருக்கும் விலங்குகளின்
எண்ணிக்கையை நேர்கோட்டுக் குறிகள் கொண்டு பதிவிடுகிறார்.
மாணவர்களை முதலில் நேர்கோட்டுக் குறி இட்டுப் பின் அவற்றை எண்ணச்
செய்யலாம்.
என்னுடைய உயரம் என்ன?
மாணவர்களை
10 பேர் கொண்ட குழுக்களாகப் பிரிக்கவும். உன் நண்பர்கள் குழுவுடன் கலந்து
ஆலோசித்துக் கீழே உள்ள அட்டவணையில் நேர்கோட்டுக் குறிகளைக் கொண்டு பதிவு செய்ய
வேண்டும்.
மேலே
உள்ள அட்டவணையை உற்றுநோக்கி நிறைவு செய்க.
வகுப்பிலுள்ள மாணவர்களை 15
பேர் கொண்ட குழுக்களாகப் பிரிக்கவும். உங்களுடைய வகுப்பில் உள்ள மாணவர்களின் இரத்த
வகையை அறிந்து நேர்கோட்டுக் குறிகள் கொண்டு கீழே உள்ள அட்டவணையை நிரப்புக.
அட்டவணையிலிருந்து பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்க.
1. குழுக்களில் அதிகமாக காணப்படும் இரத்த வகை எது?
2. குழுக்களில் மிக குறைவாக காணப்படும் இரத்த வகை
எது?
3. 'O' வகை இரத்தம் கொண்டவர்
அனைத்து வகையினருக்கும் இரத்தம் வழங்கலாம் எனில், 'O'
வகை இரத்த அதிகபட்சம் பகிர்வதற்காக வாய்ப்பு யாது?
ஆசிரியர் மாணவர்களிடம் ஓர் இரத்த வகையை எல்லா இரத்த வகைக்கும் பகிர
முடியாது எனவும் குறிப்பிட்ட இரத்த வகைக்கு மட்டுமே பகிரமுடியும் எனவும் கூறவும்.
மேலும் + வகை இரத்தமும் - வகை இரத்தமும் வெவ்வேறானது என அறிவுறுத்தவும். இரத்தம்
தானம் வழங்க அதே வகை இரத்தம்தான் ஏற்றது எனவும் 'O' வகை எந்த இரத்த வகைக்கும் வழங்கலாம் என்றும் AB+
வகை எந்த இரத்த வகையிலிருந்தும் பெறலாம் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.