Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணினி அறிவியல் | வரையெல்லை: பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும்

கணினி அறிவியல் - வரையெல்லை: பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் | 12th Computer Science : Chapter 3 : Scoping

   Posted On :  21.08.2022 02:03 am

12 வது கணினி அறிவியல் : அலகு 3 : வரையெல்லை

வரையெல்லை: பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும்

சிறந்த பதிலைத் தேர்ந்தெடுங்கள்,சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக

கணினி அறிவியல் : வரையெல்லை

மதிப்பீடு

 

பகுதி - அ

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும் (1 மதிப்பெண்)

1. பின்வருவனவற்றுள் எது நிரலின் ஒரு பகுதியின் அணுகியல்பை மற்றொரு பகுதிக்கு குறிப்பதாகும்?

அ. வரையெல்லை

ஆ. நினைவகம்

இ. முகவரி

ஈ. அணுகுமுறை

விடை. அ. வரையெல்லை

 

2. மாறியின் பெயரை ஒரு பொருளுடன் பிணைக்கும் செயல்முறையை என்னவென்று அழைக்கப்படும்?

அ. வரையெல்லை

ஆ. மேப்பிங்

இ. பின் பிணைத்தல்

ஈ. முன் பிணைத்தல்

விடை. ஆ. மேப்பிங்

 

3. பின்வருவனவற்றுள் எது நிரலாக்க மொழியில் மாறியையும் பொருளையும் மேப் செய்யப் பயன்படுகிறது?

அ. ::

ஆ. :=

இ. =

ஈ. ==

விடை . இ. =

 

4. எது மாறியின் பெயரை பொருளுடன் மேப்பிங் செய்வதற்கான இடம் ஆகும்.

அ. வரையெல்லை

ஆ. மேப்பிங்

இ. பிணைத்தல்

ஈ. Namespaces

விடை. ஈ. Namespaces

 

5. எந்த வரையெல்லை நடப்பு செயற்கூறில் வரையறுக்கப்படும் மாறிகளைக் குறிக்கும்?

அ. உள்ளமை வரையெல்லை

ஆ. முழுதளாவிய வரையெல்லை

இ. தொகுதி வரையெல்லை

ஈ. செயற்கூறு வரையெல்லை

விடை. அ. உள்ளமை வரையெல்லை

 

6. ஒரு கணிப்பொறி நிரலை பல துணை நிரல்களாக பிரிக்கும் செயல்முறையே என்னவென்று அழைக்கப்படும்.  

அ. செயல்முறை நிரலாக்கம்

ஆ. தொகுதி நிரலாக்கம்

இ. நிகழ்வு இயக்க நிரலாக்கம்

ஈ. பொருள் நோக்கு நிரலாக்கம்

விடை. ஆ. தொகுதி நிரலாக்கம்

 

7. எது கணினி சூழலில் உள்ள வளங்களை யார் பார்வையிட மற்றும் பயன்படுத்த முடியும் என்பதை வரைமுறைப்படுத்தும் ஒரு பாதுகாப்பு தொழில்நுட்பமாகும்.

அ. கடவுச் சொல்

ஆ. அங்கீகாரம்

இ. அணுகல் கட்டுப்பாடு

ஈ. சான்றிதழ்

விடை. இ. அணுகல் கட்டுப்பாடு

 

8. எந்த இனக்குழுவின் உறுப்புகளை இனக்குழுவின் உள்ளே மட்டும்தான் கையாள முடியும்.

அ. public உறுப்புகள்

ஆ. protected உறுப்புகள்

இ. pecured உறுப்புகள்

ஈ. private உறுப்புகள்

விடை. அ. public உறுப்புகள்

 

9. எந்த உறுப்புகளை இனக்குழுவிற்கு வெளியே இருந்தும் அணுக முடியும்?

அ. public உறுப்புகள்

ஆ. protected உறுப்புகள்

இ. pecured உறுப்புகள்

ஈ. private உறுப்புகள்

விடை. அ. public உறுப்புகள்

 

10. எது வரையறுக்கப்பட்ட இனக்குழு மற்றும் அதன் துணை இனக்குழுக்களால் அணுகப்படும் உறுப்புகள் ஆகும்.

