அலகு I
பாடம் 3
வரையெல்லை
கற்றலின்நோக்கங்கள்
இந்தப்
பாடப்பகுதியைக் கற்றபின் மாணவர்கள் அறிந்துக் கொள்வது,
•
வரையெல்லையை பற்றி புரிந்து கொள்ளல்.
•
LEGB விதியை நடைமுறைப்படுத்துதல்
•
தொகுதிகள் (Modules) பற்றி புரிந்து கொள்ளல்
• நிரலாக்க மொழியில் அணுகுதலின் கட்டுப்பாட்டை செயலாக்கம் பற்றி அறிதல்.
அறிமுகம்
வரையெல்லை என்பது மாறிகள், அளபுருக்கள் மற்றும் செயற்கூறுகளின் அணுகியல்பை நிரலின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு குறிப்பதாகும். அதாவது, நிரலின் எந்தப் பகுதியை அணுக அல்லது பயன்படுத்த முடியும் என்பதைக் குறிக்கிறது. பொதுவாக, நிரலில் வரையறுக்கப்பட்ட ஒவ்வொரு மாறியும் முழுதளாவிய வரையெல்லையைக் கொண்டுள்ளன. ஒரு முறை வரையறுக்கப்பட்டால், நிரலின் ஒவ்வாரு பகுதியும் அந்த மாறியை அணுக முடியும். ஆனால், ஒரே ஒரு வரையறைக்குள் மாறிகளின் வரையெல்லை உட்படுத்துவது சிறந்த வழிமுறை ஆகும். இதில் எதிர்பாராத விதமாக செயற்கூறுக்கு உள்ளே உள்ள மாறிகளில் ஏற்படும் மாற்றங்கள் செயற்கூறுவுக்கு வெளியே எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.