புத்தக வினாக்கள் | சரியான விடையைத் தேர்ந்தெடு | சிறிய வினாக்கள் - இனப்பெருக்க நலன் : வினா விடை | 12th Zoology : Chapter 3 : Reproductive Health
இனப்பெருக்க நலன்
பகுதி - I புத்தக வினாக்கள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடு:
1. கீழ்வருவனவற்றுள் HIV, ஹிபாடிடிஸ் B, வெட்டைநோய் மற்றும் டிரைகோமோனியாஸிஸ் பற்றிய சரியான கூற்று எது?
அ) வெட்டைநோய் மட்டும் பால்வினை நோய், பிற அனைத்தும் பால்வினை நோய்கள் அல்ல.
ஆ) டிரைகோமோனியாஸிஸ் ஒரு வைரஸ் நோய், பிற அனைத்தும் பாக்டீரிய நோய்கள்.
இ) HIV என்பது நோய்க்கிருமி, பிற அனைத்தும் நோய்கள்.
ஈ) ஹிபாடிடிஸ் மட்டும் முழுமையாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனால், பிற அப்படியல்ல.
விடை : இ) HIV என்பது நோய்க்கிருமி, பிற அனைத்தும் நோய்கள்
2. கீழ் உள்ள குழுக்களுள், பாக்டீரிய பால்வினை நோய்க்குழுவைக் குறிப்பிடுக.
அ) கிரந்தி, வெட்டைநோய் மற்றும் கேன்டிடியாஸிஸ்
ஆ) கிரந்தி, கிளாமிடியாஸிஸ், வெட்டைநோய்
இ) கிரந்தி, கொனோரியா, டிரைகோமோனியாஸிஸ்
ஈ) கிரந்தி, டிரைகோமோனியாஸிஸ், பெடிகுலோஸிஸ்
விடை : ஆ) கிரந்தி, கிளாமிடியாஸிஸ், வெட்டைநோய்
3. கீழ் வருவனவற்றுள் சரியான கூற்று எது?
அ) கிளாமிடியாஸிஸ் ஒரு வைரஸ் நோய்
ஆ) டிரிபோனிமா பாலிடம் எனும் ஸ்பைரோகீட் பாக்டீரியத்தால் வெட்டைநோய் தோன்றுகின்றது.
இ) கிரந்தி நோயின் நோய் வெளிப்படு காலம் ஆண்களில் 2 முதல் 14 நாட்கள், பெண்களில் 7 - முதல் 21 நாட்கள்
ஈ) எதிர் உயிரி பொருட்களைக் கொண்டு கிரந்தி மற்றும் வெட்டைநோயை எளிதில் குணப்படுத்த இயலும்.
விடை :ஈ) எதிர் உயிரி பொருட்களைக் கொண்டு கிரந்தி மற்றும் வெட்டைநோயை எளிதில் குணப்படுத்த இயலும்.
4. ஒரு கருத்தடை மாத்திரை அண்ட செல் வெளியீட்டை எவ்வாறு தடுக்கிறது?
அ) அண்ட நாளத்தில் அடைப்பு ஏற்படுத்துதல் மூலம்
ஆ) FSH மற்றும் LH ஹார்மோன்கள் சுரத்தலை தடுப்பதன் மூலம்
இ) FSH மற்றும் LH ஹார்மோன்கள் சுரத்தலை தூண்டுவதன் மூலம்
ஈ) அண்ட செல் விடுபட்டவுடன் அதனை உடனடியாக அழித்துவிடுவதன் மூலம்
விடை : ஆ) FSH மற்றும் LH ஹார்மோன்கள் சுரத்தலை தடுப்பதன் மூலம்
5. கீழ்வரும் அணுகுமுறைகளில் எது கருத்தடை சாதனங்களின் செயல்பாடுகளைப் பற்றி வரையறுத்துக் கூறவில்லை
அ. ஹார்மோன் வழி கருத்தடைகள் - விந்து செல்கள் உள் நுழைவதை தடைசெய்யும், அண்டசெல் வெளியேற்றம் மற்றும் கருவுறுதலைத் தடைசெய்யும்.
ஆ. விந்து குழல் தடை - விந்து செல்லாக்கத்தை தடைசெய்யும்.
இ. தடுப்பு முறைகள் - கருவுறுதலைத் தடைசெய்யும்.
ஈ. உள்கருப்பை சாதனங்கள் - விந்து செல்கள் விழுங்கப்படுதலை அதிகரிக்கும், விந்து செல்களின் நகர்ச்சியை ஒடுக்கி கருவுறச் செய்யும் திறனைக் குறைக்கும்.
