விலங்கியலின் எதிர்கால வாய்ப்புகள் (Scope of Zoology)
விலங்கியல் படிப்பதால் சுய வேலைவாய்ப்புகள் கிடைத்து, நீ தொழில் முனைவோராக உருவாகலாம். வணிக விலங்கியல் என்பது, விலங்குகளை, மனித நலனுக்காகப் பயன்படுத்தும் அறிவியல் ஆகும். பொருளாதார நிலையை மேம்படுத்துவது மட்டுமின்றி உணவுப் பாதுகாப்புக்கும் வேலைவாய்ப்பு அளிப்பதற்கும் விலங்கியல் தேவைப்படுகிறது. பொருளாதார முக்கியத்துவத்தைப் பொறுத்து விலங்குகளை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.
1. உணவாகப் பயன்படும் விலங்குகளும் விலங்குப் பொருட்களும்
2. பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த விலங்குகள்
3. அழகிற்காகவும் மனமகிழ்ச்சிக்காகவும் வளர்க்கப்படும் விலங்குகள்
4. அறிவியல் ஆராய்ச்சிகளுக்காகப் பயன்படும் விலங்குகள்