அ. public உறுப்புகள்

ஆ. protected உறுப்புகள்

இ. pecured உறுப்புகள்

ஈ. private உறுப்புகள்

விடை . ஆ. protected உறுப்புகள்

 

பகுதி - ஆ

அனைத்து வினாக்களுக்கும் விடையளி (2 மதிப்பெண்கள்)

 

1. வரையெல்லை என்றால் என்ன?

விடை. வரையெல்லை என்பது மாறிகள், அளபுருக்கள் மற்றும் செயற்கூறுகளின் அணுகியல்பை நிரலின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு குறிப்பதாகும்.

 

2. மாறிகளுக்கு எதற்காக – வரையெல்லை பயன்படுத்தப்பட வேண்டும்? காரணம் கூறுக?

விடை. வரையெல்லையை பயன்படுத்தி மட்டுமே ஒரு நிரலில் வெவ்வேறு இடத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாறிகளை அணுகமுடியும்

 

3. மேப்பிங் என்றால் என்ன?

விடை. மாறியின் பெயரை ஒரு பொருளுடன் பிணைக்கும் செயல்முறையே மேப்பிங் (Mapping) எனப்படும். = செயல்குறி நிரலாக்க மொழியில் மாறி மற்றும் பொருளை மேப் செய்கிறது.

          

4. Namespaces சிறுகுறிப்பு வரைக.

விடை. namespaces என்பது மாறியின் பெயரை பொருளுடன் மேப்பிங் செய்வதற்கான இடம்.

 

5. private மற்றும் protected அணுகியல்புகளை பைத்தான் எவ்வாறு குறிப்பிடுகிறது.

விடை. பைத்தான் ஒரு மாறி அல்லது வழிமுறையின் பெயருக்கு முன்னே ஒற்றை மற்றும் இரட்டை அடிக்கோடிடும் வழக்கத்தைப் பரிந்துரைக்கிறது. இதனால் private மற்றும் protected அணுகியல்பு வரையறுப்பிகள் சில பண்புகளைப் பின்பற்றுகின்றன.

 

பகுதி - இ

அனைத்து வினாக்களுக்கும் விடையளி (3 மதிப்பெண்கள்)

 

1. உள்ளமை வரையெல்லையை எடுத்துக்காட்டுடன் விவரி.

விடை. உள்ளமை வரையெல்லை (Local Scope)உள்ளமை வரையெல்லை, நடப்பு செயற்கூறில் வரையறுக்கப்பட்ட மாறிகளைக் குறிக்கும். செயற்கூறு, எப்பொழுதும் மாறியின் பெயரை முதலில் அதன் உள்ளமை வரையெல்லையில் பார்வையிடும் அந்த வரையெல்லையில் இல்லையென்றால் மட்டுமே வெளி வரையெல்லையில் சோதிக்கும், இந்த எடுத்துக்காட்டை காண்போம்.


மேலே உள்ள குறிமுறையை இயக்கும்போது, மாறி a என்பது 7 என்ற மதிப்பை வெளியிடுகிறது. ஏனெனில், இது உள்ளமை வரையெல்லையில் வரையறுக்கப்பட்டு, அங்கேயே அச்சிடப்படுகிறது.

 

2. முழுதளாவிய வரையெல்லையை எடுத்துக்காட்டுடன் விவரி.

விடை. முழுதளாவிய வரையெல்லை நிரலின் அனைத்து செயற்கூறுகளுக்கும் வெளியே அறிவிக்கப்பட்ட மாறிகள் முழுதளாவிய மாறிகள் எனப்படும். அதாவது, முழுதளாவிய மாறிகளை நிரலின் அனைத்து செயற்கூறுகளுக்கு உட்புறமும், வெளிப்புறமும் அணுக முடியும். பின்வரும் எடுத்துக்காட்டைக் காண்போம்.