விடை : ஆ. விந்து குழல் தடை - விந்து செல்லாக்கத்தை தடை செய்யும்.
6. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளைப் படித்து சரியானதை தேர்வு செய்க.
கூற்று அ : இரப்பரால் செய்யப்பட்ட திரைச்சவ்வுகள் கருப்பைவாய் மூடிகள் மற்றும் மறைப்புத் திரைகள் போன்றவை பெண் இனப்பெருக்கம் பாதையில் கருப்பைவாயினை கலவிக்கு முன் மூடப் பயன்படுகின்றன.
கூற்று ஆ : மேற்கூறிய அனைத்தும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய வேதிப்பொருள் தடுப்புகள் ஆகும்.
அ) கூற்றுகள் அ மற்றும் ஆ சரியே, மேலும், கூற்று ஆ கூற்று அ விற்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்றுகள் அ மற்றும் ஆ சரியே, ஆனால் கூற்று ஆ கூற்று அ - விற்கான சரியான விளக்கமில்லை.
இ) கூற்று அ சரி ஆனால் கூற்று ஆ தவறு.
ஈ) கூற்றுகள் அ மற்றும் ஆ இரண்டுமே தவறானவை.
விடை :இ) கூற்று அ சரி ஆனால் கூற்று ஆ தவறு.
7. வரிசை I மற்றும் வரிசை II ஐ பொருத்தி சரியான விடைத் தொகுப்பை தெரிவு செய்யவும்
வரிசை I வரிசை II
A. தாமிரம் வெளிவிடு IUD - i. LNG - 20
B. ஹார்மோன் வெளிவிடு IUD - ii. லிப்பள் வளைய IUD
C. மருந்தில்லா IUD - iii. சாஹெலி
D. மாத்திரைகள் - iv. Multiload - 375
அ) A (iv), B (ii), C(i), D (iii)
ஆ) A (iv), B (i), C(iii), D (ii)
இ) A (i), B (iv), C(ii), D (iii)
ஈ) A (iv), B (i), C(ii), D (iii)
விடை : ஈ) A (iv), B (i), C(ii), D (iii)
8. கீழ் வருவனவற்றுள் ஹார்மோன் கருத்தடை மாத்திரைகளின் செயல்கள் பற்றிய தவறான கூற்று எது?
அ) விந்து செல்லாக்கத்தை தடைசெய்தல்
ஆ) அண்ட வெளிப்பாட்டை தடைசெய்தல்
இ) கருப்பைவாய் கோழையின் தன்மை மாற்றத்தால் விந்துசெல் நுழையும் பாதை மற்றும் விந்துசெல் நகர்வதை பலவீனப்படுத்துகின்றது
ஈ) கருப்பை உட்கோழைப் படலத்தில் ஏற்படும் மாற்றம் கருப்பதிவிற்கு எதிரான சூழலை ஏற்படுத்துகின்றது.
விடை : அ) விந்து செல்லாக்கத்தை தடைசெய்தல்
9. பனிக்குடத் துளைப்பு என்பது யாது? இத்தொழில் நுட்பத்திற்கு சட்டப்படியான தடை விதிப்பது ஏன்?
பனிக்குடத்துளைப்பு (Amniocentesis) :
* கர்ப்ப காலத் தொடக்கத்திலேயே கண்டறியும் தொழில்நுட்பம்.
* வளர்கருவைச் சூழ்ந்துள்ள, பனிக்குடத் திரவ மாதிரியைக் கொண்டு குரோமோசோம் பிறழ்ச்சிகளைக் கண்டறியலாம்.
* 15 முதல் 20 வாரக்கருவளர்ச்சி கொண்ட பெண்களில் செய்யப்படுகிறது.
* பனிக்குடத்திரவத்தில் உள்ள கருவின் உதிர்ந்த செல்கள் மெல்லிய ஊசி மூலம் சேகரிக்கப்படும்.
ஏன் சட்டப்படி தடை விதிக்கப்பட்டுள்ளது :
* வளர்கருவின் பால்தன்மை கண்டறியப்படும்.
* பின்பு பெண்கரு சிசுக்கொலை செய்யப்பட வாய்ப்புள்ளது.
10. அடைப்புக்குள் இருந்து சரியான பதங்களை தேர்வு செய்து கிளைத்த மரத்திலுள்ள வெற்றிடங்களை நிரப்புக.
