Home | 6 ஆம் வகுப்பு | 6வது அறிவியல் | மாணவர் செயல்பாடு

அளவீடுகள் | பருவம் 1 | அலகு 1 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - மாணவர் செயல்பாடு | 6th Science : Term 1 Unit 1 : Measurements

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 1 : அளவீடுகள்

மாணவர் செயல்பாடு

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 1 : அளவீடுகள் : புத்தக வினாக்கள், கேள்வி பதில்கள்

ஏன் பன்னாட்டு அலகு முறை தேவை?


செயல்பாடு 1

ஐந்து மாணவர்கள் கொண்ட ஒரு குழுவை உருவாக்கவும். அதிலுள்ள உயரத்தை ஒருவரின் மற்ற நான்கு பேர், சாண் (அ) முழம் என்ற அளவு முறையில் அளவிடவும்  உங்கள் அளவீடுகளை ஒப்பிட்டுப் பார்க்கவும். நீங்கள் கண்டறிவது என்ன? ஏன்?

இப்பொழுது நீங்கள் அனைவரும் சுவரின் அருகில் நின்றுகொண்டு உங்கள் உயரத்தைக் குறிக்கவும். அளவுகோலால் அதை அளக்கவும். என்ன வேறுபாடு ஏற்படுகிறது என ஆய்வு செய்யவும்.


செயல்பாடு 2

நோக்கம்: வளைகோட்டின் நீளத்தைக் காணல்.

தேவையான பொருள்கள்: அளவுகோல், அளவிடும் நாடா, ஒரு கம்பி மற்றும் பேனா.

செய்முறை:

* ஒரு தாளில் AB என்ற ஒரு வளைகோடு வரைக. அந்த வளைகோட்டின் மீது ஒரு கம்பியை வைக்கவும்.

* கம்பியானது வளைகோட்டின் அனைத்துப் பகுதியையும் தொடுவதை உறுதி செய்யவும்.

வளைகோட்டின் தொடக்கப் புள்ளியையும், முடிவுப் புள்ளியையும் கம்பியின் மீது குறிக்கவும்.

இப்பொழுது கம்பியை நேராக நீட்டவும். குறிக்கப்பட்ட தொடக்கப்புள்ளிக்கும், முடிவுப்புள்ளிக்கும் இடையிலான தொலைவை அளவுகோல் கொண்டு அளவிடவும்.

இதுவே வளைகோட்டின் நீளமாகும்.


ஒரு  வாழைப்பழத்தின் நீளத்தைக் கண்டறிக.



 

செயல்பாடு 3

வளைகோட்டின் நீளத்தை கவையைப் (divider) பயன்படுத்தி அளவிடுதல்.


ஒரு தாளின் மீது AB என்ற வரை. கவையின் வளைகோட்டினை இரு முனைகளை 0.5 செ.மீ அல்லது 1 செ.மீ இடைவெளி உள்ளவாறு பிரிக்க வளைகோட்டின் ஒரு முனையில் கவையை வைத்து அளவீட்டைத் தொடங்குக. அவ்வாறு மறுமுனை வரை அளந்து குறித்திடுக. வளைகோட்டின் மேல் சம அளவு பாகங்களாகப் பிரித்திடுக. குறைவாக உள்ள கடைசிப் பாகத்தை அளவுகோல் பயன்படுத்தி அளவிடுக.

வளைகோட்டின் நீளம் = (பாகங்களின் எண்ணிக்கை x ஒரு பாகத்தின் நீளம்) + மீதம் உள்ள கடைசிப் பாகத்தின் நீளம்.


செயல்பாடு 4

இரண்டு தேங்காய் ஓடுகள் மற்றும் நூல் அல்லது கம்பியைக் கொண்டு ஒரு தராசினை உருவாக்குக. தடித்த அட்டையைக் கிடைச் சட்டமாகவும், கூரிய பென்சிலை முள்ளாகவும் அமைத்து அதனை உருவாக்கவும்.

கற்றதும் பெற்றதும்:

1. கனமான பொருள் எது என்று கண்டறிக.

2. இலை, காகிதத் துண்டு போன்ற குறைந்த எடை கொண்ட பொருள்களின் எடையைக் கணக்கிடுக.


செயல்பாடு 5

உன்னுடன் படிக்கும் நான்கு அல்லது ஐந்து நண்பர்களுக்கிடையே ஒரு ஓட்டப் பந்தயத்தை நடத்தவும். தொடக்க மற்றும் இறுதிப் புள்ளிகளைக் குறித்துக்கொள். உன்னுடைய நாடித்துடிப்பைப் பயன்படுத்தி (அல்லது 1, 2, 3... என்று கணக்கிடுவதன் மூலம்) ஒவ்வொருவரும் ஓட்டப்பந்தயத் எடுத்துக்கொள்ளும் தூரத்தைக் கடக்க நேரத்தைக் கணக்கிடுக. இதிலிருந்து யார் வேகமாக ஓடினார் என்பதை அறியலாம்.


செயல்பாடு 6

முற்காலத்தில் மக்கள் பகல் நேரத்தைக் கணக்கிட, மணல் கடிகாரம் மற்றும் சூரியக்கடிகாரத்தைப் பயன்படுத்தினர். தரையில் நடப்பட்ட ஒரு குச்சியின் நிழலினைக் கொண்டும் நேரத்தைக் கணக்கிட முடியும். மணல் நிரப்பப்பட்ட, சிறிய துளை உடைய பாத்திரத்தைக் கொண்டும் காலத்தைக் கணக்கிடலாம். அந்தப் பாத்திரத்திலுள்ள மணலானது கீழே விழ ஆரம்பிக்கும். இதனைப் பயன்படுத்தி காலத்தைக் கணக்கிடலாம்.



Tags : Measurements | Term 1 Unit 1 | 6th Science அளவீடுகள் | பருவம் 1 | அலகு 1 | 6 ஆம் வகுப்பு அறிவியல்.
6th Science : Term 1 Unit 1 : Measurements : Student Activity Measurements | Term 1 Unit 1 | 6th Science in Tamil : 6th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 1 : அளவீடுகள் : மாணவர் செயல்பாடு - அளவீடுகள் | பருவம் 1 | அலகு 1 | 6 ஆம் வகுப்பு அறிவியல் : 6 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 1 : அளவீடுகள்