மேலே உள்ள குறிமுறையில் disp ( ) என்ற செயற்கூறு அழைக்கப்படும்போது, அதனுள் வரையறுக்கப்பட்டிருக்கும் மாறி a,7 என்ற மதிப்பை வெளியிடும், பின்னர் இது 10 என்ற மதிப்பை வெளியிடும் ஏனெனில் a என்ற மாறி முழுதளாவிய வரையெல்லையில் வரையறுக்கப்பட்டுள்ளது.

 

3. அடைக்கப்பட்ட வரையெல்லையை எடுத்துக்காட்டுடன் விவரி.

விடை. அடைக்கப்பட்ட வரையெல்லை அனைத்து நிரலாக்க மொழிகளும் பின்னலான செயற்கூறுகளைக் கொடுக்க அனுமதிக்கின்றன. ஒரு செயற்கூறின் வழிமுறை உள்ளே மற்றொரு செயற்கூறு அடைக்கப்பட்டிருந்தால் அது பின்னலான செயற்கூறு எனப்படும். மற்றொரு செயற்கூறு வரையறையை, தன்னுள் கொண்ட ஒரு வெளி செயற்கூறினுள் ஒரு மாறி அறிவிக்கப்பட்டால், உள்செயற்கூறானது, வெளி செயற்கூறினுள் உள்ள மாறிகளை அணுக முடியும். இதுவே, அடைக்கப்பட்ட வரையெல்லை எனப்படும்.

நிரல்பெயர்ப்பி அல்லது தொகுப்பான் ஒரு நிரலில் மாறியை தேடும்பொழுது அது முதலில் உள்ளமை வரையெல்லையில் தேடும். பின்னர் அடைக்கப்பட்ட வரையெல்லையில் தேடும். பின்வரும் எடுத்துக்காட்டை காண்போம்.


 

4. அணுகல் கட்டுப்பாடு எதற்குத் தேவைப்படுகிறது?

விடை. அணுகல் கட்டுப்பாடு என்பது கணினி சூழலில் உள்ள வளங்களை யாரெல்லாம் பார்வையிட மற்றும் பயன்படுத்த முடியும் என்பதை வரைமுறைப்படுத்தும் ஒரு பாதுகாப்பு தொழில் நுட்பமாகும். இது பாதுகாப்பின் ஒரு அடிப்படைக் கருத்தாகும். பொருளுக்கான ஆபத்தை குறைக்கிறது.

 

5. பின்வரும் போலிக் (Pseudo) குறிமுறையில் மாறிகளின் வரையெல்லையைக் கண்டறிந்து வெளியீட்டை எழுதுக.

output

color:= Red

mycolor():

b:=Blue

myfavcolor():

g:=Green

printcolor. b, g

myfavcolor()

printcolor, b

mycolor ()

print color

விடை. Color:= Red - முழுதளாவிய வரையெல்லை

b:= Blue - உள்ளமை வரையெல்லை

g:= Green - இணைக்கப்பட்ட வரையெல்லை

 

பகுதி – ஈ

அனைத்து வினாக்களுக்கும் விடையளி (5 மதிப்பெண்கள்)

1. மாறியின் வரையெல்லைகளின் வகைகளை விளக்குக (அல்லது) LEGB விதியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

விடை. LEGB விதிமுறை 

வரையெல்லை என்பது சரியான மதிப்பை பெறுவதற்காக மாறிகள் எந்த வரிசையில் பொருளுடன் Map செய்யப்பட வேண்டும் என்பதை வரையறுக்கிறது. கீழே கொடுக்கப்பட்ட எளிய எடுத்துக்காட்டைக் காண்போம்.

1. x:='outer x variable'

2. display():

3. x:='inner x variable'

4. print x

5. display()

மேலே உள்ள கூற்றுகளை இயக்கும்போது கூற்று (4) மற்றும் (5) பின்வரும் விடையைக் காண்பிக்கிறது.