(தடுப்புகள், பாலூட்டும் கால மாதவிடாயின்மை, CuT கருக்குழல் தடை)
A. தடுப்பு முறை
B. பாலூட்டும் கால மாதவிடாயின்மை
C. கருக்குழல் தடை
D. CuT
11. கீழ்வரும் கூற்றுகளின் பிழைகளைத் திருத்துக.
அ) கொடையாளியிடமிருந்து பெறப்பட்ட அண்டத்தை கருப்பை நாளத்திற்கு இடமாற்றம் செய்யும் முறை ZIFT ஆகும்.
ஆ) 8 கருக்கோளச் செல்களுக்கு மேல் உள்ள கருவை கருப்பைக்குள் பொருத்தும் முறை GIFT எனப்படும்.
இ) மல்டிலோட் 375 என்பது ஒரு ஹார்மோன் வெளிவிடு IUD ஆகும்.
விடை:
அ) கொடையாளிடமிருந்து பெறப்பட்ட அண்டத்தை கருப்பை நாளத்திற்கு இடமாற்றும் முறை - GIFT.
ஆ) 8 கருக்கோளச் செல்களுக்கு மேல் உள்ள கருவை கருப்பைக்குள் பொருத்தும் முறை ZIFT
இ) மல்டிலோட் 375 என்பது தாமிரம் வெளிவிடும் உள்கருப்பைச் சாதனம்.
12. குழந்தை வேண்டும் தம்பதியிரில் ஆண் விந்து நீர்மத்தை உற்பத்தி செய்ய இயலாமல் போனாலோ அல்லது மிகக் குறைந்த விந்துசெல் கொண்ட விந்து நீர்மத்தை உற்பத்தி செய்தாலோ அத்தம்பதியர் குழந்தை பெற எம்முறையை பரிந்துரை செய்வீர்?
* கருப்பையினுள் விந்து செல்களை உட்செலுத்தும் முறை (IUI) பயன்படுத்தப்படும்.
* கணவர், உடல்நலம் மிக்க விந்து கொடையாளரிடம் இருந்து விந்துத்திரவம் சேகரிக்கப்படுகிறது.
* அண்டகத்தைத் தூண்டி, அதிக அண்ட செல்கள் உற்பத்தி செய்யப்படும்.
* சேகரிக்கப்பட்ட விந்து செல்கள், நுண்குழல் மூலம் கலவிக்கால்வாய் வழியாகக் கருப்பையினுள் செலுத்தப்படும்.
* விந்து செல்கள் அண்டநாளம் நோக்கி நீந்திச் சென்று, இயல்பான கர்ப்பம் ஏற்படும்.
13. அ) ZIFT ஆ) ICSI விரிவாக்கம் தருக.
அ) ZIFT - (Zygote Intra Fallopian Transfer) கருமுட்டையை அண்ட நாளத்தினுள் இனச்செல் இடமாற்றம்.
ஆ) ICSI - (Intra cytoplasmic sperm injection) அண்ட சைட்டோபிளாத்தினுள் விந்து செல்களைச் செலுத்துதல்.
14. நமது இந்திய நாட்டில் முழுமையான இனப்பெருக்க ஆரோக்கியத்தை அடைய மேற்கொள்ள வேண்டிய உத்திகள் யாவை?
* குடும்ப நலத்திட்டம் (1951)
* இனப்பெருக்க, குழந்தை நலம் பாதுகாப்பு (RCH) இதன் பெரும்பணிகள்
i) உடல்நலம் மிக்க சமுதாயம் அமைக்க விழிப்புணர்வு
ii) விடலைப் பருவ பாலியல் கல்வி
iii) தம்பதியருக்கான, குடும்ப கட்டுப்பாட்டு விதிகள், பிறப்புக் கட்டுப்பாட்டு முறை
iv) கர்ப்பமடைந்த பெண்கள் பாதுகாப்பு, தாய்சேய் பாதுகாப்பு
v) அரசு, அரசு சாரா அமைப்புகளால் குடும்பக் கட்டுப்பாட்டுக்கு ஊக்கமளித்தல்.
* 1994 - பாலினத்தை முன்கூட்டியே அறியும் தொழில் நுட்பத்தைத் தடைசெய்யும் சட்டம் (PCPNDT)
* POSCO சட்டம், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைத் தடுத்தல்.
* பணிபுரியும் இடத்தில், பாலியல் தாக்குதல் விதி
* நீதியரசர் வெர்மா குழு (2013) ஆண், பெண் இரு பாலருக்கும் பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்கும்.
15. கருக்கொலை மற்றும் சிசுக்கொலை வேறுபடுத்துக.
கருக்கொலை
தாயின் கருப்பையிலேயே பெண் சிசுவைக் கருக்கலைப்பு செய்வது.
