புள்ளியியல் நுட்பங்கள் - புவியியல் - புவியியலில் புள்ளியியலின் பங்கு | 12th Geography : Chapter 13 : Statistical Techniques
புவியியலில் புள்ளியியலின் பங்கு
புள்ளியியல் நுட்பங்கள் மற்றும் செய்முறைகள் கல்வி சார் ஆய்வுத் துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன. எங்கெல்லாம் தரவுகள் சேகரிக்கப்பட்டு தொகுக்கப்படுகிறதோ அல்லது எங்கெல்லாம் ஏதேனும் எண் சார் தகவல்கள் பகுப்பாய்வு செய்யப்படுகிறதோ அல்லது ஆய்வு நடத்தப்படுகிறதோ அங்கு முடிவுகளின் தரமான பகுப்பாய்வு மற்றும் விவரணத்தைப் பெறுவதற்கு புள்ளியியல் தேவைப்படுகிறது.
• இடம் சார் தரவுகளை விளக்குவது மற்றும் தொகுப்பது.
• சிக்கலான இடம் சார் வடிவங்கள் தொடர்பான பொதுமைப்படுத்துதலை ஏற்படுத்துதல்
• கொடுக்கப்பட்ட அமைவிடத்தில் ஏற்படும் நிகழ்வுகளுக்கான முடிவுகளின் சாத்தியக் கூறுகளை மதிப்பிடல்.
• புவிசார் தரவுகளின் பெரியத் தொகுப்புகளின் (மக்கள் தொகை) தன்மைகளைப் பெற புவிசார் தரவுகளின் மாதிரிகளைப் பயன்படுத்துதல்.
• அமைவிடத்திற்குகேற்ப சில நிகழ்வுகளின் பரிமாணம் அல்லது அலைவெண் மாறுபடுகிறதா என தீர்மானித்தல்.
• சில எதிர்பார்க்கப்படும் வடிவங்களோடு உண்மையான இடம்சார் வடிவங்கள் பொருந்துகிறதா என அறிதல்.
உதாரணமாக ஒரு குறிப்பிட்ட பகுதியில் வருடாந்திர மழைப்பொழிவு
பற்றி படிக்கும் ஒரு மாணவர் முதலில் அப்பகுதியின் மழைப்பொழிவு பற்றிய தகவல்களை சேகரிப்பார்.
பின் அவர் சேகரித்த தரவை தொகுத்து முடிவை அட்டவணை அல்லது வரைபடத்தில் காட்டலாம்.