வெளியீடு

outer x variable

inner x variable

மேலே உள்ள கூற்றுகள் வெவ்வேறு வெளியீடுகளைத் தருகிறது. ஏனெனில், மாறி x என்பது வெவ்வேறு வரையெல்லைகளில் உள்ளது. ஒன்று display() என்ற செயற்கூறுவுக்கு உள்ளேயும், மற்றொன்று அதன் மேல் கூற்றிலும் உள்ளது. 'Outer x variable' என்ற மதிப்பு, x என்பது செயற்கூறுவின் வரையறைக்கு வெளியில் அணுகப்படும்போது வெளியிடப்படுகிறது. ஆனால் display ( ) செயற்கூறு இயக்கப்படும்போது, "inner x Variable" என்ற மதிப்பு அச்சிடப்படுகிறது. இது செயற்கூறு வரையறைக்குள் உள்ள x-ன் மதிப்பாகும். மேலே கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டில், ஒரு மாறி எந்த வரையெல்லையில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்க ஒரு விதிமுறை பின்பற்றப்படுவதை கணித்துக்கொள்ள முடிகிறது. LEGB விதி வரையெல்லை தேடப்பட வேண்டிய (Scope resolution) வரிசையை தீர்மானிக்கப் பயன்படுகிறது. வரையெல்லைகள் பின்வருமாறு படிநிலை முறையில் பட்டியலிடப்பட்டுள்ளன. பெரியதிலிருந்து சிறியது),


(அல்லது)

மாறியின் வரையெல்லை வகைகள் 4 வகையான வரையெல்லைகள் உள்ளன. அவற்றை ஒன்றன்பின் ஒன்றாகக் காண்போம். உள்ளமை வரையெல்லை (Local Scope) உள்ளமை வரையெல்லை, நடப்பு செயற்கூறில் வரையறுக்கப்பட்ட மாறிகளைக் குறிக்கும். செயற்கூறு, எப்பொழுதும் மாறியின் பெயரை முதலில் அதன் உள்ளமை வரையெல்லையில் பார்வையிடும் அந்த வரையெல்லையில் இல்லையென்றால் மட்டுமே வெளி வரையெல்லையில் சோதிக்கும், இந்த எடுத்துக்காட்டை காண்போம்.


மேலே உள்ள குறிமுறையை இயக்கும்போது, மாறி a என்பது 7 என்ற மதிப்பை வெளியிடுகிறது. ஏனெனில், இது உள்ளமை வரையெல்லையில் வரையறுக்கப்பட்டு, அங்கேயே அச்சிடப்படுகிறது. முழுதளாவிய வரையெல்லை நிரலின் அனைத்து செயற்கூறுகளுக்கும் வெளியே அறிவிக்கப்பட்ட மாறிகள் முழுதளாவிய மாறிகள் எனப்படும். அதாவது, முழுதளாவிய மாறிகளை நிரலின் அனைத்து செயற்கூறுகளுக்கு உட்புறமும், வெளிப்புறமும் அணுக முடியும். பின்வரும் எடுத்துக்காட்டைக் காண்போம்.


மேலே உள்ள குறிமுறையில் disp ( ) என்ற செயற்கூறு அழைக்கப்படும்போது, அதனுள் வரையறுக்கப்பட்டிருக்கும் மாறி a,7 என்ற மதிப்பை வெளியிடும், பின்னர் இது 10 என்ற மதிப்பை வெளியிடும் ஏனெனில் a என்ற மாறி முழுதளாவிய வரையெல்லையில் வரையறுக்கப்பட்டுள்ளது. அடைக்கப்பட்ட வரையெல்லை அனைத்து நிரலாக்க மொழிகளும் பின்னலான செயற்கூறுகளைக் கொடுக்க அனுமதிக்கின்றன. ஒரு செயற்கூறின் (வழிமுறை உள்ளே மற்றொரு செயற்கூறு அடைக்கப்பட்டிருந்தால் அது பின்னலான செயற்கூறு எனப்படும். மற்றொரு செயற்கூறு வரையறையை, தன்னுள் கொண்ட ஒரு வெளி செயற்கூறினுள் ஒரு மாறி அறிவிக்கப்பட்டால், உள்செயற்கூறானது, வெளி செயற்கூறினுள் உள்ள மாறிகளை அணுக முடியும். இதுவே, அடைக்கப்பட்ட வரையெல்லை எனப்படும்.

