நினைவில் கொள்க
• வரையெல்லை என்பது மாறிகள், அளபுருக்கள் மற்றும் செயற்கூறுகளின்
அணுகியல்பை நிரலின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு குறிப்பதாகும்.
• மாறியின் பெயரை ஒரு பொருளுடன் பிணைக்கும் செயல்முறையே மேப்பிங்
(Mapping) எனப்படும். = செயல்குறி நிரலாக்க மொழியில் மாறி மற்றும் பொருளை மேப் செய்கிறது.
• namespaces என்பது மாறியின் பெயரை பொருளுடன் மேப்பிங் செய்வதற்கான
இடம்.
• மாறியின் வரையெல்லை என்பது அது குறிமுறையில் எங்கு புலப்படுகிறதோ
அல்லது காணப்படுகிறதோ அந்தப் பகுதியாகும்.
• LEGB விதி வரையெல்லை தேடப்பட வேண்டிய வரிசையை தீர்மானிக்கப்
பயன்படுகிறது.
• உள்ளமை வரையெல்லை நடப்பு செயற்கூறில் வரையறுக்கப்பட்ட மாறிகளைக்
குறிக்கும்.
• நிரலின் அனைத்து செயற்கூறுகளுக்கும் வெளியே அறிவிக்கப்பட்ட
மாறிகள் முழுதளாவிய மாறிகள் எனப்படும்.
• ஒரு செயற்கூறின் உள்ளே மற்றொரு செயற்கூறு அடைக்கப்பட்டிருந்தால்
அது பின்னலான செயற்கூறு எனப்படும்.
• மற்றொரு செயற்கூறு வரையறையை, தன்னுள் கொண்ட ஒரு வெளி செயற்கூறினுள்
ஒரு மாறி அறிவிக்கப்பட்டால் உள்செயற்கூறானது, வெளி செயற்கூறினுள் உள்ள மாறிகளை அணுக
முடியும். இதுவே, இணைக்கப்பட்ட வரையெல்லை (Enclosed Scope) எனப்படும்.
• நிரல் பெயர்ப்பி அல்லது தொகுப்பானை தொடங்கம் பொழுது உள்ளிணைந்த
வரையெல்லையானது நிரல் வரையெல்லையில் ஏற்கனவே கொடுக்கப்பட்ட அனைத்து பெயர்களையும் கொண்டிருக்கும்.
• நிரலின் ஒரு பகுதியே தொகுதியாகும். நிரல்கள் ஒன்று அல்லது
அதற்கு மேற்பட்ட தனித்து உருவாக்கப்பட்ட தொகுதிகளால் அமைக்கப்படுகிறது.
• ஒரு கணிப்பொறி நிரலை பல துணை நிரல்களாக பிரிக்கும் செயல்முறையே
தொகுதி நிரலாக்கம் எனப்படும்.
• அணுகல் கட்டுப்பாடு என்பது கணினி சூழலில் உள்ள வளங்களை யாரெல்லாம்
பார்வையிட மற்றும் பயன்படுத்த முடியும் என்பதை வரைமுறைப்படுத்தும் ஒரு பாதுகாப்பு தொழில்
நுட்பமாகும். இது பாதுகாப்பின் ஒரு அடிப்படைக் கருத்தாகும். பொருளுக்கான ஆபத்தை குறைக்கிறது.
•public உறுப்புகளை இனக்குழுவிற்கு வெளியே இருந்தும் அணுக முடியும்.
• protected உறுப்புகள் அந்த இனக்குழுமற்றும் அதன் துணை இனக்குழுக்களால்
அணுகப்படலாம்.
• private உறுப்புகளை இனக்குழுவிற்கு வெளியே இருந்து அணுக முடியாது.
இனக்குழுவிற்கு உள்ளே மட்டும்தான் கையாள முடியும்.
• பைத்தான் ஒரு மாறி அல்லது வழிமுறையின் பெயருக்கு முன்னே ஒற்றை
மற்றும் இரட்டை அடிக்கோடிடும் வழக்கத்தைப் பரிந்துரைக்கிறது. இதனால் private மற்றும்
protected அணுகியல்பு வரையறுப்பிகள் சில பண்புகளைப் பின்பற்றுகின்றன.
• C++ மற்றும் Java போன்ற பொருள் நோக்கு மொழிகள் private,
public, protected என்னும் சிறப்புச் சொற்களைப் பயன்படுத்தி இனக்குழு உறுப்புகளின்
அணுகலைக் கட்டுப்படுத்துகிறது.
• பைத்தானில் தானமைவாக இனக்குழுவின் அனைத்து உறுப்புகளும்
public உறுப்புகளாகவும், C++ மற்றும் Javaவில் தானமைவாக private உறுப்புகளாகவும் உள்ளன.