புள்ளியியல் நுட்பங்கள் - புவியியல் - தரவுகளின் வகைகள் | 12th Geography : Chapter 13 : Statistical Techniques
தரவுகளின் வகைகள்
தரவு முதன்மையாக இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை பண்பு சார்ந்த தரவு மற்றும் எண் சார்ந்த தரவு. பண்பு சார்ந்த தரவானது, ஒரு பொருளின் தன்மையை மட்டும் விவரிக்கின்றது. (எடுத்துக்காட்டு) தென்னை மரம், பனை மரம் மற்றும் பல அல்லது பேசப்படும் மொழிகளான தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் பல. எண் சார்ந்த தரவானது பொருட்களுக்கு எண் மதிப்பைக் கொடுக்கின்றது. எடுத்துகாட்டாக, 45, 70, 60, 90, 25 மற்றும் பல.
தரவுகளை சேகரித்தலின் அடிப்படையில் முதல் நிலைத்தரவு மற்றும் இரண்டாம் நிலைத்தரவு என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். முதல் நிலை தரவுகளை ஆய்வு செய்பவர் வீடு வீடாக சென்று தனது ஆய்விற்காக தகவல்களை சேகரிப்பார். மாறாக, இரண்டாம் நிலை தரவுகள் என்பது ஏற்கனவே சேகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்ட தரவுகளை வெளியிடப்பட்ட அல்லது வெளியிடப்படாத ஆதாரங்களிலிருந்து ஆய்வாளர் சேகரிப்பார்.