நிரல்பெயர்ப்பி அல்லது தொகுப்பான் ஒரு நிரலில் மாறியை தேடும்பொழுது அது முதலில் உள்ளமை வரையெல்லையில் தேடும். பின்னர் அடைக்கப்பட்ட வரையெல்லையில் தேடும். பின்வரும் எடுத்துக்காட்டை காண்போம்.


உள்ளிணைந்த வரையெல்லை

நிரல்பெயர்ப்பி அல்லது தொகுப்பாணை தொடங்கும் பொழுது உள்ளிணைந்த வரையெல்லையானது நிரல் வரையெல்லையில் ஏற்கனவே கொடுக்கப்பட்ட அனைத்து பெயர்களையும் கொண்டிருக்கும். நிரலாக்க மொழியின் நூலக செயற்கூறினுள் வரையறுக்கப்பட்ட மாறி அல்லது தொகுதி உள்ளிணைந்த வரையெல்லையைக் கொண்டுள்ளது. இவைகள், நூலக கோப்புகள் நிரலில் செயல்பட தொடங்கியவுடன் இறக்கப்படும்.



பொதுவாக செயற்கூறுகள் அல்லது தொகுதி மட்டுமே மெம்பொருளுடன் தொகுப்பாக வருகிறது. எனவே, இவைகள் உள்ளிணைந்த வரையெல்லையின் கீழ் வருகின்றன.

 

2. தொகுதிகளின் ஐந்து பண்பியல்புகளை எழுதுக.

விடை. தொகுதி பண்பியல்கள் பின்வருமாறு :

(i) தொகுதிகள் தரவு, தகவல் மற்றும் தருக்க செயலாக்கத்தைக் கொண்டுள்ளன.

(ii) தொகுதிகள் தனியாக தொகுக்கப்பட்டு நூலகத்தில் சேமிக்கப்படும்.

(iii) தொகுதிகள் நிரலில் சேர்க்க முடியும்.

(iv) ஒரு பெயரையும், சில அளபுருக்களையும் பயன்படுத்தி தொகுதி பிரிவுகள் செயல்படுத்தப்படுகின்றன.

(v) ஒரு தொகுதியின் பிரிவுகள் மற்ற தொகுதிகளால் பயன்படுத்தப்படுகின்றன.

 

3. தொகுதி நிரலாக்கத்தின் பயன்களை எழுதுக.

விடை. தொகு நிரலாக்கத்தின் பயன்கள் :

(i) குறைந்த வரிகளைக் கொண்ட குறிமுறையை எழுதினால் போதுமானது.

(ii) மறுபயனாக்கத்திற்கும் பலமுறை குறிமுறை தட்டச்சு  செய்வதை தவிர்ப்பதற்கு, ஒற்றை செயல்முறையை உருவாக்க வேண்டும்.

(iii) நிரல்கள் மிக எளிதாக வடிவமைக்கப்படுகின்றன. ஏனெனில், முழு குறிமுறையும் சிறிய பகுதிகளாக பிரிக்கப்பட்டு சிறிய குழுவினரால் கையாளப்படுகிறது.

(iv) தொகுதி நிலாக்கம் பல நிரலர்களை ஒரே பயன்பாட்டில் வேலை செய்ய அனுமதிக்கிறது.

(v) பல கோப்புகளில் இந்த குறிமுறை சேமிக்கப்படுகிறது.

(vi) குறிமுறை சிறியதாக, எளியதாக, புரிந்துகொள்ளும் வகையில் உள்ளது.

(vii) துணை நிரல்களாக அல்லது செயல்கூறுகளாக இருப்பதால் பிழைகளை எளிதாக கண்டுபிடிக்க இயலும்.

(viii) ஒரே குறிமுறை பல பயன்பாடுகளில் பயன்படுத்தப்படலாம்.

(ix) மாறிகளின் வரையெல்லையை எளிதில் கட்டுப்படுத்த முடியும்.

Tags : Computer Science கணினி அறிவியல்.
12th Computer Science : Chapter 3 : Scoping : Scoping: Book Back Questions and Answers Computer Science in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது கணினி அறிவியல் : அலகு 3 : வரையெல்லை : வரையெல்லை: பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் - கணினி அறிவியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது கணினி அறிவியல் : அலகு 3 : வரையெல்லை