சிசுக்கொலை
பிறந்தபின் பச்சிளம் பெண் குழந்தைகளைக் கொல்வது.
16. முக்கிய பால்வினை நோய்களையும் அவற்றின் அறிகுறிகளையும் விளக்குக.
17. பால்வினை நோய்கள் எவ்வாறு பரவுகின்றன?
* நோய்த்தொற்று உள்ளவருடன் பாதுகாப்பற்ற உடலுறவு
* உட்செலுத்து ஊசிகள், அறுவைச் சிகிச்சைக் கருவிகளை பகிர்தல்
* இரத்தம் செலுத்துதல்
* தொற்றுக் கொண்ட தாயிடமிருந்து சேய்க்குப் பரவல்
18. பால்வினைத் தொற்று நோய்களைத் தடுக்கும் முறைகளை எழுதுக.
* முன்பின் தெரியாதவர், பலருடன் பாலுறவைத் தவிர்த்தல்.
* கருத்தடை உறைகளைப் பயன்படுத்தல்.
* மருத்துவ ஆலோசனை, முழுமையான சிகிச்சை.
19. GIFT முறையில் பெண் இனச்செல்கள் அண்டநாளத்தினுள் இடமாற்றம் செய்யப்படுகின்றது. இனச்செல்களை கருப்பைக்குள் இடமாற்றம் செய்தால் இதே முடிவு தோன்ற வாய்ப்புள்ளதா? விளக்குக.
கருப்பையினுள் விந்து செல்களை உட்செலுத்துதல்:
* குறைந்த எண்ணிக்கையில் விந்து செல்களை உற்பத்தி செய்யும் ஆண்களுக்கு உகந்தது.
* கணவர், உடல் நலம்மிக்க கொடையாளரிடம் இருந்து விந்து சேகரித்தல்.
* சேகரிக்கப்பட்ட விந்து செல்கள், கலவிக் கால்வாய் வழி கருப்பையினுள் செலுத்தல்
* விந்து செல்கள் அண்டநாளம் நோக்கி நீந்திச் சென்று, இயல்பான கர்ப்பம் ஏற்படும்.
20. பனிக்குடத் துளைப்பு எனும் வளர்கரு பால் கண்டறியும் ஆய்வு நம் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது. இது தேவைதானா? கருத்தைத் தெரிவிக்கவும்.
* இது கருவின் குறைபாடுகளை, கர்ப்பகாலத் தொடக்கத்திலேயே கண்டறியும் தொழில்நுட்பம்.
* கருவின் குரோமோசோம் பிறழ்ச்சிகளைக் கண்டறியலாம்.
* வளர்கருவின் பால் தன்மை அறியலாம்.
* பால் தெரிந்தால் பெண்கருக்கொலை செய்ய வாய்ப்புள்ளது.
* எனவே இது சட்டபூர்வமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
21. “ஆரோக்கியமான இனப்பெருக்கம் சட்டப்படி கட்டுப்படுத்தப்பட்டுள்ள பிறப்புக் கட்டுப்பாட்டு வழிமுறைகள் மற்றும் முறையான குடும்ப நலத்திட்டம் போன்றன மனித வாழ்விற்கு முக்கியமானவை” - கூற்றை நியாயப்படுத்து.
ஆரோக்கியமான மக்கள், உடல்நலம் மிக்க குழந்தைகளைப் பெற்று, சமுதாயத்திற்கு பங்களிக்கின்றனர்.
i) பாலியல் கல்வி
விடலைப் பருவம் சார்ந்த மாற்றங்கள் பற்றிய தகவல்களை பாலியல் கல்வி மூலம் பள்ளிகளில் கொண்டு வருதல்.
ii) கருத்தடை முறைகள் குறித்த விழிப்புணர்வு:
மக்கட்தொகையைக் கட்டுப்படுத்த கருத்தடைமுறைகள் பயன்படும். எனவே எளிதில் கிடைக்கும், பயனர் நட்பு கருவிகள், பக்கவிளைவு இன்றி, பாலுணர்வைத் தடை செய்யாமல் பயன்படுத்தலாம். இதில் தற்காலிக, நிரந்தர முறைகள் உள்ளன.
(எ.கா.) 1) இயற்கைக் கருத்தடை முறை - பாலூட்டும் கால் மாதவிடாயின்மை
2) தடுப்பு முறைகள் - வேதிப்பொருள், இயக்கத் தடுப்பு முறை
3) ஹார்மோன் வழித்தடுப்பு
4) உள்கருப்பைச் சாதனங்கள் (Ex, CuT)