Home | 7 ஆம் வகுப்பு | 7வது சமூக அறிவியல் | பாடச்சுருக்கம், சொற்களஞ்சியம்

மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி இரண்டாம் பருவம் அலகு -3 | வரலாறு | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - பாடச்சுருக்கம், சொற்களஞ்சியம் | 7th Social Science : History : Term 2 Unit 3 : Rise of Marathas and Peshwas

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : இரண்டாம் பருவம் அலகு -3 : மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி

பாடச்சுருக்கம், சொற்களஞ்சியம்

மராத்தியர்களின் எழுச்சிக்கும், ஆட்சிவிரிவாக்கத்திற்குமான காரணிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

பாடச்சுருக்கம்

மராத்தியர்களின் எழுச்சிக்கும், ஆட்சிவிரிவாக்கத்திற்குமான காரணிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. 

சிவாஜியின் தொடக்கக்கால வாழ்க்கையும் அவர்மீது ஏற்படுத்தப்பட்ட தாக்கங்களும் கண்டறியப்பட்டுள்ளன. 

சிவாஜியின் படையெடுப்புகளும், பீஜப்பூர் சுல்தானை அவர் வெற்றி கொண்டதால் ஔரங்கசீப் தலையிட்டதும் விவாதிக்கப்பட்டுள்ளன. 

சிவாஜிக்கு ஔரங்கசீப்போடு ஏற்பட்ட சச்சரவுகளும் அவற்றால் தக்காணத்தில் பின்னர், நடைபெற்ற மோதல்களும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. 

சிவாஜியின் காலத்து மராத்திய நிர்வாகமுறை அடிக்கோடிட்டு காட்டப்பட்டுள்ளன. 

பேஷ்வாக்கள் உண்மையான ஆட்சியாளர்களாக மாறியதும் மராத்தியர்களின் அதிகாரம் தொடர்வதற்கு அவர்களின் பங்களிப்பும் விளக்கப்பட்டுள்ளன. 

பேஷ்வாக்களின் கீழ் நிர்வாகம் நவீனமாக்கப்பட்டதும் மூன்றாம் பானிப்பட் போருக்குப் பின்னர் மராத்தியரின் மேலாதிக்கம் முடிவுக்கு வந்ததும் விவரிக்கப்பட்டுள்ளன. 


சொற்களஞ்சியம் 

1. துதி பாடல்கள் / பாசுரங்கள் – hymns - poems in praise of God 

2. துணிச்சலான -  audaciously - boldly 

3. கோட்டை அரண் – fortresses - a strongly fortified town

4. மேலாதிக்கம் – suzerainty - the right of a country to rule over another country

5. வழங்கப்பட்ட - conferment - granting of (a title)

6. வரவழைக்கப்பட்ட - summoned - ordering the presence of

7. மனமுடைந்த – shattered - (heart) broken, broken (glass), upset




மூலாதார நூல்கள்

1. Satish Chandra, History of Medieval India 800-1700, Orient Blackswan, New Delhi, 2007. 

2. J.L. Mehta, Advanced Study in the history of Medieval India: Mughal Empire, Vol. II, 1526-1707, Sterling Publishers, 2011. 

3. Burton Stein, A History of India, Blackswell, 2010, 

4. Abraham Eraly, The Emperors of Peacock Throne, Penguin, 2007



இணையச்செயல்பாடு

மராத்திய சாம்ராஜ்யம்

ஆராய்ந்து, மதிப்பிட்டு விளையாடுவோம்.


படிநிலைகள் :

படி 1: கீழ்க்காணும் உரலி / விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி இச்செயல்பாட்டிற்கான இணையப் பக்கத்திற்க்குச் செல்லவும் மேலும் கொடுக்கப்பட்டுள்ள விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி கைப்பேசி செயலியை பதிவிறக்கம் செய்க. 

படி 2: மராத்திய சாம்ராஜ்யத்தின் காலக்கோடு, வரலாற்றுப் புகழ்மிக்க இடங்கள், இயங்குறு வரைபடங்கள், மராத்தியர்களின் கோட்டைகள் பற்றிய புகைப்படத் தொகுப்பு போன்றவற்றை நீங்கள் ஆராய்ந்து அறிந்து கொள்ளலாம். 

படி 3: இணையப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளதை தேர்வு செய்து மரத்தியர்கள் பற்றிய நம் அறிவை சுய மதிப்பீடு செய்து கொள்ளலாம்.

படி 4: 'SquareMe' என்பதைத் தேர்வு செய்து அப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைப் பயன்படுத்தி விளையாடி மகிழ்க.



மராத்திய சாம்ராஜ்யம் உரலி:

https://www.marathaempire.in/

** படங்கள் அடையாளத்திற்கு மட்டுமே. 

* தேவையெனில் Adobe Flash ஐ அனுமதிக்கவும்.



Tags : Rise of Marathas and Peshwas | Term 2 Unit 3 | History | 7th Social Science மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி இரண்டாம் பருவம் அலகு -3 | வரலாறு | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
7th Social Science : History : Term 2 Unit 3 : Rise of Marathas and Peshwas : Summary, Glossary Rise of Marathas and Peshwas | Term 2 Unit 3 | History | 7th Social Science in Tamil : 7th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : இரண்டாம் பருவம் அலகு -3 : மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி : பாடச்சுருக்கம், சொற்களஞ்சியம் - மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி இரண்டாம் பருவம் அலகு -3 | வரலாறு | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 7 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : இரண்டாம் பருவம் அலகு -3 : மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி